லேபிள்கள்

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

விஜயகாந்த் சுவாரசிய தகவல்கள்

 


கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர்.

இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார்.

விஜயகாந்த் சுவாரசிய தகவல்கள் இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகில் பொறியியல் கல்லூரியும், சென்னை கோயம்பேட்டில் திருமண மண்டபமும் உள்ளது.

கார்கில் நிவாரண நிதிக்கு ரூ5,00,000 வழங்கிய விஜயகாந்த், ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு ரூ25,000 நன்கொடை வழங்குகிறார்.

நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்கள் கல்லூரியில் இணைவதற்கு உதவியாக, எந்தவொரு கட்டணமும் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மூன்றுசக்கர வண்டி, இஸ்திரிப்பெட்டி போன்ற உதவிகளை வழங்கிவருகிறார்.

எம்ஜிஆரின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜானகி இராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாராங்களில் எம்ஜிஆர் பயன்படுத்திவந்த வாகனத்தை விஜயகாந்திற்கு வழங்கியுள்ளார்.

இவர் நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்திராதபோதும், இவரது பல படங்கள் மொழிமாற்றம் செய்து வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் மத்தியில் விஜயகாந்த் பரலவாக கேப்டன் என அறியப்படுகிறார்.

எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆரின் தீவிர ரசிகரான இவரின் பொழுதுபோக்கு கிரிக்கெட், கால்பந்து மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது ஆகும்.

தீவிர உடல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர் டிசம்பர் 28, 2023 அன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

விஜயகாந்த் அரசியலில் கடந்து வந்த பாதை 2016 :

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த், 2016 தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், டிபாஸிட்டையும் பறிகொடுத்தார்.

2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2006: 10 மே 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், இவரது கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். 2005 : தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை தமிழகத்தில் துவங்கினார்.

முந்தைய வரலாறு 2015:

தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தனது மகன் சண்முகபாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

1990 முதல் 1999 வரை, இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், அவற்றில் பெரும்பாலானவை அதிரடி திரைப்படங்களாகும்.

1981: பல்வேறு தோல்விகளுக்கு பிறகு இவர் நடித்த "தூரத்து இடி முழக்கம்" எனும் திரைப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். 1984ல் தமிழில் ஒரே ஆண்டில் 18 படங்களை வெளியிட்ட நடிகர் என்ற வரலாற்றை படைத்தார்.

1979: எம்..காஜா இயக்கி, விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான "இனிக்கும் இளமை" ல் இணைந்தார்.

விஜயகாந்த் சாதனைகள்

1) 2001ல் தமிழக அரசின் கலைமாமணி விருது

2)1989ல் செந்தூரப்பூவே படத்திற்காக சிறந்த நடிகர் விருது. 3)1988ல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது

4)தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர்

5)தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாநில கட்சியை தமிழகத்தில் துவங்கினார்

6)14 ஏப்ரல் 2010ல் கேப்டன் டிவி எனும் 24 மணிநேர தொலைக்காட்சியை துவங்கினார்.

7)2011ல் ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக தேர்வாகி, தமிழக சட்டசபையின் எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார்.

அனைவருக்கும் உயர்ந்த உணவு

முதன் முதலில் வில்லனாகஇனிக்கும் இளமைபடத்தின் மூலம் தமிழ் திரை உலகில் விஜய்காந்தாக அறிமுகமாகியவர்.

படப்பிடிப்பின் போது நாயகன் சுதாகர், நாயகி ராதிகா, இயக்குநர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் ஸ்பெசல் அசைவ சாப்பாடு பறிமாறப்பட்டு விஜய்காந்த் மற்றும் உடன் பணிபுரியும் மற்ற துணை கலைஞர்களுக்கு சாதாரண சைவ சாப்பாடு பறிமாறப்பட்ட நிகழ்வு தான் பின்னாளில் அவர் கதாநாயகனாக உயர்ந்து தனிப்படம் எடுத்த போது சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள நாயகன், நாயகி, இயக்குநர், துணை கலைஞர்கள் என அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் ஒரே சாப்பாடு பறிமாறப்பட்ட நிலைப்பாட்டை கொண்டு வந்த சூழல் உருவானது.

 

விஜய்காந்தின் படம் வேறு எந்த தயாரிப்பாளரின் படமாக இருந்தாலும் அதில் பணிபுரியும் அனைவருக்கும் உயர்ந்த உணவே வழங்கப்பட்ட சூழல் அமைய பெற்றது சிறப்புக்குரியது.

பின் காலம் கடந்தும் விஜயகாந்த் வீட்டில் ஞாயிறு தோறும் சுமார் 100 பேர் உணவருந்தும் மகத்துவம் அமைய பெற்றது

இந்த சூழல் தான் பாய்ஸ் படத்தில் நடிகர் செந்தில் சோறு சம்பந்தமான டேட்டாபேஸ் சொல்லும் வசனமானவிஜய்காந்த் ஆபீசில் எப்ப கறிச்சோறு போடுவாங்கஎன்பது வரை இவரது புகழ் வளர்ந்து வந்திருக்கும் போல.

விஜய்காந்துக்கு 18 வயது இருக்கும் போது தனக்கு தெரிந்த ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவன் படிப்புக்கு பணம் செலுத்த முடியாமல் இருந்த சூழலை கண்டு தன் தந்தை போட்டு விட்ட தங்க செயினை கழட்டி அந்த குடும்பத்தாரிடம் கொடுத்து படிப்பு செலவை கவனித்து கொள்ள சொல்லி இருக்கிறார்.

விஷயம் அவரின் தந்தைக்கு தெரிய செம்ம அடி விழுந்ததாம்.. மேலும் அவர் தந்தை இனி இப்படி உதவி செய்யனும்னா உன் சம்பாதியத்தில் செய்என்று கண்டிக்க...

அவர் நடிகராகி சம்பாதித்து வந்த பணத்தில் மட்டும் ஏழை எளியோருக்கு அனைத்து உதவிகளும் செய்ததோடு தன் உழைப்பில் வந்த பணத்தில் தங்க செயின் வாங்கி கழுத்தில் அணிந்தாராம்...

தயாரிப்பாளர் காஜா மொய்தீன் ஒரு பேட்டியில் பகிர்ந்த விசயம். நடிகர் சங்க கடனை அடைக்க ரஜினி கமல் உட்பட அனைத்து நடிகர் நடிகைகளை ஒருங்கிணைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சியானது கேப்டன் தலைமையில் நடந்தது.

அங்கு சென்ற போது சூப்பர் ஸ்டாரின் லக்கேஜ் காணாமல் போக அவர் உடுத்திக் கொள்ள சட்டையும் வேட்டியையும் தன்னிடம் இருந்து கேப்டன் கொடுக்க அதை மகிழ்வுடன் சூப்பர் ஸ்டாரும் வாங்கி உடுத்திக் கொண்டாராம்.

தமிழ்பற்று

தமிழ்ச்செல்வன் படத்திற்காக கர்நாடகா சென்றிருந்த பொழுது சூட்டிங் கிளாப் போர்ட் தமிழில் எழுதி இருந்ததை கண்டு கன்னட அமைப்பின் தலைவர் தன் சகாக்களோடு வந்து கலாட்டா செய்ய, விசயம் பாரதிராஜா வாயிலாக கேப்டனுக்கு தெரிவிக்கபட்டவுடன், தன் காரில் இருந்து இரும்பு ராடை எடுத்து வந்து அந்த கன்னட அமைப்பின் தலைவரை நோக்கி கோபத்துடன் எச்சரித்தாராம்.

பாராதிராஜா பிரச்சினை வேண்டாம் தமிழில் இருப்பதை எடுத்து விடலாம் என்று கூற, அப்படி நடந்தால்தான் இந்த படத்தில் இருந்தே விலகி விடுவேன் என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்என்று கூற கடைசி வரை கிளாப் போர்டை தமிழிலேயே இடம் பெற செய்து சூட்டிங்கை நல்ல படியாக முடித்தாராம்.

இசைஞானியுடனான கேப்டனின் பயணம் பல சுவாரஸ்யங்களை அள்ளி கொடுத்தது என்றே சொல்லலாம்.

இசைஞானி ஒரு ஆல்பமாக முன்னரே இசை அமைத்து உருவாக்கிய பாடல்களை வாங்கி அதற்கேற்றார் போல கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் வைதேகி காத்திருந்தாள். கேப்டனின் 100ஆவது படத்தின் பிளாக் பஸ்டர் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்தது இசைஞானி.

இவரின் தயாரிப்பில் வந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் பாடல் இசையை கேட்டு பூரித்து போய் இரட்டை சம்பளம் வழங்கி இசைஞானியை கேப்டன் கொண்டாடினார்.

தனது இசையில் வரும் படங்களின் பாடல்கள் அனைத்தும் அதிக பட்சம் 5 நாட்கள் எடுத்து கொண்ட சூழலில் கேப்டன் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வந்தரமணாபடத்திற்கு மட்டும் 40 நாட்கள் பணியாற்றினாராம்.

வைதேகி காத்திருந்தாள் தொடங்கி நூறாவது நாள், அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், ரமணா என பல படங்களின் இசை இசைஞானி என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கேப்டனின் பொன்மன செல்வன் படத்தில் வரும்பொட்டு வெச்ச தங்க குடம்பாடல் இவரின் போற்றி பாடலாக ரசிகர் மற்றும் கட்சி தொண்டர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

கேப்டன் பிரபாகரன் பட கேசட் வெளியீட்டு விழா மற்றும் சமூக ஊடக செய்திகளில் நிறைய ரசிகர்கள் அவரின் அரசியல் பிரவேசத்தால் நிகழ்ந்த துரோகங்களையும், ஆண்டாள் அழகர் கல்லூரி கேப்டன் டிவி பறிபோன நிகழ்வுகளையும் வேதனையுடன் பகிர்ந்த போது அதில் ஒருவர் செய்திருந்த கமெண்ட் கண்ணில் பட்டது.

நாங்கள் குடும்பத்துடன் செல்வோம் திரை அரங்கம். கேப்டன் என்ற அந்த வாழ்ந்த மாமனிதருக்காக.”

பரிவு, அன்பு, மொழிப்பற்று, மனிதம், வீரம் என அனைத்து வித உணர்வுகளின் வள்ளலான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குவோம்

2 கருத்துகள்:

Kanjeevaram Natarajan Annadurai

  Arignar Anna, whose full name is Kanjeevaram Natarajan Annadurai, was a prominent Indian politician, writer, and leader in the Dravidian m...