லேபிள்கள்

சனி, 19 ஜூலை, 2025

சொத்துக்களை எப்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்-When is best time to sell your property?

 


சொத்துக்களை எப்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்-When is best time to sell your property?


அனைவருக்கும் வணக்கம்.

சார ஜோதிட விதிகள் மூலம் ஒருவர் சொத்துக்களை எளிதாக விற்பாரா? நல்ல லாபத்துடன் விற்பாரா? நஷ்டத்துடன் விற்பாரா என்று விளக்கமாக அறிவோம்.

ஒருவன் பணபலம் அல்லது ஆள்பலம். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது வைத்திருப்பவரே வலிமையானவர்.

இவற்றை ஒருவன் தனது வாழ்நாளில் மறவாது தேடிவைத்துக் கொள்ளவேண்டும்.

ஒருவருக்கு பணதேவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது.

வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது திடீரென பணம் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலைகளில் உதவுபவை நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் மற்றும் அசையா சொத்துக்கள்.

சேமிப்பு பணம் போதாத போது அடுத்து கைகொடுப்பது தங்க நகைககள்.

என் சொத்துக்களை விற்க முடியுமா?

·     அசையா சொத்துக்கள் மற்றும் நிரந்தர உடைமைகளை குறிக்கும் பாவம் 4ம் பாவம். 

·  4ம் பாவத்திற்கு 12ம் பாவமான 3ம் பாவம் எதையும் சுருக்குதல், மாற்றுதல், பெயறுதல் என்ற காரக தன்மையை வைத்திருப்பதால் இது 4ம் பாவத்தை கெடுக்கும் பாவமாக கருதபடுகின்றது.

·  லக்னம் ஜாதகர் என்றால், 7ம் பாவம் சொத்துக்களை வாங்குபவர். 7ம் பாவம் என்பது ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது.

·    அவர் சொத்துக்களை வாங்குவாரா? வாங்கமாட்டாரா? என்று அறிய 7க்கு 4ம் வீடான 10ம் வீட்டு பாவமுனையை பார்க்க வேண்டும்.

·    ஜாதகரின் லக்னத்தில் இருந்து 10ம் மற்றும் 5ம் பாவமுனைகள் யாவும் சொத்துக்களை வாங்குபவர்க்கு (7ம் வீட்டு பாவமுனை) முறையே 4ம் வீடாகவும் (உடமைகள்), 11ம் வீடாகவும் (வாங்குபவரின் ஆசை நிறைவேறுதல்) அமைகின்றது.

· ஆக ஒருவர் தன் சொத்துக்களை பிரச்சனையின்றி விற்க வேண்டும் என்றால் ஜாதகரின் 3ம், 5ம், 10ம் பாவமுனைகளின் தொடர்புகள் நல்லவிதத்தில் அமைய வேண்டும்.

நல்ல லாபத்துடன் சொத்துக்களை விற்பேனா?

·      ஒருவருக்கு மூன்றாம் பாவத்தை முன்னிருத்தி ஒற்றைபடை தசா /புக்திகள் நீண்ட காலம் தொடர்ந்து நடைபெற்றால் தன் தேவைகளை சமாலிப்பதற்காக  சொத்துக்களை எவ்வித சிரமம் இன்றி விற்பார்.

·     12ம் பாவம் என்பது ஜாதகர் சொத்துக்களை ஒப்படைப்பது.

· 12ம் வீடு 8, 12 தொடர்பு இல்லாமல் இரட்டைபடை பாவங்களை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை நல்ல லாபத்துடன் விற்பார்.

சொத்துக்களை நஷ்டத்திற்கு விற்பேனா?

10ம் வீட்டு உபாதிபதி லக்னத்திற்கு 8ம் வீட்டை தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை விற்று பணமாக்குவதில் மிகுந்த சிரமம் அடைவார்.

10ம் வீட்டு உபாதிபதி லக்னத்திற்கு 12ம் வீட்டை தொடர்புகொண்டிருந்தால் ஜாதகர் தன் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்பார்.

ஆக பத்தாம் பாவத்தின் 8,12 பாவதொடர்பு  சொத்துக்களை வாங்குபவர்க்கே லாபமாக அமையும்.

ஒருவருக்கு 8,12ம் பாவங்களை மையபடுத்தி நடைபெறும் தசாபுக்தி காலங்களில் சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி.

எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்.

1 கருத்து:

  1. KP ஜோதிடம் எளிமை என்பதை மேற்படி ஜாதக ஆய்வு உபயோகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...