உணர்வு-
இதை வாசிப்பதற்கு முன்பாக .. .. மெதுவாக உங்கள் கண்களை மூடுங்கள். புன் முறுவல் சிந்துங்கள். இந்த சுதந்திரமான சூழ்நிலையில்,
ஒரு ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து, .. .. .. இந்த சுதந்திரத்தை உணருங்கள்… தொடர்ந்து வாசியுங்கள் .
ரஷ்யாவில் திருமணம் :
சுதா நாராயண மூர்த்தி, தான் எழுதிய, தன்னுடைய அனுபவத்தை, பகிர்ந்து கொள்கிறார்கள்:
சமீபத்தில், நான் ரஷ்யாவில் உள்ள, மாஸ்கோவில் இருந்தேன். நான் அங்குள்ள பூங்காவிற்கு ஒரு நாள் சென்றேன். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.
அது ஒரு கோடை கால மாதம், ஆனால் சீதோஷ்ண நிலை குளிராகவும், மழை லேசாகத் தூறிக் கொண்டும் இருந்தது. நான் ஒரு குடையின் அடியில் நின்று கொண்டே அந்த இடத்தின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, திடீரென்று, ஒரு இளம் ஜோடியை நான் பார்க்கும்படி நேர்ந்தது.
அவர்கள் இருவருக்கும் சற்று முன்புதான் திருமணம் நடந்து இருக்கும் என்பதை, நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். அந்தப் பெண், இருபது வயதிற்குள்தான் இருப்பார். அவள், பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள்; அவளுடைய அடர்த்தியான, அழகான கூந்தல்; ஒளி பொருந்திய நீலக் கண்கள்; வளைந்து நெளிந்த கவர்ச்சியான உடல் அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து அந்தப் பெண், மிக அழகாக இருந்தாள்.
அந்தப் பையனும், கிட்டத்தட்ட அதே வயதுடையவன் போலவே, தோற்றம் அளித்தான். அவன் மிக அழகான மிலிட்டரி யூனிஃபார்மில் இருந்தான்.
கண்களைக் கவரும்படியான வெள்ளை நிறத்திலான, சேட்டிங்க் கவுனை அந்தப் பெண் அணிந்து இருந்தாள். அந்த கவுன் அழகிய முத்துக்களாலும், லேஸுகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அவளுக்குப் பின்னால், மணப் பெண்ணின் தோழிகள் இருவர், அந்த திருமண கவுனின் விளிம்புகளைத் தூக்கிப் பிடித்தவாறு வந்தனர், அவை அழுக்காகி விடக் கூடாது என்பதற்காக.
தான் நனையாமல் இருப்பதற்காக, அந்தப் பையன் தன் தலையின் மேல், ஒரு குடையை சுமந்து கொண்டு இருந்தான். அந்தப் பெண் ஒரு பொக்கேயை வைத்திருந்தாள். அவர்கள் இருவரும், கைகளைக் கட்டியபடி நின்றார்கள்.
இந்தக் காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.
அவர்களைப் பார்த்து, நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஏன் அவர்கள் இருவரும், திருமணம் முடிந்தவுடனே, இந்த மழையில், இந்தப் பூங்காவுக்கு வந்தார்கள் என வியப்படைந்தேன். அவர்கள் விரும்பினால், வேறு உற்சாகமான இடத்திற்கு போய் இருக்கலாமே. அவர்கள் இருவரும், அங்கிருந்த, ஒரு உயர்ந்த மேடை அருகே, இருந்த, நினைவுச் சின்னத்தை நோக்கி சேர்ந்து நடந்து கொண்டு இருந்தார்கள். அந்த மலர்க் கொத்தை அங்கே வைத்து தங்கள் தலை வணங்கிட செய்து, மௌனமாக நின்று, பிறகு மெதுவாகத் திரும்பி நடந்தார்கள்.
நான் இந்தக் காட்சியை வெகு நேரமாக, ரசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அங்கு, என்ன நடந்து கொண்டு இருக்கிறது, என்பதை அறிந்து கொள்வதற்கு, தீவிர ஆவல் கொண்டேன்.
புதியதாகத் திருமணம் செய்த, அந்த தம்பதிகளின் அருகே, நின்று கொண்டு இருந்த, ஒரு வயதான மனிதர் மீது என் பார்வை விழுந்தது. அந்த வயதான மனிதரின் பார்வை, என் புடவையின் மீது விழுந்தவுடனே அவர் கேட்டார்; “நீங்கள் ஒரு இந்தியரா?” “ஆமாம், நான் இந்தியர்தான்” என்று அன்போடு பதில் அளித்தேன். எனவே நாங்கள் இருவரும் அன்புடன் பேசிக் கொண்டோம். இதே வேளையில், அவரிடம் கேட்பதற்காக, நான் சில கேள்விகளோடு காத்திருந்தேன். இந்த ஆர்வத்தோடு, அவரிடம், உங்களுக்கு எப்படி ஆங்கிலம் தெரியும்? என கேட்டேன்.
மிகப் பணிவாக, “நான், வெளி நாடுகளில் வேலை பார்த்தேன் “ என பதில் அளித்தார். இத்துடன், நான் அவரிடம், “ எதற்காக அந்த இளம் ஜோடிகள், திருமண நாளன்று இந்தப் போர் வீரர்களின் நினைவு இடத்திற்கு வந்திருக்கிறார்கள், என்பது பற்றி நீங்கள் எனக்குக் கூற முடியுமா?” என்று கேட்டேன்.
அவர் கூறினார், “இது ரஷ்யாவின், பாரம் பரிய வழக்கம். இங்கு திருமணங்கள், எப்போதுமே சனி அல்லது ஞாயிறு நடை பெறும்”. அவர் தொடர்ந்து விவரித்தார், “இங்கு இருக்கும் திருமண ரிஜிஸ்தர் அலுவலகத்தில், கை எழுத்து இட்டவுடன், திருமண ஜோடிகள், அருகில் இருக்கின்ற மிக முக்கியமான தேசிய நினைவுச் சின்னங்கள் இடத்திற்கு வருவார்கள். மழையோ, வெயிலோ –கால நிலை எவ்வாறு இருந்தாலும், அவர்கள் அன்று வருவார்கள்.
இந்த நாட்டின், ஒவ்வொரு இளைஞனும், கண்டிப்பாக, இரண்டு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அவனுடைய தகுதி எப்படி இருந்தாலும், அவன் திருமணத்தன்று, அவனது ராணுவ யூனிஃபார்மில்தான் இருக்க வேண்டும்.
நான் மிகவும் வியப்படைந்து, “ஏன், அங்கு இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது?” என்று கேட்டேன்.
இதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவர் கூறினார், “ இது நன்றியுணர்வை காண்பிப்பதற்கான அடையாளம். ரஷ்யாவில் நடந்த பல் வேறு போர்களில், எங்களது முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள். அந்தப் போர்களில் சிலவற்றில், நாங்கள் வெற்றி பெற்றோம்; சிலவற்றில் தோல்வி அடைந்தோம். ஆனால், அவர்களது தியாகங்கள், எப்போதும் தங்கள் நாட்டிற்காகவே இருந்தன. தாங்கள் இப்போது சுதந்திர ரஷ்யாவில், அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு காரணமாக இருந்த தங்கள் மூதாதையர்களை நினைவு படுத்தும் விதமாக, புதிதாக மணமான ஜோடிகள், இங்கு வந்து வணங்கி, அவர்களது ஆசிகளை வாங்கிச் செல்கிறார்கள்”.
திருமணத்தில் நடைபெறும், ஏனைய சடங்குகளை விட தேசப்பற்றுதான், மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வயதான நாங்களும் நம்புகிறோம்.
எனவேதான், இந்த பாரம்பரியமான வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கும் படி நாங்களும் வலியுறுத்துகின்றோம். அது, மாஸ்கோவிலோ, புனித பீட்டர்ஸ்பர்க்கிலோ அல்லது ரஷ்யாவில் எந்தப் பகுதியில் நடந்தாலும் சரிதான். எனவேதான், அவர்கள் திருமண நாளன்று அருகில் இருக்கும் போர் வீரர் நினைவு இடத்திற்கு செல்கிறார்கள்.
அந்த வயதான மனிதரிடம், பேசிக்கொண்டு இருந்த பிறகு, என் மனதில், ஒன்றே ஒன்று திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டு இருந்தது. அது என்னவெனில், நாம் இங்கு நம் குழந்தைகளுக்கு, என்ன கற்றுக் கொடுக்கிறோம்? நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில், நம் சுதந்திர தியாகிகளை நினைவு படுத்தும் விதமாக, ஏதாவது விதி முறைகளை வைத்திருக்கின்றோமா?
நம் நாட்டு, திருமணங்களின் போது, நாம் புடவைகள் வாங்குவதிலும்; நகைகளை வாங்க திட்டமிடுவதும், வாங்குவதும்; மிகப் பெரிய அளவில் உணவுக்காக மெனுக்களைத் தயார் பண்ணுவதிலும்’ பார்ட்டிகள் ஏற்பாடு பண்ணுவதிலும், ஆடல் பாடல்களிலும், இன்ன பிறவற்றிலும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறோம்.
நாம் பெரும்பாலும், எதைப் பற்றியும் ஒரு போதும் நினைத்துப் பார்த்தது இல்லை.
இந்த முழு சம்பவத்தையும் பார்த்த என் கண்கள் கண்ணீரால் நனைந்தன. நாம் ரஷ்யர்களிடம் இருந்து இந்த வழக்கத்தையும் சிறந்த கருத்தையும் கற்று கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.
நமது நாட்டிற்காக, உயிர்த் தியாகம் செய்த தியாகிகளை நாம் கௌரவப்படுத்தி மரியாதை செலுத்திட வேண்டும். இன்றைக்கு அல்லது நாளைக்கு மட்டுமல்ல; எப்போதுமே அப்படிச் செய்ய வேண்டும்.
தாஜி:
ஒரு புனிதமான செயல் நடக்கும் போது, அதில் இருந்து கிடைக்கும் சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உணர்வுறுநிலை தடை இன்றி வளரத் தொடங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக