திருமணத்தடை நீக்கும் கல்வாழை பரிகார தலம்/ திருச்சி Thirupanjali
திருமணம் சார்ந்த அனைத்து தோஷங்களையும் நீக்கும் “திருப்பைஞ்ஞீலி” கோவில் பற்றியும், இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
Trichy Thiruppainjeeli Gneelivaneswarar Temple
: திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் தடை நீங்கி திருமணம் கைகூட அருள் பாலிக்கும் திருச்சி திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஷ்வரர் கோவிலின் சிறப்புகள் குறித்தும் வழிபாட்டு, பரிகார முறைகள் குறித்தும் இத்தொகுப்பில் காணலாம்.
திருச்சி
திருச்சிஎன்றாலே ஆன்மீக திருத்தலங்கள் தான் அதிகம் இருக்கும். இங்கு பல்வேறு தோஷங்களுக்கு பரிகாரம் செய்யும் ஆன்மீக தலங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஞீலிவனேஸ்வரர் ஆலயம். அந்தத் திருத்தலத்தைப் பற்றி தான் இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 61 வது தலமாக விளங்குவது இந்த திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
இது திருமண தடையை நீக்குவதற்கான பரிகார தலமாகும். இந்த கோவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்னதான திருக்கோவில் ஆகும். இந்த கோவிலில் முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், சுந்தரபாண்டியன், மகேந்திர பல்லவ வர்மன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்து இருக்கின்றனர்.
ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் செய்ததாகவும், அப்போது, பார்வதி அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது. பின்னர் அந்த வனத்தின் மத்தியில் சிவனும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவில் செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண திருமண தடை நீக்கும் ஒரு பரிகார தலமாக விளங்கி வருகிறது. எனவே, திருமணம் ஆகாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும் ஆண்களோ அல்லது பெண்களோ இந்த கோவிலுக்கு வந்து, அர்ச்சனை செய்து, அங்கு இருக்கும் கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது பல ஆண்டுகாலமாக ஒரு ஐதிகமாக இருந்து வருகின்றது.
கல்வாழை மரத்தில் மாங்கல்யத்தை கட்டி பரிகாரத்தை நிறைவேற்றுவார்கள். மேலும், திருமணம் முடிந்தவுடன் அவர்கள் தம்பதிகளாக வந்து நிவர்த்தி பூஜை செய்வர்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில், வாரத்தின் அனைத்து நாள்களிலும் பரிகார பூஜை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டமானது அதிக அளவில் இருக்கும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து பரிகார பூஜை செய்ய வருகின்றனர்.
ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி
அதோடுமட்டுமல்லாமல், இங்கு கல்வாழை பரிகார பூஜை பொருட்கள் இங்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகின்றன. எனவே இதற்கான தொகையை செலுத்தி அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது என்னவென்றால், இந்த கோவிலில் எமதர்மராஜனுக்கு என்று தனி சந்நிதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து அதிகாரத்தைத் திரும்ப அளித்த கோவில் இது என்று கூறப்படுகிறது. மேலும், தைப்பூச தினத்தில் எமதர்மராஜனுக்கு சிவபெருமான் உயிர் எடுக்கும் அதிகாரத்தை வழங்கியதால் இங்குள்ள சன்னதி அதிகார வல்லவர் சன்னதி என்றும் அழைக்கப்படுகின்றது.
கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் மற்றும் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இந்த சன்னதியில் வந்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். மேலும் சனிக்கிழமைகளில் இந்த சன்னதியை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தமிழகத்தில் உள்ள பல்வேறு குடைவரைக் கோவில்களில் ஒன்று ஆகும்.
நான் இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன். அனைவரும் பின்பற்றலாம்.
பதிலளிநீக்கு