அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணி புரியும், ஓட்டுனருக்கு
நான் போக்குவரத்து தொழிலாளியின் மனைவி பேசுகிறேன்
எத்தனை கனவுகளோடு உன்னை கரம் பிடித்தேன் உன்னோடு வாழ வேண்டும் என்று
இந்த உலகில் உன்னை விட்டால் எனக்கு யார் உண்டு...
திருமணம் ஆன நாள் முதல் வண்டிக்கு செல்கிறேன்... வண்டிக்கு செல்கிறேன்... என்று வாழ்க்கையின் பாதி நேரம் அல்ல முழு நேரத்தையும் பேருந்து இயக்குவதிலேயே கழித்துக் கொண்டிருந்தாய்
என்னுடைய
அப்பா இறந்த பிறகு அவருடைய கருமாதிக்கு உன்னை அழைத்தேன் விடுப்பு இல்லை என்று சொன்னாய்
நம்முடைய மகளுக்கு பிறந்தநாள் கோவிலுக்கு செல்லலாம் என்றேன்
மிகை பணி பார்க்க வேண்டும் என்று சொன்னாய்
என்னுடைய அண்ணனுக்கு திருமணம் என்று சொன்னேன் வர முடியாது
மிகை பணி என்று சொன்னாய்
என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னேன் கிளை மேலாளர் விடுப்பு அளிக்கவில்லை என்று சொன்னாய்
தீபாவளிக்கு எங்களோடு இருங்கள் என்று சொன்னேன் ஸ்பெஷல் போக வேண்டும் என்று சொன்னாய்
எல்லாம் போக கடந்த வாரம் திங்கட்கிழமை ஓய்வு நாள் என்று சொல்லி வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னாய் நடுராத்திரி வீட்டிற்கு வந்தாய்
குழந்தைகள் உறங்கி விட்டது அடுத்த நாள் காலையில் அசதியில்
நீ உறங்கிக் கொண்டிருந்தாய்
குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று விட்டது அவர்கள் வீடு திரும்புவதற்குள் நீ பணிக்கு சென்றுவிட்டாய்
குழந்தைகள் வந்து அப்பா எங்கே அப்பா எங்கே என்று கேட்டது உன் உழைப்பில் வாழுகிற நாங்கள்
எங்கள் மகிழ்ச்சியில் நீ இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?
நீ சம்பாதித்த பணத்தில் வாடகை கொடுத்தோம்...
புத்தாடைகள் வாங்கினோம்
நல்ல உணவு உண்டோம்
நல்ல வாழ்க்கை
வாழ்ந்து வந்தோம்
ஆனால் உன்னுடன் இருக்க முடியவில்லை செவ்வாய்க்கிழமை செல்போனில் தொடர்பு கொண்டேன் பேருந்து இயக்கிக் கொண்டிருக்கிறேன் பிறகு அழைக்கிறேன் என்று சொன்னாய்.
உன் அழைப்புக்கு காத்திருந்தவளாய்
தூக்கம் இல்லாமல் தவித்தேன்.
புதன்கிழமை அழைத்தேன்.
TC மிகை பணி பார்க்கச் சொன்னார் என்றாய்.
பிறகு அழைக்கிறேன் என்றாய் இரவு வரை அழைக்கவில்லை வியாழக்கிழமை
காலை நான் அழைத்தேன் கிளை மேலாளர் மிகை பணி பார்க்கச் சொன்னார் என்றாய் பிறகு அழைக்கிறேன் என்றாய்.
நானும் தவித்துக் கொண்டிருந்தேன் இரவு வரை நீ அழைக்கவில்லை வெள்ளிக்கிழமை அழைத்தேன் மிகைப்பணி பார்க்கிறேன் என்று சொன்னாய்.
பிறகு அழைக்கிறேன் என்று சொன்னாய் சனிக்கிழமை காலை உன் செல்போனிலிருந்து அழைப்பு வந்தது.
ஆவலாய் ஓடி வந்து செல்போனை எடுத்தேன் நீ பேசவில்லை வேறு ஒருவர் சொன்னார் நீங்கள் இன்னாருடைய மனைவியா..
என்று ஆமாம் என்றேன் உங்களுடைய கணவர் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
என்று சொன்னார்...
போராடியது நீயாக இருந்தாலும் துடிதுடித்து போனது இதயம்
எனக்கு என்ன செய்வதென்று தெரியாது
எங்கே போவது என்று தெரியாது யாரை கேட்பது என்று தெரியாது
யாரிடம் சொல்வது என்று தெரியாது...
என்ன செய்வது
உலகமே நீ என நினைத்து வாழ்ந்தேன் எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால்.
நீ பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் இருந்தேன் திடீரென ஒலித்த செல்போன் சாவுமணி என்று எனக்கு தெரியவில்லை.
மரண ஓலம் விட்டேன் மயங்கி கீழே விழுந்தேன் நானே எழுந்தேன் மருத்துவமனைக்கு.
வந்து பார்த்தேன் என் வாழ்க்கையே அழிந்து போனதை உணர்ந்தேன்.
உன் மருத்துவ செலவுக்கு நான் என்ன செய்வேன் யாரிடம் கையேந்துவேன்
எப்படி கடனை அடைப்பேன்
எப்படி வாடகை கொடுப்பேன்
எப்படி குழந்தைகளைப் படிக்க வைப்பேன்.
நீ வாங்கிய கடனை எப்படி அடைப்பேன்....
பெண் பிள்ளையை கையில் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய போகிறேன்...
கத்தி முனையில் நிற்பது போல...
எண்ணெய் ஊற்றிய நெருப்பில் நடப்பது போல...
ஆழ் கடலில் விழுந்தது போல....
நிர் கதியாய்...
அநாதயாய்....
செய்வதறியாது புலம்பும் உங்கள் மனைவி...
என்னுடைய நிலை எந்த ஓட்டுனரின் மனைவிக்கும்
வந்துவிட கூடாது
வாழ்க்கையில் யாரையும் சபிக்காத நான்
வாழ்க்கையில் முதல் முதலாக சபிக்கிறேன்...
என் கணவரை
மிகைப்பணி பார்க்க கட்டாய படுத்தியது யாராக இருந்தாலும்
நாசமாகட்டும்,நாசமாகட்டும், நாசமாய் போகட்டும்....
இப்படிக்கு சாவின் விளிம்பில் இருக்கும் போக்குவரத்து தொழிலாளியின்
எல்லாம் இழந்த மனைவி...
இதை படிக்கும் போது கண்களில் தானாகவே...... 😭😭
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக