செவ்வாய், 22 ஜூலை, 2025
'' மனிதனாக வாழ்வது எப்படி?'' இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும்..
திங்கள், 21 ஜூலை, 2025
கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல
ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, "ஐயா, நான் உங்களுக்குகிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்" என்றார்.
ஆசிரியர் புன்னகையுடன், "ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்" என்றார்.
இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, "ஓ, நான் விளையாடினேன்!" என்றார்.
ஆசிரியர் சிரித்துக்கொண்டே, "மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!" என்றார்.
ஞாயிறு, 20 ஜூலை, 2025
பஞ்சபூத மருத்துவம்
பஞ்சபூத மருத்துவம்
1.நுரையீரல்>>>காற்று
2.கல்லீரல்>>>>>விண்
3.மண்ணீரல்>>>நிலம்
4.இருதயம்>>>> நெருப்பு
5.சிறுநீரகம்>>>நீர்
இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும்
1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல்
2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை
3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை
4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்
5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர்
ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும்.
1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு கண்.
2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு வாய்.
3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு மூக்கு.
4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உருப்பு நாக்கு.
5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உருப்பு காது.
1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும்.
2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும்.
3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும்.
4 இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும்.
5.சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும்.
அறுசுவையும் சமநிலையில் இருந்தால் ராஜ உறுப்புகள் சீராக இயங்கும். பற்றாக்குறையாக இருந்தாலும் இந்த ராஜ உறுப்புகள் நோயை உண்டாக்கும்.
1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்
2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல் இருக்கும்போது சாப்பிடுவார்கள்.
3.நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.
4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.
5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.
இருதயத்திலிருந்து ஆற்றல் மண்ணீரலுக்கு செல்லும்.
மண்ணீரலிருந்து ஆற்றல் நுரையீரலுக்கு செல்லும்.
நுரையீரலிலிருந்து ஆற்றல் சிறுநீரகத்திற்கு செல்லும்.
சிறுநீரகத்திலிருந்து ஆற்றல் கல்லீரலுக்கு செல்லும். கல்லீரலிலிருந்து ஆற்றல் இருதயத்திற்கு செல்லும்.
நோய் தோன்றுவது மனதில்,
அது தேங்குவது உயிர் ஆற்றலில்,
அங்கிருந்து தான் உறுப்புகளுக்கு வெளியாகிறது
மனம்உயிர் உடல் என சரி செய்வது தான் பஞ்சபூத மருத்துவம்.
மனதை சரி செய்தால் உயிர் சரியாகும். உயிர் சரியானால் உறுப்புகள் சரியாகும் என்பது ஹோமியோபதி மருத்துவம்
உயிரையும் மனதையும் விட்டு
விட்டு உடலில் உள்ள உறுப்புகளுக்கு மற்றும் வைத்தியம் செய்வது ஆங்கில மருத்துவம் இதனால் பயனில்லை.
மருத்துவம் என்பது மனதை சரி செய்து அதன் மூலம் உயிரை சரி செய்து அதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதால் நோய் குணமாவது தான் மருத்துவம்.
மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..
இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்..குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்தப் சூழலுக்கு ஏற்ப படைத்திருக் கின்றான்..
தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..
அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.
ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..
மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..
இங்கு வெள்ளையன்
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.
வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...
வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..
தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...
புகையிலையும் அப்படி வந்ததே.
இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.
உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.
வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,
வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.
கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.
கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.
தேங்காய் இருந்த
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல
மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.
நோய்கள் பெருகின..
ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...
ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..
ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின..
அத்தோடு விட்டானா?
அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.
விளைவு..?
தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின ...
சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.
சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...
ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..
நோய் பெருகிற்று....
அதாவது சூடான பூமியில் சூடு
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...
வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?
குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.
உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..
இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..
எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.
இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...
பரிதாபம்.
காரணம், அவற்றுக்கு உண்மையான
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....
அவை என்ன செய்யும்?
எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...
ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன...!
நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்
நிலையங்கள் எப்படி இருக்கும்?
எதையோ தின்று
எதையோ குடித்து,
எதையோ புகைத்து, எதையோ மென்று
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்
எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..
ஆப்ரிக்காவிலும்
அரேபியாவிலும் காப்பி இருந்தது..
தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.
பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!
புரிகிறதா...?
இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..
பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.
காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல..
அவை இன்றியும் வாழமுடியும்...
அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன
பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.
விஷம் அவை..
இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது
ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்
காணலாம்..
தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..
துளசி போல் அருமருந்தில்லை..
அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.
தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..
தேர்களில் தெய்வங்களுக்கு
வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.
உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...
அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.
அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.
சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..
அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்
நோய்க்கு இடம் கொடா...
மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..
இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..
அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகப்பட்ட நோய் ஒருபுறம்..
கருத்தரிப்பு சிக்கல்
சிசேரியன் என மறுபுறம்.
மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..
பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..
அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..
அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது
இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..
அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...
நாம் பாரம்பரியத்தை
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...
என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..
ஆம்.
மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்
ஆகபோவது ஒன்றுமில்லை...
நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..
அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து... இயற்கையை போற்றுவோம் - இனிமையான வாழ்வை பெறுவோம்.✍🏼🌹
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலம் தமிழ்நாடு
தமிழன் என்று சொல்லுவோம்
தலை நிமிர்ந்து வாழுவோம்
🌏உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தைப்பற்றிய தகவல்.!!
⭕1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.
⭕2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளன.
⭕3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது.
⭕4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே
⭕5. உலகில் உள்ள மிகப் பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
⭕6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
⭕7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்.
⭕8. இ-மெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். செய்திகள் பரிமாற்றத்தில் இந்த உலகம் விரைவாக செயல்பட இதுவே காரணம்
⭕9.விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்
⭕10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்
⭕11. உலகில் முதல் hydrogen அணு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபிடிக்கபட்டது
⭕12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( Hydro, Wind, Solar, Tidel ..etc )
⭕13) உலகில் அதிக மருத்துவ கல்லூரிகளும் மருத்துவர்களையும் உருவாக்கும் முதன் மாநிலம்.
⭕14) உலகிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளும், பட்டய பொறியல் கல்லூரிகளும் கொண்ட ஒரே மாநிலம்.
⭕15) உலகின் அனைத்து மூலைகளுக்கும் பருத்தி ஆடைகள் அளிக்கும் மாநிலம்.
⭕16) உலகிற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்தது இந்த மாநிலம் தான்.
⭕17)உலகிற்கு ஆப்பிள் சாப்ட்வேர்க்கு இங்கு இருந்து தான் செம்மை கண்டெய்னர் சப்ளை ஆக்கிக் கொண்டு உள்ளது
⭕18)உலகிற்கு மென்பொருளுக்கு அதாவது அனைத்து சாப்ட்வேர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்து போன இன்ஜினியர்கள் தான் மூலாதாரணமாக செயல்படுகிறார்கள் அவர்கள் அதில் இல்லை என்றால் அந்த மென்பொருளே ஆப் ஆகிவிடும்
⭕ உலகில் முதல் முதலாக
"தாய் மொழியை" உருவாக்கியது இந்த சமூகமே.
⭕இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இரண்டேயடியில் உலகளந்த திருமறை திருக்குறளை தந்த வள்ளுவன் பிறந்தது இந்த மண்ணில்தான்,
⭕அது ஏன், உலகிலேயே மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம் எம் உயிரினும் மேலான
"தமிழ்நாடு"
⭕தமிழன் என்று சொல்லுவோம்
தலை நிமிர்ந்து வாழுவோம்.
🌏தமிழ்நாடு வாழ்க! 💝💐👏🤩
பாரம்பர்ய வீட்டு வைத்திய குறிப்புகள்
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் சோம்பு மருத்துவ பயன்கள்:
💥 சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
💥 ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
💥 வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும். தொப்பை கரைந்து சரியான உடல் அமைப்பை தரும்.
💥 சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
💥 சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.
💥 தூக்கத்தைச் சீராக்கும். சோம்பு தண்ணீர் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்!
வாழ்வாதாரத்திற்கு ஒரு தொழில் 10ம் பாவம்
வாழ்வாதாரத்திற்கு10ல் ஒரு தொழில்
Dignity of Profession; Astrology
Predictions
அருளில்லார்கு அவ்வுலகம் இல்லை!
ஒரு பொருட்டாக மதியாதவரையும் பொருள் சேர்த்தால்
தூக்கி கொண்டாடும் சமூகம்.
ஜாதகத்தில் பொருளாதரா வளர்ச்சிக்கு சிறப்பாக கருதபடும் பாவங்களான 2,4,6,8,10,12 ஆகிய இரட்டைபடை பாவங்களே தலையாய பொருப்புகளை வகிக்கின்றன. இவை அர்த்தமுள்ள பொருள் பாவங்கள் ஆகும்.
"2,4,6,10 வழி பொருள் லக்னத்திற்கு
நன்மையும், 8,12 பொருள் வகையில் நன்மை என்றாலும் அக வழியில் ஜாதகருக்கு தீங்குதான்".
கேந்திர பாவங்களில் மிகவும் வலிமை வாய்ந்தது
பத்தாம் பாவம். இது ஒரு நிலையான பாவம். ஜாதகரின் தொழில், அந்தஸ்த்தை மையபடுத்தும் கவுரம் தரும் பாவம்.
10ம் பாவம் ஜாதகரின் கடமை, பொறுப்புகள், பொறுப்புகளை பகிர்ந்து அளித்தல், பதவி, பெற்றொர்களுக்கு சிரார்த்தம் புரிதல், தலைமை வகித்தல், ஆளுமையை மையபடுத்திய கோட்பாடுகளை வகுத்தல், கட்டளை இடுதல் ஆகிவற்றையும் குறிக்கும்.
பொருளாதாரத்தை மட்டும் பெரிதென்னி செயலாற்றாமல் கவுரவம், அந்தஸ்த்தை மிகுந்து பெற்றிட
முனைப்பூட்டும் கர்ம பாவம் தான் 10ம் பாவம்.
தொழிலில் ஒரு நிலையில் இருந்துவிடாமல் "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக" வளர்ந்திடவே அருள்புரியும்
கர்மவினையாற்றும் பாவம்.
10ம் பாவம் நிர்வாக திறனை மிகைபடுத்தி அதிகாரத்தை தக்கவைத்திட உதவும் நிலையான
பாவம். மேலாண்மை கோட்பாடுகளை வகுத்திட்டு, நிர்வாக ஸ்த்திரத்தை பலபடுத்தும்.
நிர்வாகத்தில் சொன்னது செய்தது எல்லாம் போக, நாளின் இறுதியில் என்ன பலன் கிடைத்தது,
இலக்கிட்டது போல் அடைந்ததோமா என்று சீர்
தூக்கி அறிய வைக்கும் உன்னத பாவம்.
இதுவரை 10ம் பாவத்தின் தனி சிறப்பை அறிந்தோம். 10ம் என்னும் ஜீவன ஸ்தானம் பிற பாவங்களுடன் இணைந்து செயலாற்றும் கூட்டு
விளைவுகளை அறிவோம்.
10 -> 3,7,11 பாவ தொடர்பு
3ம் பாவம் ஒரு நிலையற்ற பாவம், ஜாதகரின் தொழில் மாற்றம் நிரைந்த நிலையற்ற தொழிலாக
இருக்கும். உதாரணத்திற்கு கணினி துறை. காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றம் அடையும் வளர்ச்சி
நிறைந்த தொழில்.
7ம் பாவம் என்பது ஒரு நிலையான பாவம் இது, சுய தொழில், பொது மக்கள் சந்திப்பு
போன்ற காரகங்களை உள்ளடக்கியது. 10ம் பாவம் 7ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஒன்றை கொடுத்து
ஒன்றை பெறும் தொழிலாக அமையும்.
11ம் பாவம் என்பது பெரும்
கூட்டம், ஜாதகரின் திருப்தியை குறிப்பது.
ஜாதகர் இந்த வகையில் பொருள் சேர்க்கும் வழி அறிந்து தொழில் புரிவார்.
10-> 1,5,9 பாவ தொடர்பு
லக்ன பாவ தொடர்பு என்பது தன் சுய முயற்சியில் பொருளீட்ட முனைவார். அரசியல்வாதிகளுக்கு
ஏற்றவர். வியாபாரம், தொழிலதிபர்களுக்கு ஆலோசகராக திறம்பட செயல்பட கூடியவர். தனது சொந்த
அபிப்ராயங்களை தொலைகாட்சியில் வாதாடி பொருளீட்டும் கொவுரவ வித்தகர்.
5,9ம் பாவ தொடர்பு பொறுபற்ற தன்மை,
புறம் சார்ந்த பெரும் முதலீடு (Heavy
Investment) போட்டு செய்யும் நிலையான தொழிலுக்கு ஏற்றது அல்ல (Not suitable) என்றாலும் அகம் சார்ந்த கலை(Arts), விளையாட்டு(Sports),
கமிஷன் போன்ற தொழில் கைகொடுக்கும்.
"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்ற வகையில் தொழில் சமூகத்தில்
இவர்களது சேவைகளும் அங்கிகரிக்கபடுகிறது. இயற்கை ஆளுமையும், ஆன்மீக பண்பும் வெளிபட்டு
ஜோதிட ஆலோசனை வழங்கி சமூகத்தை வழிநடத்தும் இறை ஆசி பெற்ற தர்மவான்களையும் உருவாக்குவதும்
இந்த அமைப்பில்தான்.
10 - > 2,4,6,8 பாவ தொடர்பு
இந்த அமைப்பு உடையவர்கள் கார்பரேட் சாணக்கியர்கள். தொழிலுலக ஜாம்பாவான்கள்.
தொழிலிலும், பதவியிலும் கொடிகட்டி பறக்க அதிஉச்சம் நிறைந்த நிலைத்த யோகமான அமைப்பு.
10 -> 8,12 பாவ தொடர்பு
"கார்பரேட் உலகம் மோசமானது! அதில்
அழுக்கான அரசியல் உள்ளது!" என்பது எளியோரின் கருத்து.
போட்டி நிறைந்த வியாபார சமூகத்தை (Business community) பலம் கொண்டு சமாளிக்க 8ம் பாவத்தின் துணை அவசியம்.
நல்லவன் என்பதைவிட வல்வன் என்பதே தொழில் உலகிற்கு முதல் தகுதி. 10க்கு 11ம் பாவம் 8ம் பாவம் ஊருகாய் போல் தொட்டு கொண்டால் விருந்து சுவைக்கும் தொழிலும் சிறக்கும். கடும் முயற்சி(Hard Work) உச்சத்தை தரும் அதற்கு 8ம் பாவம் அருள் தரும்.
12 -> வியாபார ஸ்தாபனத்தை (Business Establishment) விரிவுபடுத்தி பல தொழில் புரிந்து
பொருளீட்ட முனைய வைக்கும் சூட்சம பாவம். அகல கால் ஆபத்து, ஆழம் அறிந்து காலைவிட்டால்
அனைத்தும் நம் வசமே என்று உணர்த்தும் முன் எச்சரிக்கை பாவ தொடர்பு.
இதுவரை பொறுமையாக படித்தமைக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்.
சனி, 19 ஜூலை, 2025
சொத்துக்களை எப்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்-When is best time to sell your property?
சொத்துக்களை எப்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்-When is best time to sell your property?
அனைவருக்கும் வணக்கம்.
சார ஜோதிட விதிகள் மூலம் ஒருவர் சொத்துக்களை
எளிதாக விற்பாரா? நல்ல லாபத்துடன் விற்பாரா? நஷ்டத்துடன் விற்பாரா என்று விளக்கமாக
அறிவோம்.
ஒருவன் பணபலம் அல்லது ஆள்பலம். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது வைத்திருப்பவரே வலிமையானவர்.
இவற்றை ஒருவன் தனது வாழ்நாளில் மறவாது தேடிவைத்துக் கொள்ளவேண்டும்.
ஒருவருக்கு பணதேவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது.
வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது திடீரென பணம் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலைகளில் உதவுபவை நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் மற்றும் அசையா சொத்துக்கள்.
சேமிப்பு பணம் போதாத போது அடுத்து கைகொடுப்பது தங்க நகைககள்.
என் சொத்துக்களை விற்க முடியுமா?
· அசையா சொத்துக்கள் மற்றும் நிரந்தர உடைமைகளை
குறிக்கும் பாவம் 4ம் பாவம்.
· 4ம் பாவத்திற்கு 12ம் பாவமான 3ம் பாவம் எதையும் சுருக்குதல், மாற்றுதல், பெயறுதல் என்ற காரக தன்மையை வைத்திருப்பதால் இது 4ம் பாவத்தை கெடுக்கும் பாவமாக கருதபடுகின்றது.
· லக்னம் ஜாதகர் என்றால், 7ம் பாவம் சொத்துக்களை வாங்குபவர். 7ம் பாவம் என்பது ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது.
· அவர் சொத்துக்களை வாங்குவாரா? வாங்கமாட்டாரா? என்று அறிய 7க்கு 4ம் வீடான 10ம் வீட்டு பாவமுனையை பார்க்க வேண்டும்.
· ஜாதகரின் லக்னத்தில் இருந்து 10ம் மற்றும் 5ம் பாவமுனைகள் யாவும் சொத்துக்களை வாங்குபவர்க்கு (7ம் வீட்டு பாவமுனை) முறையே 4ம் வீடாகவும் (உடமைகள்), 11ம் வீடாகவும் (வாங்குபவரின் ஆசை நிறைவேறுதல்) அமைகின்றது.
· ஆக ஒருவர் தன் சொத்துக்களை பிரச்சனையின்றி விற்க வேண்டும் என்றால் ஜாதகரின் 3ம், 5ம், 10ம் பாவமுனைகளின் தொடர்புகள் நல்லவிதத்தில் அமைய வேண்டும்.
நல்ல லாபத்துடன் சொத்துக்களை விற்பேனா?
· ஒருவருக்கு மூன்றாம் பாவத்தை முன்னிருத்தி ஒற்றைபடை தசா /புக்திகள் நீண்ட காலம் தொடர்ந்து நடைபெற்றால் தன் தேவைகளை சமாலிப்பதற்காக சொத்துக்களை எவ்வித சிரமம் இன்றி விற்பார்.
· 12ம் பாவம் என்பது ஜாதகர் சொத்துக்களை ஒப்படைப்பது.
· 12ம் வீடு 8, 12 தொடர்பு இல்லாமல் இரட்டைபடை பாவங்களை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை நல்ல லாபத்துடன் விற்பார்.
சொத்துக்களை நஷ்டத்திற்கு விற்பேனா?
10ம் வீட்டு உபாதிபதி லக்னத்திற்கு 8ம் வீட்டை தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை விற்று பணமாக்குவதில் மிகுந்த சிரமம் அடைவார்.
10ம் வீட்டு உபாதிபதி லக்னத்திற்கு 12ம் வீட்டை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர்
தன் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பார்.
ஆக பத்தாம் பாவத்தின் 8,12 பாவதொடர்பு சொத்துக்களை
வாங்குபவர்க்கே லாபமாக அமையும்.
ஒருவருக்கு 8,12ம்
பாவங்களை மையபடுத்தி நடைபெறும் தசாபுக்தி காலங்களில் சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது.
பொறுமையாக படித்தமைக்கு நன்றி.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி,
உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்.
மனித வாழ்க்கையின் உண்மை...!
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!
இதற்கு கழுதை சொன்னது
நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!
கடவுள்
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐕 🐕 🐕 🐕 🐕 🐕
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!
இதற்கு நாய் கூறியது :
கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு
15 வருஷம் போதும்...!
கடவுள்
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!
🐒 🐒 🐒 🐒 🐒 🐒
அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்...!
நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!
இதற்கு குரங்கு கூறியது :
20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!
கடவுளும்
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!
👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼
கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார்...!
நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்
நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ
20 வருடங்களுக்கு வாழ்வாய்...!
இதற்கு மனிதன் கூறினான் :
20 வருஷம் ரொம்ப குறைவு...!
கழுதை வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
நாய் வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
குரங்கு வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!
கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!
அன்று முதல்
மனிதன் முதல்
20 வருடங்களை
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
30 வருடங்களை
கழுதை போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!
குழந்தைகள்
வளர்ந்தபிறகு அடுத்த
15 வருடங்களுக்கு
அவன் வீட்டின் நாயாக இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!
வயதாகி, Retire ஆன
பிறகு குரங்கு போல்
10 வருடங்களுக்கு
மகன் வீட்டிலிருந்து
மகள் வீட்டிற்கும்,
மகள் வீட்டிலிருந்து
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!
மனித வாழ்க்கையின் உண்மை...!
வங்கியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் அடமான கடன்
நண்பர் ஒரு பாங்குக்குள் நுழைகிறார், .
மேனேஜரிடம் " எனக்கு 5000/ கடன் வேணும் " என்கிறார்.
"உங்களை எனக்குப் பழக்கமில்லை ஏதாவது Collateral
குடுத்தா கடன் தரோம் ".
" பேங்க் வாசலில் என்னுடைய புத்தம் புது ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குது. ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் உள்ளேயே இருக்கு . அதை அடமானம் வச்சுக்கிட்டு கடன் குடுங்க "என்றார் நண்பர்.
கடன் உடனே வழங்கப்பட்டது . பாங்க் டிரைவர் காரை பத்திரமாக ஓட்டிச்சென்று
பேஸ்மெண்டுல நிறுத்தறார் .
மானேஜரும் ஊழியர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
"வெறும் 5000துக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சுட்டுப் போறாரே ? ரொம்ப அப்பாவி ."
பல கோயில்கள் மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டு, ஒரு மாதம் கழித்து வந்து 5000 + வட்டி 39 ரூபாய் கட்டி, வண்டியை எடுத்துக் கொள்கிறார் நண்பர்.
" ஏன் சார் இவ்ளோ சின்ன தொகைக்கு இவ்ளோ காஸ்டலி காரை அடமானம் வச்சீங்க "ன்னு கேக்கறார் மானேஜர்.
" 39 ரூபாய்க்கு வேற யாரு சார் இந்த 2 கோடி காரை இவ்ளோ ஜாக்கிரதையா ஒரு மாசம் பாத்துப்பாங்க ?" என்றார் நண்பர்.
Medicines free without any side effects
What are Medicines?
1.Sleeping early and waking up early is medicine.
2.Remembering God in the morning is medicine.
3.Yoga, pranayama, and exercise are medicines.
4.Morning and evening walks are also medicines.
5.Fasting is medicine for all diseases.
6.Sunlight is also medicine.
7.Drinking clay-pot water is a medicine.
8.Clapping hands is also medicine.
9.Chewing well is medicine.
10.Drinking water and eating mindfully are medicines.
11.Sitting in vajrasana after eating is medicine.
12.Deciding to be happy is medicine.
13.Sometimes, silence is medicine.
14.Laughter and humour are medicines.
15.Contentment is medicine.
16.Peace of mind and body is medicine.
17.Honesty and positivity are medicines.
18.Selfless love and emotions are also medicines.
19.Doing good to others is medicine.
20.Doing something that gives virtue is medicine.
21.Living in harmony with others is medicine.
22.Eating, drinking, and spending time with family is medicine.
23.Each true and good friend is a complete medical store without money.
24.Staying cool, busy, healthy, and enthusiastic is medicine.
25.Enjoying each new day fully is medicine.
26.Finally... The joy of doing a good deed by sending this message to someone is also medicine.
Understanding the greatness of nature is medicine.
These medicines are all completely free without any side effects!!
பொறியியல் துறையில் ஜாதகருக்கு எந்த பிரிவு சிறப்பு?
பொறியியல் துறையில்
ஜாதகருக்கு எந்த பிரிவு சிறப்பு?
மேலே உள்ள படத்தில், Engineering துறையில் உள்ள பிரிவுகள் ஒவ்வொன்றும் ஜோதிடத்தில்
எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுள் பெரும்பாலானவர்கள்
Engineering துறையை தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
இதன் விளைவாக.. இன்று
வேலையே இல்லாமல் இருப்பவர்கள் list-ல் Engineer-கள் அதிகஅளவில் இருப்பதையும் நாம் உணர்கிறாம்.
அது மட்டுமின்றி, படித்த துறை ஒன்று, வேலை பார்க்கும் துறையோ வேறு. என்று அதிகம்
கூறி வருபவர்களும் Engineers-களே ஆவார்கள்.
ஆக மேற்படிப்பு முடிந்த
பின்னர், உத்தியோகம் என்று வரும் பொழுது.. அதில் பாதிக்கப்படுபவர்களில் பொதுவாக
Engineer-கள் தான் அதிகளவு இருக்கிறார்கள்.
இதை தவிர்க்க வேண்டுமென்றால்,
ஒரு ஜாதகர் உயர்கல்வியில் நுழையும் முன்னரே. ஒரு முறை தனது Horoscope-க்கு Career
Predictions (Horoscope Predictions for Higher Studies /Horoscope Predictions
for Job) பற்றி அறிந்து கொள்வது சிறப்பு.
அதாவது, உயர்கல்வியில் Engineering துறையை தேர்வு செய்து படிக்க ஜாதகத்தில்
கொடுப்பினை உள்ளதா??
அப்படி Engineering படிக்க
ஜாதகத்தில் கொடுப்பினை உள்ளது எனில்.. அதில் எந்த பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்??
என ஜோதிடரிடம்
Horoscope Consultation பெறுவது சிறப்பு!
நாம் அனுபவத்தில் பார்க்கின்றோம்
சிலர் நல்ல மதிப்பெண்களை வைத்திருந்தாலும் கல்லூரியில் இறுதி ஆண்டின் போது நடைபெறும்
வளாக நேர்காணலில் தோல்வி அடைவதால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையில் அமர முடிவதில்லை. ஏன்
ஒரு சிலருக்கு நெடு நாள் வரை வேலையே கிடைக்காமலும் போகிறது.
ஆனால், ஒரு சிலர் சற்று
குறைவான மதிப்பெண்களை வைத்திருந்தாலும், கல்லூரி வளாக நேர்காணல்களில் தனது "தனித்தன்மையால்"
வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்ந்து குறுகிய காலத்தில் மிக உயர்ந்த
நிலையை அடைகிறார்கள்.
இது தான் கிரகங்களின்
விளையாட்டு. ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் தான் இதற்கான காரணமாக அமைகிறது. ஒரு துறையில்
ஜாதகர் பிரகாசிக்க வேண்டுமெனில் அந்த துறையை குறிக்கும் கிரகம் அவர் ஜாதகத்தில் வலுவான
நிலையில் இருக்க வேண்டும்!
மருத்துவ துறைக்கு நவகிரகங்களில்
சூரியன் தான் BASE PLANET என முந்தைய ஒரு கட்டுரையில் பார்த்தாம். அது போல
Engineering துறைக்கு BASE PLANET யார் என இங்கே பார்ப்போம். அதாவது ஜோதிடத்தில்,
ENGINEERING துறை என்பது பொதுவாக எந்த கிரகத்தினுடைய கட்டுப்பாட்டில் வரும் என்பதை
பற்றி முதலில் பார்ப்போம்.
ஜோதிடத்தில் மற்ற கிரகங்களை
காட்டிலும் ஒரே ஒரு கிரகத்திற்கு மட்டும் இந்த Engineering துறையின் மேல் மிகப் பெரிய
அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் வல்லமை உள்ளது. காரணம், அவரது காரகங்களுக்கு ஏங்காத/விரும்பாத
ENGINEERS-களே இருக்க முடியாது!! அதாவது ஒரு Engineer-க்கு என்னென்ன தகுதிகள் இருக்க
வேண்டுமோ அத்தனையும் அவரிடம் கொட்டிக் கிடக்கின்றன.
அதாவது
ஒரு சிறந்த பொறியாளருக்கு
உரிய மிக முக்கியமான தகுதிகள் என்னவென்றால்:
TOP FIVE QUALITIES
OF A SUCCESSFUL ENGINEER
1)
Creativity
& Innovation
2)
Mathematical
Skills
3)
Logical way of
Thinking
4)
Problem
solving Skills (taking sharp decision at the right time)
5) Good Working Relationships
இங்கே, மேற்குறிப்பிட்டுள்ள 5 தகுதிகளுமே புதனின் அம்சமாகும். அதாவது நவகிரகங்களில்
புதனால் மட்டுமே மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளை ஒரு மனிதருக்கு தர இயலும். ஆக
Engineering துறைக்கு புதன் பகவான் தான் BASE PLANET.
சரி, ஒருவர் Engineer ஆவதற்கு புதன் பகவான் மட்டும் வலுவாக இருந்தால் போதுமா??
நிச்சயமாக இல்லை.
ஜோதிடத்தில் மனிதனின் ஒட்டுமொத்த உடலுக்கும் சந்திர பகவானை காரகராக சொன்னாலும்,
உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் அவைகளின் செயல்பாடுகள் மற்றும் தன்மையை பொருத்து
ரிஷிகள் தனித்தனியாக கிரகங்களை பிரித்து வைத்துள்ளார்கள்.
அது போல தான், ஒட்டுமொத்தமாக பொறியியல் துறைக்கு புதன் பகவானை காரகராக சொன்னாலும்
அதில் உள்ள பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் தன்மைக்கு ஏற்ப கிரகங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதை தான் மேலே உள்ள படத்தில் அடியேன் தெளிவாக கொடுத்துள்ளேன். அன்பர்கள் இப்போது அதனை மீண்டும் ஒரு முறை நன்றாக கவனிக்க வேண்டுகிறேன்.
Engineering துறைக்கு BASE PLANET ஆன புதன் பகவான் வழிவிடும் பட்சத்தில் (அதாவது
ஜாதகத்தில் புதன் கெடாமல் இருந்தாலே போதும்) எந்த கிரகம் ஜாதகத்தில் வலுவாக உள்ளதோ
அந்த கிரகம் குறிப்பிடும் Engineering பிரிவை ஜாதகர் தேர்வு செய்து படிப்பது சுபம்.
உதாரணத்திற்கு,
ஒருவர் Mechanical
Engineering பயில வேண்டும் எனில்..
அவரின் ஜாதகத்தில் புதன்
பகவானும், சனி பகவானும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்! காரணம் Mechanical பிரிவை குறிப்பவர்
சனி பகவான்.
ஒரு வேளை
ஜாதகத்தில் புதன் பகவானும், சனி பகவானும் பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகர் எக்காரணத்தைக்
கொண்டும் Mechanical Engineering படிப்பை தேர்வு செய்யக் கூடாது.
மீறி தேர்வு செய்து படித்தால், படிப்பை பாதியில் நிறுத்துவது, தேர்ச்சி பெற
கடுமையாக போராடுவது போன்ற நிலைகள் உருவாகும். அப்படியே போராடி தேர்ச்சி பெற்றாலும்
அதனால் ஜாதகருக்கு பெரிய அளவில் வளர்ச்சி ஏதும் இருக்காது.
காரணம், நவகிரகங்களில் சனி பகவானின் துணை இன்றி எவர் ஒருவராலும் Mechanical
பிரிவில் சாதிக்க இயலாது.
அடுத்து,
ஒருவர் Civil
Engineering பயில வேண்டும் எனில்
அவரின் ஜாதகத்தில் புதன் பகவானும், செவ்வாய் பகவானும் நல்ல நிலையில் இருக்க
வேண்டும்! காரணம் Civil பிரிவை குறிப்பவர் செவ்வாய் பகவான்.
Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths
Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths
-
திருமணத்தடை நீக்கும் கல்வாழை பரிகார தலம் / திருச்சி Thirupanjali திருமணம் சார்ந்த அனைத்து தோஷங்களையும் நீக்கும் “ திருப்பைஞ்ஞ...
-
கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த் , இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகர் . இவ...
-
மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க. ”நிறுத்துங்க .. எல்லாத்தையும் நிறுத்துங்க. “ ஒரு திருமணக்கூடத்தில் ஒலித்த குரல் இத...
















