லேபிள்கள்

வியாழன், 2 அக்டோபர், 2025

“கால்களே போதும்”.. உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி

 

“கால்களே போதும்”.. உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி




கால்களே போதும்”.. உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி

இந்தியாவின் 18 வயது இளம் பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் 2025 உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில், மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பிறவியிலேயே கைகள் இல்லாத நிலையிலும், தனது கால்களையும், முகவாயையும் பயன்படுத்தி வில் எய்தும் ஷீத்தல் தேவி, இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி இந்தச் சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில், ஷீத்தல் தேவி, துருக்கியின் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஓஸ்னூர் கியூர் கிர்டியை 146-143 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். போட்டியின் முதல் சுற்று 29-29 எனச் சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது சுற்றில் ஷீத்தல் தேவி மூன்று முறையும் மிகச் சரியாக '10' புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றார். அதன்பிறகு தனது முன்னிலையை இறுதிவரை தக்கவைத்துக்கொண்ட அவர், கடைசிச் சுற்றிலும் மூன்று முறை '10' புள்ளிகளைப் பெற்று, தனது வெற்றியை உறுதி செய்தார்.

மேலும் கண்டறிக பதக்கம் விளையாட்டு Sports MyKhel Medal medal ஹாக்கி ஸ்டிக் இந்தத் தங்கப் பதக்கம், இந்த சாம்பியன்ஷிப் தொடரில் ஷீத்தல் தேவி வென்ற மூன்றாவது பதக்கமாகும்.

முன்னதாக, டோமன் குமாருடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், சரிதாவுடன் இணைந்து மகளிர் காம்பவுண்ட் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் 2023 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இதே ஓஸ்னூர் கியூர் கிர்டியிடம் அடைந்த தோல்விக்கு, ஷீத்தல் தேவி பழிதீர்த்துக் கொண்டதாகவும் அமைந்தது.

ஷீத்தல் தேவியின் பயணம்: 'போகோமெலியா' (Phocomelia) என்ற அரிய வகை குறைபாட்டால் பிறவியிலேயே கைகள் இல்லாமல் பிறந்த ஷீத்தல் தேவியின் பயணம், பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகமாகும்.

2019 ஆம் ஆண்டு, கிஷ்த்வாரில் நடந்த ஒரு இளைஞர் நிகழ்வில், இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவினரால் இவர் அடையாளம் காணப்பட்டார்.

அதன்பிறகு, பயிற்சியாளர்கள் அபிலாஷா சவுத்ரி மற்றும் குல்தீப் வத்வான் ஆகியோரிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். தனது கால்களையும், முகவாயையும் பயன்படுத்தி வில் எய்தும் இவரது தனித்துவமான மற்றும் புதுமையான நுட்பம், இவரை மிக வேகமாக சர்வதேச அரங்கிற்கு அழைத்துச் சென்றது.

ஷீத்தல் தேவியின் முக்கியச் சாதனைகள்:

2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம்.

2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் (மிக இளம் வயதில் பாராலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனை). இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருது.

2024 ஆம் ஆண்டின் பிபிசி வளர்ந்து வரும் தடகள வீராங்கனை விருது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

“கால்களே போதும்”.. உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி

  “கால்களே போதும்”.. உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி “ கால்களே போதும்”.. உலக பாரா வில்வித்தையில் தங்கம் வ...