லேபிள்கள்

திங்கள், 7 செப்டம்பர், 2026

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

 


ஒரு புதிய கார்…

கல்லூரி நண்பர்கள்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா…

மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்…

ஆனால் ஒரு இரவு…

ஒரு சாலை…

ஒரு கண நேரத் தவறு…

8 உயிர்கள் பறிபோனதாக வெளியாகியுள்ள இந்தச் சம்பவம், 8 குடும்பங்களை வாழ்நாள் முழுவதும் அழ வைக்கும் துயரமாக மாறிவிட்டது.

இது அவர்களை குற்றம் சொல்லும் பதிவு அல்ல.

நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டிய பதிவு.

💔 பெற்றோர்களே… நாம் எங்கே தவறுகிறோம்?

பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கிறோம்.

நல்ல செல்போன் வாங்கிக் கொடுக்கிறோம்.

புதிய கார் வாங்கிக் கொடுக்கிறோம்.

பணம் கொடுக்கிறோம்.

சுற்றுலா செல்ல அனுமதிக்கிறோம்.

அவர்கள் கேட்பதையெல்லாம் முடிந்தவரை செய்து கொடுக்கிறோம்.

ஆனால்…

“வசதியை” கொடுக்கும் அளவுக்கு

“பொறுப்பை” கற்றுக் கொடுக்கிறோமா?

அதுதான் இன்று நாம் சிந்திக்க வேண்டிய மிகப்பெரிய கேள்வி.

🚗 “என் பிள்ளைக்கு கார் ஓட்டத் தெரியும்…”

என்று சொல்வதற்கு முன்,

“அவனுக்கு இரவு நேரத்தில் நீண்ட தூரம் பாதுகாப்பாக ஓட்டும் அனுபவம் இருக்கிறதா?”

என்று கேளுங்கள்.

“அவன் வேகமாக ஓட்டுவான்… திறமையானவன்” என்று பெருமைப்படுவதற்கு முன்,

“அவனுக்கு வேகத்தைக் கட்டுப்படுத்தத் தெரியுமா?”

என்று கேளுங்கள்.

🌙 இரவு நேர ஓட்டுதல் விளையாட்டு அல்ல!

இருட்டில் சாலையோரத்தில் நிற்கும் லாரி தெரியாமல் போகலாம்.

எதிரே வரும் வாகனத்தின் வெளிச்சம் கண்களை மறைக்கலாம்.

தூக்கம் வரலாம்.

கவனம் சிதறலாம்.

சாலையின் நிலை மாறலாம்.

ஒரு சிறிய தவறு…

ஒரு குடும்பத்தின் வாழ்நாள் துயரமாக மாறிவிடலாம்.

👬 நண்பர்களே… “சவால்” வேண்டாம்!

“இன்னும் வேகமாக போ…”

“சீக்கிரம் போய்விடலாம்…”

“எதுவும் ஆகாது…”

என்று ஓட்டுநரிடம் சொல்லும் நண்பர்கள், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

அது வெறும் வார்த்தை அல்ல…

ஓட்டுநரின் முடிவை மாற்றக்கூடிய அழுத்தம்.

நண்பன் வேகமாக ஓட்டினால் கைதட்டி உற்சாகப்படுத்தாதீர்கள்.

“மெதுவாகப் போ… நம்மை வீட்டில் சிலர் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லுங்கள்.

அதுதான் உண்மையான நட்பு.

❤️ பெற்றோர்களே… இந்த 6 விஷயங்களை பிள்ளைகளிடம் சொல்லுங்கள்:

✅ சீட் பெல்ட் இல்லாமல் காரில் பயணம் இல்லை.

✅ செல்போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.

✅ வேகமாக ஓட்டுவது திறமை அல்ல.

✅ தூக்கம் வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும்.

✅ இரவு நேர நீண்ட பயணங்களில் போதுமான இடைவேளை அவசியம்.

✅நண்பர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கக்கூடாது.

👨‍👩‍👧‍👦 ஒரு முக்கியமான விஷயம்…

குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு கார் அல்ல…

அந்தக் காரில் பாதுகாப்பாகச் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பும் பழக்கம்தான்!

குழந்தையை செல்லமாக வளர்ப்பது தவறல்ல.

ஆனால்…

செல்லத்துடன் பொறுப்பையும் சேர்த்து வளர்ப்போம்.

வசதியுடன் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுப்போம்.

சுதந்திரத்துடன் பொறுப்பையும் கொடுப்போம்.

🙏 கடைசியாக ஒரு வேண்டுகோள்…

இன்று உங்கள் மகன் அல்லது மகள் கார் எடுத்துக் கொண்டு வெளியே செல்லும்போது,

“எப்போது வருவாய்?” என்று மட்டும் கேட்காதீர்கள்.

அதற்கு முன்…

“பத்திரமாக ஓட்டு.”

“வேகம் வேண்டாம்.”

“தூக்கம் வந்தால் நிறுத்திவிடு.”

“செல்போன் எடுக்காதே.”

“எங்களைப் பார்க்க நீ திரும்பி வர வேண்டும்.”

என்று சொல்லுங்கள்.

ஏனென்றால்…

நாம் அனுப்புவது காரை அல்ல…

நம்முடைய உயிரின் ஒரு பகுதியைத்தான் வெளியே அனுப்புகிறோம்.

ஒரு விபத்து நடந்த பிறகு அழுவதற்குப் பதிலாக,

விபத்து நடக்காமல் இருக்க இன்று முதலே பேசுவோம்.

வேகத்தைவிட வாழ்க்கை முக்கியம்.

காரைவிட குடும்பம் முக்கியம்.

சுற்றுலாவைவிட வீடு திரும்புவது முக்கியம்.

🚗 “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

இந்த ஒரு செய்தி ஒரு பெற்றோரின் மனதில் பதிந்தாலும், ஒரு இளைஞரின் உயிரைக் காப்பாற்றினாலும்… இந்தப் பதிவு வெற்றி பெற்றுவிட்டது.

🙏 படித்துவிட்டு கடந்து செல்லாதீர்கள்.

ஒரு பெற்றோருக்காவது பகிருங்கள்.

ஒரு இளைஞருக்காவது அனுப்புங்கள்.


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

சொர்க்கமும், நரகமும், நாமும்..

 


சொர்க்கமும் 

             நரகமும் 

                   நாமும்... 


               🌸 🌸 🌸


 சொர்க்கத்தில் இடம்

   கிடைக்க வேண்டும்

     என்பதற்காக 


மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். 


          🟠🟠


சிலர் விரதம்

   இருக்கிறார்கள்,


 சிலர் தானம்   

       செய்கிறார்கள், 


சிலர் புனித யாத்திரை

     செல்கிறார்கள், 


சிலர் இறைவனிடம் 

   நேர்த்திக்கடன்   

     செய்கிறார்கள்...


                🔵🔵


புதிதாக கட்டப்பட்ட

ஒரு குடியிருப்பில் 

ஒரு சிறிய வீட்டைப் பெற புள்ளிகள் சேகரிப்பது போலவே சொர்க்கத்திற்கும் தகுதி பெற முயல்கிறோம்..


            🟢🟢


ஆனால் எனக்கு 

    ஒரு கேள்வி...


ஒருவேளை நாம் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ?


காலையில் விழித்தவுடன் சுற்றிலும் ஒரு முறை கவனமாகப் பாருங்கள்...


ஒரு சுவிட்சை அழுத்தினால் விளக்கு எரிகிறது. 


இன்னொரு சுவிட்சை அழுத்தினால் விசிறி சுழல்கிறது..


மற்றொன்றை அழுத்தினால் குளிர்சாதன வசதி இயங்குகிறது..


குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது.


அடுப்பை ஏற்றினால் சில நிமிடங்களில் உணவு தயாராகிவிடுகிறது..


கைப்பேசியை எடுத்தால் 

உலகின் தகவல்கள் அனைத்தும் நம்கைகளில்..


அமெரிக்காவில் இருக்கும் நண்பரின் முகத்தைக்கூட சில நொடிகளில் பார்த்துப் பேச முடிகிறது..


இவை அனைத்தையும் நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். 


              🟣🟣


இவை வாழ்க்கையின் அரிய வசதிகள் அல்ல;


நமக்குப் பிறப்புரிமை என்றே நினைக்கிறோம்.


               🟠🟠


இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மன்னரை இன்று நம் வீட்டிற்கு அழைத்து வந்தால், அவர் மீண்டும் வெளியே செல்லவே விரும்ப மாட்டார்.


"இது என்ன?"  

     "சுடுநீர்."

"இது?" "      

    " குளிர்ந்தகாற்று."


"இது?" 

"உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் தகவல்கள்."


"இது?" — 

"பத்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சேரும் உணவு."


அப்போது 

  அந்த மன்னர்  

    சொல்லக்கூடும்:..


"நான் வாழ்நாள் முழுவதும் ஆட்சி செய்தேன். 

போர் புரிந்து வெற்றி பெற்று உள்ளேன்.


 செல்வங்களைக்

      குவித்தேன். .


ஆனால் இத்தகைய வசதிகளை ஒருபோதும் அனுபவிக்கவில்லை."


           🔵🔵


உண்மையில், இன்றைய ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை, 

அக்கால மன்னர்களின் வாழ்க்கையை விடப் 

பல வகைகளில் வசதியானதாக உள்ளது..


ஆனால் விந்தை

   என்ன வென்றால்...


இவற்றில் எதையும் நாம் உணர்ந்து மகிழ்வதில்லை.


ஏனெனில் மனிதன் ஏற்கனவே பெற்றிருப்பதன் மதிப்பை அரிதாகவே உணர்கிறான்.


            🟣🟣


ஏசி ஓடிக்கொண்டிருக்கிறது; 

மகிழ்ச்சி இல்லை.


அது பழுதாகிவிட்டால்  

  மட்டும் வருத்தம்.


கைப்பேசி இருக்கிறது;  மகிழ்ச்சி இல்லை.


இணையம் செயலிழந்தால் உலகமே முடிந்து விட்டதுபோல் உணர்கிறோம்..


வீடு இருக்கிறது;

  மகிழ்ச்சி இல்லை.


அடுத்த வீட்டுக்காரரின் வீடு பெரியதாக இருக்கிறது என்பதால் வருத்தம்.


கார் இருக்கிறது;

மகிழ்ச்சி இல்லை.


மற்றொருவரிடம் இன்னும் பெரிய கார் இருப்பதால் மனக்குறை.


           🟢🟢


தன்னுடைய

   சொர்க்கத்தில்

      நின்றபடியே,


மற்றவரின் சொர்க்கத்துடன் ஒப்பிட்டு 

தன்னைத் தானே துன்பப்படுத்திக் கொள்கிறான் மனிதன்.


        🟣🟣


ஆனால் 

இதே பூமியில் இன்னொரு உண்மையும் இருக்கிறது.


இன்றும் கோடிக்கணக்கான மக்கள் குடிநீருக்காக வரிசையில் நிற்கிறார்கள்.


பலருக்கு நிரந்தரமான வீடு இல்லை.


இரு வேளை உணவு கிடைக்குமா என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள்.


பல குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில்லை.


சிலருக்குப் போதுமான உடைகள் கூட இல்லை.


             🟠🟠


"நாம் சாதாரணம் என்று நினைப்பவை, பலரின் கனவுகள்."


"நாம் குழாயைத் திறந்தால் தண்ணீர் வருகிறது.


அவர்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள்."


"நாம் ஏசி ரிமோட் கிடைக்கவில்லை என்று கோபப்படுகிறோம்.


அவர்கள் மர நிழலைத் தேடி அலைகிறார்கள்."


"நாம் உணவுக் கட்டுப்பாடு பற்றி யோசிக்கிறோம்.


அவர்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்று கவலைப்படுகிறார்கள்.   

      

            🟢🟢


அதனால் தான் எனக்குத் தோன்றுகிறது...


"சொர்க்கமும் நரகமும் மரணத்திற்குப் பிறகு இருக்கும் இடங்கள் அல்ல."


 "அவை இங்கேயே

          இருக்கின்றன.


அதே நகரத்தில்.

அதே கிராமத்தில்.

சில நேரங்களில் 

அதே தெருவில்கூட."


            🔵🔵


"ஒரு வீட்டில் புதிய கைப்பேசி மெதுவாக இயங்குகிறது என்று ஒரு சிறுவன் வருத்தப்படுகிறான்.


எதிர் வீட்டில், கைப்பேசி இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கூட கலந்து கொள்ள முடியாமல் இன்னொரு சிறுவன் தவிக்கிறான்."


ஒருவர் சுடுநீர் தாமதமாக வந்தது என்று கோபப்படுகிறார்.


மற்றொருவர் குளிக்கத் தண்ணீர் கிடைத்ததே பெரும் மகிழ்ச்சி என்று நினைக்கிறார்.


வித்தியாசம் சூழ்நிலைகளில் மட்டும் இல்லை..


பார்க்கும் பார்வையிலும் இருக்கிறது..


          🟠🟠


சிலர் நரகத்திலும் சிரித்துக் கொண்டே வாழ்கிறார்கள்.


சிலர் சொர்க்கத்திலேயே குறை கூறிக் கொண்டே வாழ்கிறார்கள்.


           🟢🟢


மனிதனுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு..


தன்னிடம் இல்லாதவற்றின் பட்டியலை தினமும் தயாரிக்கிறான்.


ஆனால் ஏற்கனவே இருப்பவற்றின் பட்டியலை ஒருபோதும் எழுதுவதில்லை..


               🟣🟣


ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்லும் முன் பின் வரும் ஐந்து விஷயங்களை மட்டும் எழுதினால்...


"இன்று நான்

 சுவாசிக்க முடிகிறது."


"இன்று எனக்குக்

  குடிநீர் கிடைத்தது".


"இன்று எனக்கு 

   உணவு கிடைத்தது."


"இன்று நான் பாதுகாப்பாகத் தூங்க ஒரு இடம் இருக்கிறது."



"இன்று என் அன்புக்குரியவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்."


என்று  இப்படி 

   எழுதிப் பாருங்கள்..


வாழ்க்கையைப் பார்க்கும் 

 நம் பார்வையே

     மாறிவிடலாம்...


           🟣🟣


நாம் சொர்க்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.


ஆனால் சொர்க்கம்

  என்பது ஒரு இடமல்ல


 அது ஒரு

     விழிப்புணர்வு.!


நரகமும் 

     ஒரு இடமல்ல.!


நமக்குக் கிடைத்திருப்பவற்றின் மதிப்பை மறந்துவிடும்

மனநிலையே நரகம்.!


           ☘️☘️


இருப்பதற்கு 

நன்றி கூறும் 

மனமே சொர்க்கம்..!


மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை யாரும் உறுதியாக அறியவில்லை..


ஆனால் 

  உயிருடன் இருக்கும் 

     இந்த நேரத்தில், 


வாழ ஓர் அழகான பூமி, சுவாசிக்க காற்று, குடிக்க தண்ணீர், உண்ண உணவு, அன்பு செலுத்தும் மனிதர்கள், ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைக்கும்

எண்ணற்ற வசதிகள்..


இவை அனைத்தும் இருந்தும் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம்..


           🟠🟠


ஒருவேளை கடவுள் மேலிருந்து புன்னகைத்தபடி சொல்லிக்கொண்டிருப்பார்:


"உன்னை சொர்க்கத்திற்கே அனுப்பினேன்...


அங்கேயும் நீ குறை கூறும் அலுவலகம் ஒன்றைத் தொடங்கிவிட்டாயே!"


             🙏🙏


இது நன்றியுணர்வு, திருப்தி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை


ஆழமாக சிந்திக்க வைக்கும் 

அழகான கட்டுரை.


           🟢🟢 


வாழ்வின் மீதான

பார்வையை விழிப்புணர்வோடு

பார்க்கத் தொடங்குவோமே.🙏🙏🙏🏻

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

இதுவும்கடந்துபோகும்

 


இதுவும்கடந்துபோகும் 


நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.


எத்தனை வெற்றிகள் , 

எத்தனை தோல்விகள் , 

எத்தனை மகிழ்ச்சிகள் , 

எத்தனை துக்கங்கள் ...


எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.


வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?


வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?


எத்தனை நண்பர்கள் , 

எத்தனை பகைவர்கள் , 

எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?


வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. 

ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?


இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல. 

அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.


*வெற்றிகள் கிடைக்கும் போது.,


இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.


*தோல்விகள் தழுவும் போது..,


இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட மாட்டீர்கள்.


*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,


இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.


*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,


இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.


*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,


இதுவும்கடந்துபோகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.


வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,


அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்..

சனி, 29 ஆகஸ்ட், 2026

நவீன ஞான மொழிகள் – 10

 

நவீன ஞான மொழிகள் – 10

கெட்டவனுக்குக் கூட நன்மை செய், அது தப்பல்ல,
ஆனால், நல்லவனுக்கு மட்டும் கெடுதல் செய்யாதே……
அது தர்மம் அல்ல!

xxx

அன்று வயதைப் பார்த்து வந்தது மரியாதை,
இன்று வசதியைப் பார்த்துத் தான் வருகிறது.

xxxx

தேங்காய் உடைக்கிறார்கள், வாழ்க்கை சிதறிப்போகாமலிருக்க,
தேங்காய் பொறுக்குகிறார்கள், வாழ்க்கை சிதறிப்போனவரகள்…….

xxx

VALLUVAR TEMPLE, MYLAPRE

இதுவே உண்மை
FEMALE ல்ல MALE இருக்கு,
WOMAN ல்ல MAN இருக்கு,
SHE லே HE இருக்கு
MRS லே MR இருக்கு………..
xxx

உடம்புல வலி இருந்தா MOVE தடவலாம், மனசுல வலி இருந்தா
அந்த இடத்தை விட்டு MOVE ஆயிடு………
xxx

கல்யாணத்திற்கும், ஜல்லி கட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???
வளர்த்தவன் எஸ்கேப் ஆகி விடுவான், அடக்க வரவன், மாட்டிக்குவான்!!!!
xxx

நம்மால் யாரையும் காயப்படுத்தாமல் வாழ முடியும்,
யாரிடமும் காயப்படாமல் தான் வாழ முடிவதில்லை……..

xxxx

எந்த ஒரு கண்ணாடியும் ஒரு பெண்ணை அழகில்லை என்று
சொன்னதில்லை !!!

xxxx

மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது……
xxxx

பணம் சம்பாதிப்பது என்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல
செலவழிப்பது என்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல !!!
xxxx

உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு
உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து காட்டு!!!
xxx

காது குத்திய அடையாளமும், மூக்கு குத்தின அடையாளமும்
தெரிந்து விடுகின்றன.
ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை!!!
xxxx

மௌனத்தின் பெருமை

சும்மா இருத்தல் சுகம்

மோனமென்பது ஞான வரம்பு

பேச்சு என்பது வெள்ளி
மௌனம் என்பது தங்கம்

xxxx

காதைக் கொடு வாயைக் கொடுக்காதே!!!

முட்டாளுக்கு நாக்கால் ஆபத்து,
புத்திசாலிக்கு மௌனத்தால் புகழ்!!!

மௌனத்தை யாரும் எழுதிக் கொடுக்க முடியாது !!!

xxxx

நீ உமிழ்ந்த தீ உன் மடியிலேயே விழும்…….

மௌனம் சர்வார்த்த சாதகம்

xxx

பழக வேண்டியது – முதுகுத் தண்டை நேராக வைத்தல்
மறக்க வேண்டியது – காபி, டீ, சிகரட், மது
செய்ய வேண்டியது – சர்வாங்காசனம்
செய்யக்கூடாதது – கெட்ட சகவாசம்
குறைக்க வேண்டியது – அதிக தூக்கம்
கூடவே கூடாதது – பகலில் தூக்கம்
துலக்க வேண்டியது – பகலிலும், இரவிலும் பற்களை
உடுக்க வேண்டியது – எளிய உடை
சேர்க்க வேண்டியது – ராகியும் கம்பும்

xxxx

கடவுளுக்கு கொடுத்து பக்தனாவதை விட
ஏழைக்குக் கொடுத்து இறைவனாகலாம்!!!

xxx

இறந்தவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட
இல்லாதவர்க்கு இலை வைத்து சோறு போடுங்கள்……..

xxxx

VALLUVAR, VASUKI

அந்தக் காலத்தில் திரு வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா
வாளி அப்படியே நிற்கும்,
இப்ப கூப்பிட்டா வாசுகி அப்படியே நிற்பா, வாளி பறந்து வரும் !!!

xxxx

காசு ஆணா??? பெண்ணா???
பொண்ணுதான் சார்…..
எப்படி???
தலைக்கு பின்னால் பூ இருக்கே !!!
xxxx

நீ முதலில் திருந்து, அதுவே உனக்கு மருந்து !!!

வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்

xxxx

உலகில் ஏழு பாவங்கள்

1.உழைப்பில்லாத சொத்து
2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை
3.ஒழுக்கமில்லாத கல்வி
4.நாணயம் இல்லாத வார்த்தை
5.மனித நேயமில்லாத அறிவியல்
6.தியாகமில்லாத பிரார்த்தனை
7.கொள்கையில்லாத அரசியல்

Xxxx

வருமானம் என்பது தண்ணீர் போல
ஒரே இடத்திலிருந்து தான் வருது
செலவு எனபது வியர்வை போல,
எல்லா இடத்திலேர்ந்தும் வருது……

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

ஒரு தாயின் முந்தானையை ஜீன்ஸில் எங்கே காண்பீர்கள்?

 


ஒரு தாயின் முந்தானையை ஜீன்ஸில் எங்கே காண்பீர்கள்? 🤔


 பள்ளியில், ஆசிரியர் மாணவர்களை  "தாயின் முந்தானை” பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். 


ஒரு மாணவன் மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றை எழுதியிருந்தான், அது உங்கள் இதயத்தை உணர்ச்சிகளால் நிரப்பக்கூடியது…


மதிப்பிற்குரிய ஆசிரியரே,


ஒரு தாயின் முந்தானை என்பது வெறும் ஒரு துணி மட்டுமல்ல; அது ஒரு தாயின் கண்ணியமும் கருணையும் ஆகும்.


அடுப்பிலிருந்து சூடான பாத்திரங்களை எடுக்க தாயின் முந்தானை பயன்படுத்தப்பட்டது. அது தன் குழந்தைகளின் வியர்வையையும் கண்ணீரையும் துடைத்தது, அழுக்கான முகங்களையும், காதுகளையும், சின்னஞ்சிறு கைகளையும் சுத்தம் செய்தது. 


சாப்பிட்ட பிறகு, தாயின் முந்தானையால் முகத்தைத் துடைப்பதில் ஒரு தனி ஆறுதல் இருந்தது. 


எங்கள் கண்களில் ஏதாவது விழுந்தால், அம்மா முந்தானையைச் சுருட்டி, தன் மூச்சால் அதை மெதுவாகச் சூடாக்கி, கண்ணின் மீது வைப்பார் எப்படியோ, வலி ​​உடனடியாக மறைந்துவிடும். 


தாயின் மடியில் உறங்கும் குழந்தைகளுக்கு, அவளது மடி மென்மையான படுக்கையாகவும், அவளது முந்தானை ஆறுதலான போர்வையாகவும் ஆனது.


அந்நியர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம், குழந்தை பாதுகாப்பிற்காகத் தாயின் முந்தானைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும். குழந்தை கூச்சப்படும்போதெல்லாம், தாயின் முந்தானையால் தன் முகத்தை மூடிக்கொள்ளும்.


குழந்தை வெளியே காலடி எடுத்து வைக்கும்போது, ​​அந்த முந்தானையைப் பிடித்துக்கொள்ளும்; அதுவே அதன் வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் ஆனது.


குழந்தை தாயின் முந்தானையைப் பிடித்துக்கொண்டிருக்கும் வரை, இந்த முழு உலகமும் பாதுகாப்பாகத் தன் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது போன்ற உணர்வை அது பெறும். 


குளிர்காலத்தில், குளிரிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க, தாய் தன் முந்தானையால் எல்லாப் பக்கங்களிலிருந்தும் போர்த்துவாள். மேலும், கனமழையின்போது, ​​அதே முந்தானை குழந்தையின் முகத்தை மறைக்கும் ஒரு குடையாக மாறும். தாயின் முந்தானை, கைகளைத் துடைக்க ஒரு துண்டு போலவும் பயன்படுத்தப்பட்டது. 


மரங்களின் அடியிலிருந்து உதிர்ந்த பூக்களையும் பழங்களையும் அது சுமந்து சென்றது. சில சமயங்களில், தானியங்கள், காணிக்கைகள் அல்லது பிரசாதம் அதில் சேகரிக்கப்பட்டன. 


வீட்டுப் பொருட்களைத் தூசி தட்டிச் சுத்தம் செய்யவும் அது பயன்படுத்தப்பட்டது.


ஏதாவது தொலைந்து போனால், அது விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அம்மா தன் முந்தானையில் ஒரு முடிச்சுப் போடுவார் — எப்படியோ, அது பெரும்பாலும் கிடைத்துவிடும்.


அம்மாவின் முந்தானையில் உள்ள அந்த முடிச்சு, நகரும் வங்கி அல்லது லாக்கர் போல இருந்தது; அதிர்ஷ்டம் குழந்தைக்குச் சாதகமாக இருந்தால், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில நாணயங்களும் மாயமாகத் தோன்றும்.


அம்மாவின் முந்தானை வெறும் துணி மட்டுமல்ல அது ஒரு மாய உணர்வு, ஒரு மனவெழுச்சி, ஒரு புகலிடம், மற்றும் அன்பின் உலகம். 


இன்றைய தலைமுறை அதன் அரவணைப்பையும் அர்த்தத்தையும் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் போகலாம். 


இப்போது, ​​அம்மாக்கள் ஜீன்ஸ் அணியும்போது... அந்த "முந்தானை" எங்கிருந்து வரும்? 🙏 


அன்பு, அரவணைப்பு, தியாகம் மற்றும் எண்ணற்ற குழந்தைப்பருவ நினைவுகளைத் தன் முந்தானையில் சுமந்த ஒவ்வொரு அம்மாவுக்கும் அர்ப்பணம். 🙏 


படித்ததில் பிடித்தது பலருடன் பகிர்ந்து அகமகிழ்கிறோம் நன்று 🌹

PFBR அணு உலை தனது முதல் 'கிரிட்டிக்காலிட்டி' (Criticality - தடையற்ற தொடர் அணுர்வினை) நிலையை அடைந்து வெற்றி பெற்றது

 


உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நம்ம கல்பாக்கம்: ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம்! 


நாம் வழக்கமாக சினிமா நடிகர்களின் பட வெளியீட்டையோ அல்லது கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளையோ தான் சமூக வலைத்தளங்களில் கொண்டாடித் தீர்க்கிறோம். ஆனால், நம் எதிர்காலத்தையே மாற்றப் போகும் ஒரு மாபெரும் நிஜ மாயாஜாலம், சென்னையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஆம்! கடந்த வாரம், ஜூன் 26, 2026 அன்று, இந்தியா உலக அறிவியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளது.


அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் பல கோடிகளைச் செலவழித்து, "இது எங்களுக்கு சாத்தியமில்லை" என்று கைவிட்ட ஒரு அதிநவீன அணுசக்தித் தொழில்நுட்பத்தை, நமது இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தச் சாதனை வெறும் இயந்திரங்களின் வெற்றியல்ல; இது இந்தியாவின் பெருமை, நமது விஞ்ஞானிகளின் பல தசாப்த காலத் தவம்!


இதைப் பற்றி ஒவ்வொரு சாமானியனும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? இது நமது குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்புக்கான உத்தரவாதம். வாருங்கள், கல்பாக்கத்தில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.


அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்: PFBR⚛️(Prototype Fast Breeder Reactor)


கடந்த ஏப்ரல் 6, 2026 அன்று, கல்பாக்கத்தில் உள்ள PFBR அணு உலை தனது முதல் 'கிரிட்டிக்காலிட்டி' (Criticality - தடையற்ற தொடர் அணுர்வினை) நிலையை அடைந்து வெற்றி பெற்றது. இது உலகளாவிய அளவில் ஒரு மாபெரும் சாதனை.


இது ஏன் அவ்வளவு சிறப்பு?

சாதாரண அணு உலைகளை ஒரு விறகு அடுப்பு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் ஒரு கிலோ விறகை வைத்தால், அது எரிந்து வெப்பத்தைக் கொடுத்துவிட்டு சாம்பலாக மாறிவிடும். ஆனால், கல்பாக்கத்தில் நமது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த 'Fast Breeder Reactor' என்பது ஒரு அட்சய பாத்திர அடுப்பு! இதில் நீங்கள் ஒரு கிலோ எரிபொருளைப் போட்டால், அது உங்களுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுப்பது மட்டுமில்லாமல், மீதமாக 1.2 கிலோ புதிய எரிபொருளை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும். அதாவது, தான் பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை இது உற்பத்தி செய்யும் (Breeding). கேட்பதற்கே மாயாஜாலம் போல இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை!


நம் மண்ணின் வளம், நம் கையில் (தோரியம் கனவு):

இந்தியாவில் யுரேனியம் (Uranium) என்ற அணு எரிபொருள் மிகக் குறைவு. நாம் வெளிநாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். ஆனால், கேரளா மற்றும் தமிழகத்தின் கடற்கரை மணலில் 'தோரியம்' (Thorium) என்ற கனிமம் கொட்டிக் கிடக்கிறது. உலகத்திலேயே அதிக தோரியம் வளத்தைக் கொண்ட நாடு இந்தியாதான்!


டாக்டர் ஹோமி பாபா மற்றும் அப்துல் கலாம் கண்ட கனவு இதுதான்: "நமது சொந்த மண்ணில் உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும்." கல்பாக்கத்தின் இந்த வெற்றி, அந்த மாபெரும் கனவின் வாசற்படியைத் திறந்து வைத்துள்ளது. இனி மின்சாரத்திற்காக எந்த ஒரு வெளிநாட்டிற்கும் நாம் கையேந்த வேண்டியதில்லை. அடுத்த 300 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ள முடியும்!


உலகை வியக்க வைத்த "பசுமை ஹைட்ரஜன்" சாதனை (Green Hydrogen)


இப்போது ஜூன் 26-ஆம் தேதி நடந்த அந்த மாபெரும் மாயாஜாலத்திற்கு வருவோம். கல்பாக்கத்தில் உலகின் முதல் அணு-ஆற்றல் உதவியுடன் செயல்படும் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.


ஹைட்ரஜன் ஏன் முக்கியம்?

எதிர்காலத்தின் எரிபொருள் ஹைட்ரஜன்தான். பெட்ரோல், டீசல், நிலக்கரி என அனைத்தையும் எரித்தால் கரும்புகை (கார்பன்) வரும், சுற்றுச்சூழல் சீரழியும். ஆனால், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தினால் புகைக்குப் பதிலாகக் கடைசியாக வருவது சுத்தமான 'தண்ணீர்' மட்டுமே!


ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. இந்த நல்ல ஹைட்ரஜனைத் தயாரிக்க, தண்ணீரை (H2O) பிரித்து எடுக்க வேண்டும். அப்படிப் பிரிக்க, மிகப்பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படும். அந்த மின்சாரத்தைத் தயாரிக்க மீண்டும் நிலக்கரியை எரிக்க வேண்டும்! இது "சுத்தமான வீட்டிற்குள் குப்பையைக் கொண்டு வருவது" போல முரண்பாடாக இருந்தது.


நமது விஞ்ஞானிகளின் அசாதாரண தீர்வு:

கல்பாக்கம் IGCAR (இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான வழியைக் கண்டுபிடித்தனர். அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் போது, வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை வீணாக்காமல் நேரடியாகப் பயன்படுத்தி, 'காப்பர்-குளோரின் சுழற்சி' (Copper-Chlorine cycle) என்ற முறையில் தண்ணீரைச் சூடாக்கி, பிரித்து ஹைட்ரஜனை உருவாக்கியுள்ளனர்.


அதாவது, எந்த ஒரு மாசும் இல்லாமல், வளிமண்டலத்தில் ஒரு துளி கார்பனைக் கூட வெளியிடாமல், உலகின் மிகச் சுத்தமான ஹைட்ரஜனை அணுசக்தி மூலம் தயாரித்து இந்தியா உலகிற்கே வழிகாட்டியுள்ளது. இதைப் பார்த்த பன்னாட்டு விஞ்ஞானிகள் இன்று வியப்பில் உறைந்து போயிருக்கிறார்கள்.


நெருப்புடன்  விளையாடிய நிசப்த நாயகர்கள்


இந்தச் சாதனைகள் ஒரே இரவில் நடந்துவிடவில்லை. சாதாரண அணு உலைகளில் வெப்பத்தைக் குறைக்கத் தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த Fast Breeder அணு உலையில் வெப்பத்தைக் குறைக்க 'திரவ சோடியம்' (Liquid Sodium) என்ற உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும்.


சோடியம் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? அது காற்றோடு கலந்தால் தீப்பிடித்து எரியும்; தண்ணீரோடு கலந்தால் வெடித்துச் சிதறும்! இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான திரவ உலோகத்தைக் கையாளுவது என்பது கண்கட்டி வித்தையை விடக் கடினமானது. பல வெளிநாடுகள் இந்த ஆபத்தைக் கண்டு பயந்துதான் தங்கள் ஆராய்ச்சியை மூடிவிட்டன.


ஆனால் நமது இந்திய விஞ்ஞானிகள்? கடந்த பல தசாப்தங்களாக, இரவும் பகலுமாகச் சிந்தித்து, பாதுகாப்பான தொழில்நுட்பங்களை உள்ளூரிலேயே (Indigenous Technology) உருவாக்கி, இந்தத் திரவ சோடியத்தை ஒரு குழந்தையைப் போலக் கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள். இதற்காகத் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த அந்தப் பெயர் தெரியாத விஞ்ஞானிகளின் பாதங்களை நாம் ஒவ்வொருவரும் தொட்டு வணங்க வேண்டும்.


சாமானியர்களான நமக்கு இதனால் என்ன பயன்?


>>> குறைந்த விலையில் மின்சாரம்: இனி நிலக்கரித் தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடமிருக்காது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தடையற்ற, மலிவான மின்சாரம் கிடைக்கும்.


>>> பொருளாதார வளர்ச்சி: வளைகுடா நாடுகளில் போர் நடந்தால் பெட்ரோல் விலை உயரும் என்று நாம் இனி பயப்படத் தேவையில்லை. நமது சொந்த ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் நமது தொழிற்சாலைகள் (எஃகு, உரம் போன்றவை) இயங்கும்.

>>> சுத்தமான காற்று: கார்பன் வெளியேற்றம் முற்றிலும் குறைந்து, நமது அடுத்த தலைமுறைக் குழந்தைகள் மாசற்ற, தூய்மையான காற்றைச் சுவாசிப்பார்கள்.


>>> தேசியப் பாதுகாப்பு: எரிசக்தியில் நாம் யாரையும் சாராமல் தற்சார்பு (Self-reliance) அடையும் போது, உலக அரங்கில் இந்தியாவின் வல்லரசுப் பிடி இன்னும் பலமடங்கு இறுகும்.


நெஞ்சை நிமிர்த்திப் பகிருங்கள்!


கல்பாக்கம் என்பது இனி வெறும் ஊரின் பெயரல்ல; அது இந்தியாவின் அறிவியல் தன்னம்பிக்கையின் அடையாளம். எத்தனையோ தடைகள், தொழில்நுட்பத் தடைகள், வெளிநாடுகளின் விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து, இன்று அணுசக்தி மற்றும் பசுமை ஆற்றல் துறையில் இந்தியா உலகின் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது.


விளையாட்டு வெற்றிகளைக் கொண்டாடும் நாம், நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகும் இந்த மாபெரும் அறிவியல் வெற்றியையும் கொண்டாடுவோம். இந்தச் செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும் இதைப் பகிருங்கள். உங்கள் குழந்தைகளிடம் கல்பாக்கம் விஞ்ஞானிகளின் இந்த வெற்றியை பெருமையுடன் கூறுங்கள். "இந்தியாவால் முடியுமா?" என்று கேட்ட உலகத்தின் முன், "இந்தியாவால் மட்டுமே முடியும்!" என்று நிரூபித்த அந்த நெஞ்சங்களுக்கு நமது ராயல் சல்யூட்!

‘நண்பர்களின் பற்றாக்குறை’



 ‘நண்பர்களின் பற்றாக்குறை’ - இதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

இன்று உலகத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ‘நண்பர்களின் பற்றாக்குறை’. நம்புவது கடினமாக இருந்தாலும் இது உண்மை.


புள்ளிவரங்கள் என்ன சொல்கின்றன?  

1960-ல் ஒரு நபருக்கு சராசரியாக 100 நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். 1990-ல் அந்த எண்ணிக்கை 50-ஆக குறைந்தது. 2020-ல் அது வெறும் 10-ஆக வந்துவிட்டது.


இப்போது? ஒரு உண்மையான நண்பர் கிடைப்பதே கஷ்டமாகிவிட்டது. சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் 12% பேருக்கு மனம் விட்டுப் பேச ஒரு நண்பர் கூட இல்லையாம்.


ஒரு காலத்தில் நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் நண்பர்களுடன் நேரில் செலவிட்டோம். இப்போது அது 35 நிமிடங்களாக சுருங்கிவிட்டது. ஸ்கிரீனுக்கு முன்னால் செலவிடும் நேரம் அதிகமானது, மனம் விட்டுப் பேசும் ஆட்கள் குறைந்துவிட்டார்கள்.


நட்பு = வாழ்க்கைக்கான இன்சூரன்ஸ்.  

நல்ல நண்பர்கள் உண்மையிலேயே ‘லைஃப் இன்சூரன்ஸ்’ மாதிரி. ஏனென்றால்


1. ஆரோக்கியத்திற்கு நல்லது: நண்பர்கள் இல்லாத தனிமை, நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் குடிப்பதற்கு சமம் என்று ஆராய்சிகள் சொல்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு அவர்களை ஆட்கொள்கிறது.

2. இதயத்திற்கு உறுதி: நல்ல நண்பர்கள் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

3. சுறுசுறுப்பான வாழ்கை: நண்பர்களுடன் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். சேர்ந்து உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது, புதிய விஷயங்களை ஆரம்பிப்பது எளிதாகிறது. அவர்களின் துணை நம் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்கிறது.


நட்பு என்பது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அல்ல.  

நட்பு தானாக உருவாகாது. அதற்கு ‘நேரம்’ என்ற மிகப்பெரிய முதலீடு தேவை.


உளவியலாளர்களின் கணக்குப்படி  

ஒரு நபருடன் குறைந்தபட்சம் பழக்கமாக 40 மணி நேரம் சேர்ந்து இருக்க வேண்டும்.  

அது ஒருவித நட்பாக மாற இன்னும் 90 மணி நேரம் தேவை.  

‘உயிர் நண்பர்’ என்ற நிலைக்கு வர இன்னும் 40 மணி நேரம் தேவை.  

மொத்தம் சுமார் 170 மணி நேரம்! இந்த ஓட்ட வாழ்க்கையில் நம்மிடம் அவ்வளவு நேரம் இருக்கிறதா?


ஒருமுறை நல்ல நட்பு உருவான பிறகு அதை தக்கவைக்கவும் தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போல, நட்புக்கும் ‘பேச்சு’ என்ற தண்ணீர் தேவை.


இது நட்பா? ஒருமுறை யோசியுங்கள்:  

1. ஆபீஸ் நட்புகள்: நாம் ‘நட்பு’ என்று நினைப்பது பெரும்பாலும் தேவைக்காக, மேலோட்டமான வாழ்த்துக்களே.  

2. சோசியல் மீடியா நட்புகள்: ஃபேஸ்புக்கில் 5000 நண்பர்கள், வாட்ஸ்அப்பில் 100 குரூப்கள் இருந்தாலும், கஷ்டத்தில் உதவ ஒருவரும் இருக்க மாட்டார்கள். இவை பெரும்பாலும் ‘பொழுதுபோக்கு’ பேச்சுகளே.  

3. பார் & ரெஸ்டாரண்ட் நட்புகள்: கிளாஸ் காலியாகும் வரை உள்ள பேச்சுகள், சிரிப்புகள். போதை இறங்கினால் ஆள் காணாமல் போய்விடுவார்.


அசல் பிரச்சனை எங்கே?  

நட்பின் பிணைப்புகள் ஏன் அறுந்து போகின்றன என்றால் காரணங்கள் நிறைய இருக்கின்றன. டெக்னாலஜி, நியூக்ளியர் குடும்பங்கள், போட்டி நிறைந்த உலகம்... ஆனால் எல்லாவற்றையும் விட பெரிய காரணம் ஒன்றே.  

“நேரமில்லை நண்பா!”


பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மாறிவிட்டோம். உறவுகளை தக்கவைப்பதை மறந்துவிட்டோம்.


இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள்:  

1. நேரம் ஒதுக்குங்கள்: நாளில் 15 நிமிடமாவது நண்பர்களுக்கு போன் செய்து பேசுங்கள். வாரத்தில் ஒருமுறையாவது சந்தியுங்கள்.  

2. தரமான நேரம் கொடுங்கள்: சந்திக்கும்போது போனை ஓரமாக வைத்துவிட்டு மனம் விட்டுப் பேசுங்கள்.  

3. புதிய நட்புகளை வரவேற்கவும்: வாக்கிங் போகும்போது, புதிய கிளாஸில் சேரும்போது மக்களுடன் பேச்சு கொடுங்கள்.  

4. இருக்கும் நட்புகளை பாதுகாக்கவும்: சின்ன சின்ன கோபங்களுக்காக விலைமதிப்பற்ற நட்பை விட்டுவிடாதீர்கள். ‘சாரி’, ‘நன்றி’ சொல்ல தயங்காதீர்கள்.

நினைவில் கொள்ளுங்கள், கடைசி மூச்சு வரை நம்முடன் வருவது பேங்க் பேலன்ஸ் அல்ல, நல்ல நண்பர்கள் மட்டுமே.

அதனால் இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். உங்கள் போன் காண்டாக்ட் லிஸ்டை திருப்புங்கள். நீண்ட நாட்களாக பேசாத அந்த ‘பெஸ்ட் பிரெண்ட்’க்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்.

நட்பை பாதுகாப்போம். நம்மை நாமே பாதுகாப்போம்.

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

  ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...