லேபிள்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச் சலுகைகள்

 


மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணச் சலுகைகளை அறிவித்துள்ளது

1. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் மூத்த குடிமக்களுக்கு விலக்கு.

2. பெண் மூத்த குடிமக்கள் நிவாரண வயது 58 அல்லது அதற்கு மேல்

3. ஆண்களுக்கான ரயில் பயணிகள் கட்டணத்தில் 40% தள்ளுபடி.

4. பெண்களுக்கு ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி.

5. மெயில்/எக்ஸ்பிரஸ்/ராஜ்தானி/சதாப்தி/ஜன் சதாப்தி/துரோண்டோ போன்ற ரயில்வேயின் எந்த வகுப்பு பயணிகள் ரயில்களிலும் இந்த தள்ளுபடி கிடைக்கும் -

6.ரயில்வே முன்பதிவு செய்யும்போது/அல்லது அனைத்து பொது டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யும்போது வயதுச் சான்று தேவையில்லை.

7. இருப்பினும், ரயிலில் பயணம் செய்யும் போது ரயில் டிக்கெட் சரிபார்ப்பு (TC) க்கு வயது சான்றாக PAN அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது புகைப்படத்துடன் கூடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

8. மூத்த குடிமக்கள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை எந்த டிக்கெட் / முன்பதிவு அலுவலகத்திலிருந்தும் அல்லது இணையம் மூலமாகவும் வாங்கலாம்.

9. ரயில்வேயில் பயணிகள் முன்பதிவு முறையில் (PRS), மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஸ்லீப்பர் வகுப்பில் 6 பெர்த்களும், AC-3, AC-2 இல் 3 பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

உங்களிடம் உள்ள தொடர்பு எண்கள் மற்றும் குழுக்கள் & அனைவருக்கும் தெரியப்படுத்தவும்..!

ராஜதானி/துரோண்டோவில் 4க்கும் மேற்பட்ட பெர்த்கள் முன்பதிவுக்காக ஒதுக்கப்படும்.

மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்ட பயணிகள், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு இலவசமாக சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

மேலும், மூத்த குடிமக்களுக்கு வழிகாட்டி (அங்கீகரிக்கப்பட்ட போர்ட்டர்) தேவைப்பட்டால், அவர்கள் தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

சில முக்கியமான ரயில் நிலையங்களில் நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு பேட்டரி மூலம் இயக்கப்படும் நவீன சக்கர நாற்காலிகளை ரயில்வே நிர்வாகம் இலவசமாக வழங்கும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ரயில் பயணிகளுக்கான சிறப்பு யாத்ரி மித்ரா சேவை/சேவைகள் பல முக்கிய ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு ரயில் பயணிகள் ரயில் புறப்பட்ட பிறகு, மேற்கண்ட சலுகைகளுக்காக ஒதுக்கப்பட்ட கீழ் பெர்த்கள் காலியாக இருந்தால், மீதமுள்ள பெர்த்கள் மற்ற அனைத்து பொது பயணிகளுக்கும் வழங்கப்படலாம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், காத்திருப்புப் பட்டியலில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும். ரயில் டிக்கெட் பரிசோதனை.

மேற்கூறிய அனைத்து முக்கியமான தகவல்களையும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேலும் தேவைப்படுபவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

'என் தேசம் என் மக்கள்'!: வாழும் இடத்தை வாழத் தகுந்த இடமாக மாற்றலாம்!

 


'என் தேசம் என் மக்கள்'!: வாழும் இடத்தை வாழத் தகுந்த இடமாக மாற்றலாம்!

 

நம் வீட்டில் சுத்தம், சுகாதாரம் பேணும் மக்கள், அதுவே தெருவில் என்றால் கண்டு கொள்வதில்லை.

கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது தொடங்கி பொது இடத்தில் உள்ள சின்னச் சின்ன பிரச்சினைகளை கூட கண்டு கொள்ளலாம் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போகின்றனர்.

ஒரு சிலருக்கு மட்டுமே பொது இடத்தையும் நம் இடத்தைப் போல பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கும்.

நாம் வாழும் இடத்தை வாழத் தகுந்த இடமாக மாற்ற வேண்டும் என்ற அக்கறையும் இருக்கும்.

நமக்கெதுக்கு வம்பு, எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று அஜாக்கிரதையாக விட்டுவிடுவதனால்தான் நோய்களும், உயிர்பலிகளும் ஏற்படுகின்றன.

ஒரு உயிர் போன பின்னர் அதைப் பற்றி பேசி ஆதங்கப்படுவதை விட முன்னதாகவே அதை சரி செய்ய பொது ஜனமான நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த வாரம் விஜய் டிவியின் 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

வாழத் தகுந்த இடமா? குற்றங்களை தடுப்பதில் 3 வது இடத்தில் உள்ள சென்னை நகரம், சுகாதாரம், போக்குவரத்து, நகரத் திட்டமிடலில் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில் வாழத் தகுந்த நகரங்கள் என கணக்கெடுப்பட்ட 11 நகரங்களில் சூரத் 6.56, மும்பை 6.43, அகமதாபாத் பூனே, 6.02, சென்னை 5.81 என்ற வரிசையில் சென்னை உள்ளது.

போக்குவரத்து, சுகாதாராம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட 6 அம்சங்கள் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் சென்னை 5 வது இடத்தில் உள்ளது.

கடந்த பருவமழை காலத்தில் சென்னை நகரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்த சரளாவின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பள்ளம் தோண்டப்பட்டது பற்றி எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தால் எங்களின் ஒரே மகளே இழந்திருக்க மாட்டோம் என்று கூறி அழுதார் சரளாவின் தாயார்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் ஒரு உயிர் போய்விட்டது என்றனர்.

பற்றி எரியுது தென் சென்னையில் எச்சரிக்கை

 சென்னையைப் பொருத்தவரை எந்த ஒரு பிரச்சினை என்றாலும் தென் சென்னை பகுதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வட சென்னை பகுதிக்கு கொடுப்பதில்லை என்றார் திருவெற்றியூர் பகுதியில் வசிக்கும் ஒரு சமூக ஆர்வலர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு தென் சென்னையில் பள்ளம் இருந்தால் எச்சரிக்கைப் பலகை வைத்த அதிகாரிகள், திருவெற்றியூரில் பள்ளம் தோண்டினால் எச்சரிக்கைப் பலகை வைப்பதில்லை.

ஆனால் இப்போது எங்குமே எச்சரிக்கை பலகை இல்லை என்றார் சமூக ஆர்வலர் அதனால்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றார்.

 பணக்காரர்கள் நகரமா?

சென்னை நகரம் பெரும் பணக்காரர்கள் வாழும் நகரமாக மாறி வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான வசதிகளை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அரசாங்கம் நினைக்கிறது. ஏழைகளை திரும்பி பார்ப்பதே அசிங்கம் என்று நினைக்கிறது என்றார் சமூக நல ஆர்வலர்.

ஆக்கிரமிப்பு அதிகம்

சென்னை போன்ற பெருநகரங்களில் பொது இடமே இல்லை. கழிப்பிடங்கள் குறைந்து கொண்டு வருகிறது. நடைபாதை கூட ஆக்கிரமிக்கப்படுகிறது.

சாலைகள் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்.

ஆனால் இப்போது சாலைகளே பாதுகாப்பானதாக இல்லை.

3000 பேருக்கு 1 கழிவறை

சென்னையில் கழிவறைகள் எந்த அளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்று கணக்கெடுக்கப்பட்டபோது 3000 பேருக்கு ஒரு டாய்லட் என்ற நிலையில்தான் இருக்கிறது.

அந்த அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு பள்ளிகள், அங்கே கழிப்பிடம் இருக்கிறதா என்று கூட அரசு பார்ப்பதில்லை.

அதனால்தான் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளுக்கு மாணவிகள் போகின்றனர்.

வட சென்னை சுகாதாரக் கேடு

வட சென்னை பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம். அங்கே வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆஸ்துமா, மூட்டு வலி, முதுகுவலி வரை பல நோய்கள் அங்குள்ளவர்களை தாக்குகிறது.

சுகாதராக்குறைபாடு

அதிகம் சத்தம், தொழிற்சாலை புகை ஆகியவற்றிர்க்கு இடையே வசிக்கின்றனர் மக்கள். நீர் மாசு அதிகம் வட சென்னையில் நீர் மாசு அதிகம். தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்கின்றன. மாசு அதிகம் இருக்கிறது அது தெரியாமலேயே மக்கள் வாழ்கின்றனர் என்றார் சமூக ஆர்வலர் போஸ்.

சுகாதாரம் இல்லாவிட்டால் நோய்கள் வரும் என்பது தெரிந்தேதான் அந்தப் பகுதியில் வசிக்கிறோம் என்று கூறும் மக்கள், குழந்தைகள் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

எரிக்கப்படும் குப்பைகள் வட சென்னையில் தொழிற்சாலைகள் அச்சுறுத்துகின்றன என்றால் பள்ளிக்கரணை பகுதியில் எரிக்கப்படும் குப்பைகள் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகின்றன. கொசு, குப்பை போன்றவற்றினால் மூச்சுத்திணறல், ஏற்படுவதாக கூறினர் பொதுமக்கள். இதற்காக மாதம் 12,000 ரூபாய் மருத்துவ செலவாகிறது என்றும் கூறினர்.

வெளிப்படையான நிர்வாகம் நமக்கு என்ன தேவை என்பதை நாம் தேர்ந்தெடுத்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம்தான் கூறுவோம். வார்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள் செய்யவதில்லை என்று புகார் கூறினார்கள்.

வெளிப்படையான நிர்வாகம் இருந்தால் மட்டுமே திட்ட மிட்டு செயல்பட முடியும், சுதந்திரமான செயல்பாடு அவசியம் என்றனர் நிபுணர்கள். மக்களும் பங்கேற்க வேண்டும் எதையுமே அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நமக்கான உரிமைகளை நாம் எந்த அளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு நமக்கான கடமைகளையும் நாம் சரியாக செய்யவேண்டும்.

சிவிக் பிரச்சினைகளுக்கான தீர்வில் மக்கள் பங்கேற்கலாம் என்றும் சிறப்பு விருந்தினர்கள் கூறினர். சுகாதாரமாக வசிக்போம் நமக்கு உரிமைகள் இருப்பதைப் போல கடமைகளும் இருக்கிறது.

 நாம் நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். நம்முடைய வீட்டை எந்தளவிற்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதே போல நம்முடைய .சுற்றுப்புறத்தையும் வைத்திருக்க நினைக்க வேண்டும் என்றார் காருண்யா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பால் அப்பாசாமி.

வாழத் தகுந்த இடம் நம் சொத்து என்றால் அதை பாதுகாப்பாக வைப்பதும், பொது சொத்து என்றால் அதை போட்டு உடைப்பதும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அரசாங்கமும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அவசியம். அதேபோல பொது மக்களும் அவர்களின் உரிமைகளை எதிர்பார்ப்பதைப் போல கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும் என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.



ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

செயலில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்..!

 


உறுதியாக இருத்தல்

ஒரு செயலை செய்ய நினைத்தால், அதை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருப்பவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்!

சிந்தித்து செயல்படுங்கள்

எதைச் செய்வது? எப்படி செய்வது? அதன் விளைவுகள் என்ன? என்று நன்றாக சிந்தித்த பிறகு ஒரு செயலில் இறங்கவேண்டும். இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு எந்த ஊருக்கு செல்ல வேண்டுமோ? அந்தப் பேருந்தில்தான் ஏறவேண்டும். ஏதோ ஒரு  பேருந்தில் ஏறி அது போகும் ஊரில் போய் இறங்குவதற்கு பெயர் பயணம் அல்ல!

தாமதம் கூடாது

எதை எப்போது எப்படி செய்ய வேண்டும்? என்ற தெளிவு வேண்டும். சில செயல்கைளை நிதானமாகச்  செய்யலாம் என்றால் அவற்றைச் செய்ய  காலம் தாழ்த்துவதில்  தவறில்லை. ஆனால் விரைவாக செய்யவேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது. ஒரு நிமிடத்தின் அருமை அந்த ஒரு நிமிட தாமதத்தால் நீண்ட பயணத்துக்கான ரிலை தவறவிட்டவர்களுக்கு புரியும்.

முறையாகச்  செய்யுங்கள்

செய்யும்  ஒரு செயலில் பெரும் ஆதாயம் கிடைக்கும் என்று கூட இருக்கட்டும். அதற்காக கையில் இருக்கும் எல்லாப் பணத்தையும்  அதில் முதலீடு செய்வது சரியல்ல. ஒருவேளை ஏதேனும் முதலீடு மொத்தமும் காணாமல் போய்விடும்.

அப்படிப்பட்ட காரியத்தை முறையாக செய்யவேண்டும் அதன்படி முறையாக முயற்சி செய்யவேண்டும். இல்லாவிட்டால் எத்தனை பேர் துணையாக இருந்தாலும் இந்த முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

மனதில் உறுதி வேண்டும்

எல்லாம் இருந்தாலும் எத்தனை பேர் உதவி செய்தாலும் சிலர் மட்டும் தங்கள் முயற்சிகளில் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். மனதில் உறுதி இல்லாததுதான். எந்த செயலும் சிறக்காது. ஆனால் மனதில் உறுதிவேண்டும்.

'நம்மால் முடியும்' என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த தன்னம்பிக்கை அதிகமாகி நம் பார்வையை மறைத்து விடக்கூடாது. தன்னைப் பற்றி அதிகமாக கணக்கு போட்டுக்கொண்டு எல்லை மீறி போகிற ஒருவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ? அந்த கதிக்கு ஆளாவார் என்கிறார் திருவள்ளுவர்.

ஆற்றல் படையுங்கள்

முயற்சி செய்கிற ஒருவரின் குணங்களே அவரை ஜெயிக்க வைக்கின்றன. தான் நினைக்கும் எதையும் சொல்லி எவரையும் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவராகவும், சோர்வு இல்லாதவனாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் இருப்பவர்களை யாராலும் வெல்ல முடியாது!

நம்பிக்கை கொள்ளுங்கள்

அரைக்கிணறு தாண்டியவர்கள் பற்றி ஆயிரம் கதைகள் இங்கு உண்டு. அவர்கள் கால்கள் தாண்ட நினைக்கும் தூரத்தை முதலில் மனம் தாண்டவேண்டும். மனதால் தாண்ட முடியாதவர்கள் தடுமாறி விழுந்து விடுகிறார்கள். முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு எவரையும் சிகரத்தில் ஏற்றும் வலிமை உண்டு.

வெற்றியை நோக்கிய பயணமும் இப்படிப்பட்டதுதான். செயலை செய்ய நினைத்தால் அதை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதை செய்து முடித்தால்  எளிதில் வெற்றி பெறலாம்! இதனால் கிடைக்கும் வாசலில் காத்திருக்கும் நமக்கு வெற்றி!

உண்மையாகவே நீ உன் வாழ்க்கையை விரும்புகிறாய் என்றால் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களில் உருவானதே வாழ்க்கை.

எப்படி என்றால் உலர்ந்து போவோம் என்றறியாமல் உதடு விரித்துச் சிரிக்கும் உன்னத மலர்கள்.

உதிரப் போவதை உணராமல் உற்சாகமாய் சலசலக்கும் இலைகள்.

கலைந்து போவோம் என்று உணரா கண்கவரும் வண்ணக் கோலங்கள்.

கரைந்து போவோம் என்று கலங்காது ஒளியை வீசும் மெழுகுவர்த்திகள்.

எரிந்து போவோம் என்பதறியா ஏராள விட்டில் பூச்சிகள் எல்லாம் வாழும் நம்பிக்கையில்

எழுதியக் கவிதை அழிந்து போவதில்லை, எடுத்தப் பிறவி எதுவுமற்றுப் போவதில்லை.

எதுவும் நிரந்தரம் இல்லை

எதார்த்தத்தை மனதில் ஏற்றி

எண்ணியதை தகுந்த நேரத்தில் செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.

முயற்சி உடையார் 

இகழ்ச்சி அடையார்!

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths