கொட்டுவது தேளின் குணம்
நல்லவராய் வாழ்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை விளக்கும் புத்தத் தத்துவக் கதைகளில் ஒன்று.
தேளின் குணம் கொட்டுவது என்று தெரிந்தும் தேளையும் அரவணைக்க நினைப்பது நல்லவனின் விதி!
ஒரு முறை ஆற்றைக்கடக்க யாரேனும் தனக்கு உதவ மாட்டார்களா என்று போவோர் வருவோரிடமெல்லாம் வேண்டி நிற்கிறது ஒரு தேள்.
தேளின் குணமறிந்து பல உயிரினிங்களும் அதை மறுத்து, தப்பித்தால் போதுமென்று கடந்து செல்லும்போது, ஆற்றைக் கடக்க முனையும் ஒரு ஆமை மட்டும் இந்தத் தேளின் மீது பரிதாபம் கொண்டு தன் மீது ஏற்றிக்கொண்டு செல்கிறது.
சிறிது தூரம் அமைதியாக வந்த தேள் சும்மா இருக்கமாட்டாமல் ஆமையின் ஓட்டின் மீது மெல்ல கொட்டிப்பார்க்கிறது.
ஆமைக்கு ஓடு என்பதால் உறைக்கவில்லை. மீண்டும், மீண்டும் கொட்டிப் பார்த்துவிட்டு, “என்னடா இந்த ஆமையிடம் ஒரு அசைவும் இல்லையே ... 4 முறைகள் கொட்டியும் எந்த அசைவும் இல்லையே என்ற ஆச்சரியத்தில், பொறுக்க முடியாமல் அந்த ஆமையிடமே கேட்டு விடுகிறது.
அதற்கு ஆமையும், ஓ நீ என்னைக் கொட்டியதே எனக்குத் தெரியாதே ... என் ஓட்டின் மீது கொட்டினால் எனக்கு வலிக்காதே ..” என்றது அப்பாவியாய்.
அதற்கு அந்த தேளும் விடாமல், அப்ப உனக்கு எங்க கொட்டினால் வலிக்கும் என்று ஆர்வமாகக் கேட்க, அந்த ஆமையும் என் கழுத்துப் பகுதியில் கொட்டினால் மட்டுமே என்னால் வலியை உணர முடியும்” என்று சொல்லியவாறே கழுத்தை உள்ளிழுக்க முனைந்தது.
அதற்குள் தேளும் ஆமையின் கழுத்தைப் பார்த்து கொட்டுவதற்கு முயல, கோபம் கொண்ட ஆமை சட்டென்று தண்ணீரில் மூழ்க, தேள் இறந்து மிதக்க ஆரம்பித்தது.
Human should always help those who are need and should not follow the scorpion.
பதிலளிநீக்கு