'என் தேசம் என் மக்கள்'!: வாழும் இடத்தை வாழத் தகுந்த இடமாக மாற்றலாம்!
நம் வீட்டில் சுத்தம், சுகாதாரம் பேணும் மக்கள், அதுவே தெருவில் என்றால் கண்டு கொள்வதில்லை.
கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது தொடங்கி பொது இடத்தில் உள்ள சின்னச் சின்ன பிரச்சினைகளை கூட கண்டு கொள்ளலாம் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போகின்றனர்.
ஒரு சிலருக்கு மட்டுமே பொது இடத்தையும் நம் இடத்தைப் போல பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கும்.
நாம் வாழும் இடத்தை வாழத் தகுந்த இடமாக மாற்ற வேண்டும் என்ற அக்கறையும் இருக்கும்.
நமக்கெதுக்கு வம்பு, எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று அஜாக்கிரதையாக விட்டுவிடுவதனால்தான் நோய்களும், உயிர்பலிகளும் ஏற்படுகின்றன.
ஒரு உயிர் போன பின்னர் அதைப் பற்றி பேசி ஆதங்கப்படுவதை விட முன்னதாகவே அதை சரி செய்ய பொது ஜனமான நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த வாரம் விஜய் டிவியின் 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
வாழத் தகுந்த இடமா? குற்றங்களை தடுப்பதில் 3 வது இடத்தில் உள்ள சென்னை நகரம், சுகாதாரம், போக்குவரத்து, நகரத் திட்டமிடலில் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் வாழத் தகுந்த நகரங்கள் என கணக்கெடுப்பட்ட 11 நகரங்களில் சூரத் 6.56, மும்பை 6.43, அகமதாபாத் பூனே, 6.02, சென்னை 5.81 என்ற வரிசையில் சென்னை உள்ளது.
போக்குவரத்து, சுகாதாராம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட 6 அம்சங்கள் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் சென்னை 5 வது இடத்தில் உள்ளது.
கடந்த பருவமழை காலத்தில் சென்னை நகரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்த சரளாவின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பள்ளம் தோண்டப்பட்டது பற்றி எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தால் எங்களின் ஒரே மகளே இழந்திருக்க மாட்டோம் என்று கூறி அழுதார் சரளாவின் தாயார்.
அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் ஒரு உயிர் போய்விட்டது என்றனர்.
பற்றி எரியுது தென் சென்னையில் எச்சரிக்கை
சென்னையைப் பொருத்தவரை எந்த ஒரு பிரச்சினை என்றாலும் தென் சென்னை பகுதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வட சென்னை பகுதிக்கு கொடுப்பதில்லை என்றார் திருவெற்றியூர் பகுதியில் வசிக்கும் ஒரு சமூக ஆர்வலர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு தென் சென்னையில் பள்ளம் இருந்தால் எச்சரிக்கைப் பலகை வைத்த அதிகாரிகள், திருவெற்றியூரில் பள்ளம் தோண்டினால் எச்சரிக்கைப் பலகை வைப்பதில்லை.
ஆனால் இப்போது எங்குமே எச்சரிக்கை பலகை இல்லை என்றார் சமூக ஆர்வலர் அதனால்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றார்.
பணக்காரர்கள் நகரமா?
சென்னை நகரம் பெரும் பணக்காரர்கள் வாழும் நகரமாக மாறி வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான வசதிகளை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று அரசாங்கம் நினைக்கிறது. ஏழைகளை திரும்பி பார்ப்பதே அசிங்கம் என்று நினைக்கிறது என்றார் சமூக நல ஆர்வலர்.
ஆக்கிரமிப்பு அதிகம்
சென்னை போன்ற பெருநகரங்களில் பொது இடமே இல்லை. கழிப்பிடங்கள் குறைந்து கொண்டு வருகிறது. நடைபாதை கூட ஆக்கிரமிக்கப்படுகிறது.
சாலைகள் பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்.
ஆனால் இப்போது சாலைகளே பாதுகாப்பானதாக இல்லை.
3000 பேருக்கு 1 கழிவறை
சென்னையில் கழிவறைகள் எந்த அளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்று கணக்கெடுக்கப்பட்டபோது 3000 பேருக்கு ஒரு டாய்லட் என்ற நிலையில்தான் இருக்கிறது.
அந்த அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு பள்ளிகள், அங்கே கழிப்பிடம் இருக்கிறதா என்று கூட அரசு பார்ப்பதில்லை.
அதனால்தான் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளுக்கு மாணவிகள் போகின்றனர்.
வட சென்னை சுகாதாரக் கேடு
வட சென்னை பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம். அங்கே வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆஸ்துமா, மூட்டு வலி, முதுகுவலி வரை பல நோய்கள் அங்குள்ளவர்களை தாக்குகிறது.
சுகாதராக்குறைபாடு
அதிகம் சத்தம், தொழிற்சாலை புகை ஆகியவற்றிர்க்கு இடையே வசிக்கின்றனர் மக்கள். நீர் மாசு அதிகம் வட சென்னையில் நீர் மாசு அதிகம். தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்கின்றன. மாசு அதிகம் இருக்கிறது அது தெரியாமலேயே மக்கள் வாழ்கின்றனர் என்றார் சமூக ஆர்வலர் போஸ்.
சுகாதாரம் இல்லாவிட்டால் நோய்கள் வரும் என்பது தெரிந்தேதான் அந்தப் பகுதியில் வசிக்கிறோம் என்று கூறும் மக்கள், குழந்தைகள் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.
எரிக்கப்படும் குப்பைகள் வட சென்னையில் தொழிற்சாலைகள் அச்சுறுத்துகின்றன என்றால் பள்ளிக்கரணை பகுதியில் எரிக்கப்படும் குப்பைகள் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகின்றன. கொசு, குப்பை போன்றவற்றினால் மூச்சுத்திணறல், ஏற்படுவதாக கூறினர் பொதுமக்கள். இதற்காக மாதம் 12,000 ரூபாய் மருத்துவ செலவாகிறது என்றும் கூறினர்.
வெளிப்படையான நிர்வாகம் நமக்கு என்ன தேவை என்பதை நாம் தேர்ந்தெடுத்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளிடம்தான் கூறுவோம். வார்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள் செய்யவதில்லை என்று புகார் கூறினார்கள்.
வெளிப்படையான நிர்வாகம் இருந்தால் மட்டுமே திட்ட மிட்டு செயல்பட முடியும், சுதந்திரமான செயல்பாடு அவசியம் என்றனர் நிபுணர்கள். மக்களும் பங்கேற்க வேண்டும் எதையுமே அரசாங்கம்தான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நமக்கான உரிமைகளை நாம் எந்த அளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு நமக்கான கடமைகளையும் நாம் சரியாக செய்யவேண்டும்.
சிவிக் பிரச்சினைகளுக்கான தீர்வில் மக்கள் பங்கேற்கலாம் என்றும் சிறப்பு விருந்தினர்கள் கூறினர். சுகாதாரமாக வசிக்போம் நமக்கு உரிமைகள் இருப்பதைப் போல கடமைகளும் இருக்கிறது.
நாம் நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். நம்முடைய வீட்டை எந்தளவிற்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதே போல நம்முடைய .சுற்றுப்புறத்தையும் வைத்திருக்க நினைக்க வேண்டும் என்றார் காருண்யா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பால் அப்பாசாமி.
வாழத் தகுந்த இடம் நம் சொத்து என்றால் அதை பாதுகாப்பாக வைப்பதும், பொது சொத்து என்றால் அதை போட்டு உடைப்பதும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அரசாங்கமும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அவசியம். அதேபோல பொது மக்களும் அவர்களின் உரிமைகளை எதிர்பார்ப்பதைப் போல கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும் என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக