ஒருநாள் சிவபெருமான் ஒரு வயதான கிழவர் உருவத்தில் அழுக்கடைந்த ஆடையோடு வந்தார்
.நாயனார் அவரை எதிர்கொண்டு வணங்கி, “உம்முடைய ஆடைகொடுத்தால் அடியேன் அழுக்கு நீக்கிக் கொடுப்பேன்" என்றார்.
கிழவர் ஆடை ஒன்றை அவரிடம் கொடுத்து, "இது ஆடை கந்தையானாலும் குளிருக்கு ஆதரவானது. பொழுது போவதற்குள் இதனை அழுக்கு நீக்கித் தரவேண்டும்" என்று கூறினார்.
நாயனார் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு அதை வாங்கி வெள்ளாவியில் வைத்து கசக்கத் தொடங்கினார். அச்சமயம் வானம் இருண்டது. மழை பெய்தது. அதனால் நாயனார் தமது வாக்கு தவறும் எனவும், முதியோர் குளிரால் வருந்துவார் எனவும் கருதி தாம் ஆடை துவைக்கும் கருங்கல் பாறையில் தமது தலையை மோதத் துணிந்தார். உடனே சிவபெருமான் அந்தப் பாறையில் தோன்றிய திருக்கரத்தால் நாலனாரின் தலைபிடித்து, "அன்பனே உன் அடியார் பக்தியை மூன்று உலகிலும் பரவுமாறு செய்தோம். இனி நீ நம் உலகை வந்தடைக” என்று திருவாய்மலர்ந்தார். நாயனார் எல்லாம் வல்ல திருவருளால் திருக்கயிலை மலையை அடைந்தார்.
திருக்குறிப்பு தொண்ட நாயநார் சித்திரை குருபூஜை பசுபதீஸ்வரர் கோவில் கரூர் 24.05.2024 நடைபெற்ற காணொலி அண்பர்களின் பார்வைக்காக.