லேபிள்கள்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.

 


(தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.}

 💙❤💚🚩

 நான் படித்ததில் பிடித்தது.

 உங்கள் அனைவரின் பார்வைக்கும்.


என் மனைவிக்கு உடல்

சொகமில்லாம போச்சு.

ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம்

பாத்தோம். ஆனாலும் காப்பாத்த

முடியல. மாசங்கள்

உருண்டோடுனாலும் அவளோட

இழப்பை என்னால ஜீரணிக்க முடியல.

போராட்டம், பொதுக்கூட்டம்னு என்

உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு

இருந்தாலும், மனசு அவளை

நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த

வேதனையைச் சுமந்துட்டேதான்

திரியுறேன்.

என்னை, என்னைவிட முழுசா

புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என்

வாழ்க்கையில எல்லா வகையிலும்

அவளோட பங்களிப்பு இருந்துச்சு.

அவ அப்பாவும் கம்யூனிஸ்ட்

கட்சிகாரர்தான். அதனால என்னை

ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா

இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா.

காசி பாரதி, ஆண்டாள்னு

எங்களோட ரெண்டு பொம்பளப்

புள்ளைகள வளர்த்து படிக்க

வெச்சது, ஆளாக்குனது

அவங்களோட எல்லா

தேவைகளையும் என்னை

எதிர்பார்க்காம அவளே

செஞ்சிருவா.

அரசியல் வாழ்க்கை, போராட்டம்,

காசு பணம் சேர்க்கத் துடிக்காத

மனசுனு என் போக்குக்கு என்னை

விட்டவ என் மனைவி. கட்சி

வேலைகள்ல திரிஞ்சிட்டு

வீட்டுக்குப் போகும்போது,

கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற

விதமா அந்த வீட்டை எனக்கானதா

வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப்

போனா, அவ இல்லாத அந்த

வெறுமையும் தனிமையும் ரொம்ப

கொல்லுது. தாங்கவே முடியாம

வருது. சுத்தி எத்தனையோ பேர்

இருந்தாலும், எனக்குனு யாரும்

இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே

இருக்கு அவளோட பிரிவு.

எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக்

கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு

திரும்புவேன்னு தெரியாத ஒரு

வாழ்க்கை என்னோடது.

உண்ணாவிரதம் இருக்கக்

கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க

வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை

வருத்தமாவோ, மறுப்பாவோ

சொல்லாம அனுப்பிவைப்பா. என்

புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு

வயசாயிருச்சு... அரசியல்

வேலைகளையெல்லாம் கொஞ்சம்

குறைச்சுக்கோங்கங்க'னு

சொன்னப்போகூட, என் மனைவி

அப்படி ஒருநாளும் எங்கிட்ட

சொன்னதே கிடையாது. ஏன்னா,

கட்சிப் பணிகள் இல்லாம என்னால

இருக்க முடியாதுனு அவளுக்குத்

தெரியும். ஆனா, 'நான்

இல்லாமயும் உங்களால இருக்க

முடியாது'ங்கிறதை இப்படிப்

பிரிவுல உணர்த்திட்டுப்

போயிட்டா.

எங்க கிளம்பினாலும், 'போய்

சேந்துட்டீங்களா?'னு ஒரு போன்

பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு

கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு

போன் வரும். இப்போ எதுவுமே

இல்ல. கண்ண மூடுனா முழுக்க

ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.

முன்னாடி நான் அசைவம்

சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா

சைவம்தான். அவ வைக்கிற மீன்

குழம்புல சோத்தை ஒரு பிடி

பிடிப்பேன். அவ வைக்கிற ரசம்

ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப்

பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு

செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து

இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா

சாப்பிடு'னு என் கல்யாணத்தை

ஒட்டியே சொல்லிட்டேன். அதனால

நாங்க சேர்ந்து சாப்பிடுவதே

குறைவுதான். ஆனாலும் நான்

சாப்பிடும்போது கூட உட்கார்ந்து

பேசிட்டு இருப்பா.

ஒரு சுவாரசியம் என்னனா நான்

ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான்

எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி.

புதுமணத் தம்பதியா நாங்க

பேசிக்கிட்ட விஷயங்கள்லாம்,

என்னோட ஜெயில்

அனுபவங்களாதான் இருந்துச்சு.

நிறைய கல்யாணத்தை தலைமை

தாங்கி நடத்திருக்கேன்.

அப்போவெல்லாம், 'மனைவியை

அதிகாரமா மிரட்டக் கூடாது.

அன்பா இருக்கணும், சமமா

நடத்தணும்'னு சொல்லித்தான்

ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில

ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு

சமத்துவத்தை நான் கொடுத்தாலும்,

அவ எனக்காக ரொம்ப

விட்டுக்கொடுத்து போயிருக்கா.

என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி

அவளுக்குத் தெரியும். என் மனசு

நினைக்கிற மாதிரியே அவங்களை

உபசரிப்பா.

ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா,

பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன்

சிறுகதைகள் பத்தி பேசுவா. நான்

எதையாவது படிக்காம

விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா

நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது

செய்தியைக் காட்டி, 'இதப்

பாத்தியளா?'னு கேட்பா.

'இல்லையே...'னு சொன்னா,

'இதக்கூடப் பாக்காம என்ன

படிக்கிய?'னு கேட்பா.

இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம்

படிக்கும்போது, 'எதையாச்சும்

படிக்காம விட்டுட்டா அதை

எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு

ரஞ்சிதத்தோட நினைவுகள் நான்

படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும்

பின்னிக்குது.

நான் சம்பாதிச்சுது என்னனு

எல்லாருக்கும் தெரியும்.

வெளியே போகும்போது

செலவுக்கு அவகிட்டதான் காசு

வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம்

நிலம் இருந்து அதுல அரிசி வரும்.

மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு

எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே

சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு

போனா. என் பிறந்தநாளுக்கு

துணிமணி எடுத்துக் கொடுப்பா.

அவளுக்கு, நான் வீட்டுல

இருந்தாலே பரிசுதான்னு

சொல்லுவா. எப்பவாச்சும்

டெல்லிக்குப் போனா அவளுக்கு

சேலை எடுத்துட்டு வருவேன்.

ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய

போயிட்டு நேரடியா வீட்டுக்கு

வர்றதா இருந்தா எதாவது பண்டம்

வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.


எங்க அப்பா, என் கூடப்

பொறந்தவங்களுக்கு எல்லாம்

அவங்கவங்க பேருல வீட்டை

எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை

மட்டும் என் மனைவி பேருலதான்

எழுதி வெச்சிருக்காரு. பொது

வாழ்க்கையில இருக்கேன்,

வீட்டையும் வித்து செலவு

பண்ணிடுவேனோனு பயம்

அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு.

சிறிது நேரம் மெளனமாக

இருந்துவிட்டு தொடர்ந்தார்.

ரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால

பைபிள் கதைகளை அடிக்கடி

சொல்லுவா. எல்லார்கிட்டயும்

அன்பா இருக்கணும், எல்லாரையும்

சமமா நடத்தணும்னு சொல்லுவா.

'நான் செத்துப் போயிட்டேன்னா,

நம்ம சொந்த ஊருலதான் அடக்கம்

பண்ணனும்னு'னு சொன்னா. அவ

ஆசைப்படியே செய்தேன். அவ

இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு

முன்னாடியே, அவ இனி

நாள்கணக்குலதான் என்கூட

இருக்கப்போறானு

தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல

ஆஸ்பத்திரியும் வீடுமாதான்

இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு,

என்னுல இருந்து பாதி உசுரு

கழண்டுபோன மாதிரி இருந்துச்சு.

இப்பக்கூட அப்படியேதான்

இருக்கேன்.

வயசான காலத்துல, பொண்டாட்டி

போனதுக்கு அப்புறம் புருஷன்

இருக்குறது கொடுமையினு

சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும்

புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு

துயரமானதுனு. என் மனசு

அவளுக்குத் தெரியும்னாலும்,

'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை

இருக்கும்போது அவகிட்ட எத்தனை

தடவை வார்த்தையில

சொல்லியிருக்கேன்னு தெரியல.

வருசா வருசம் காதலர் தினக்

கொண்டாட்டங்களை செய்தியாதான்

பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம்

படிக்கும்போது, ரஞ்சிதம்

முகம்தான் வந்துபோகுது. 

அவ நெனப்பை என்ன செய்ய?"


 -தோழர் நல்லக்கண்ணு

கணவன், மனைவி மருத்துவரின் ஆலோசனை

 


கணவருக்கு உடம்பு சரியில்லை. அவரை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகிறார் மனைவி. கணவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், பின்னர் மனைவிக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

 

* டெய்லி காலையில் மறக்காமல் சாப்பிட வைங்க.

 

* அவரை எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷமான மனநிலையில் வச்சுக்கோங்க.

 

* அவருக்குப் பிடிச்சதா, சுவையா சமைச்சுக் கொடுங்க.

 

* உங்க பிரச்சினைகளை அவரிடம் கொட்டி அவரை டென்ஷன் ஆக்காதீங்க.

 

* எப்பப் பார்த்தாலும் டிவி பாக்காதீங்க. பேஸ்புக் பாக்காதீங்க. வாட்ஸ்-அப் பாக்காதீங்க.

 

* நகை நட்டுனு கேட்டு நச்சரிக்காதீங்க. அவரை ஃபிரியா இருக்க விடுங்க. இதே மாதிரி ஒரு வருஷம் இருந்தா, உங்க வீட்டுக்காரர் நல்லாயிருவாரு. கவலைப்படாதீங்க"...

 

"ஓகே டாக்டர்.. நாங்க வர்றோம்".

 

வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்..

 

"ஆமா, டாக்டர் உன்னை தனியாக கூப்பிட்டு ஏதோ சொன்னாரே. என்ன சொன்னார்?".

 

"அதுவா... நீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டார்"..

புதன், 25 பிப்ரவரி, 2026

அந்நியர்களிடம் கருணை காட்டுவது கூடுதல் அல்ல… அது தான் வாழ்க்கையின் மையம்.

 



நான் ஒரு டாக்சி ஓட்டுநர்.

கடந்த வாரம் இரவு 8 மணிக்கு ஒரு வயதான மனிதரை காரில் ஏறியவுடன் சொன்னார்:

“இன்று இரவு ஐந்து இடங்களுக்கு என்னை கொண்டு செல்ல வேண்டும். ரூ.10,000 தருகிறேன். எதுவும் என்னிடம் கேட்க கூடாது. 

அவர் ஐந்து முகவரிகளை கொடுத்தார்.


முதல் இடம்: நகர புறப்பகுதியில் ஒரு வீடு.

அவர் காரிலேயே இருந்தார். அந்த வீட்டை பத்து நிமிடம் பார்த்துக்கொண்டே இருந்தார். அமைதியாக அழுதார்.

“சரி. அடுத்தது.”

நான் ஓட்டினேன்.


இரண்டாவது இடம்: ஆரம்பப் பள்ளி.

வெறிச்சோடி. இருள்.

அவர் இறங்கி விளையாட்டு பூங்காவுக்கு நடந்தார். ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்தார். இருபது நிமிடம் இருந்தார்.

திரும்பி வந்தார்.

“நான் இங்கே 38 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன். என் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த வேலை.”


மூன்றாவது இடம்: ஒரு சிறிய உணவகம். கடை மூடும் சமயம்.

உள்ளே சென்றார். காபி ஆர்டர் செய்தார். ஒரு மேசையில் தனியாக உட்கார்ந்தார். குடிக்கவே இல்லை. சுற்றி பார்த்துக்கொண்டே இருந்தார். பதினைந்து நிமிடம்.

திரும்பி வந்தார்.

“1967-ல் நான் என் மனைவியை முதலில் சந்தித்த இடம் இது.”


நான்காவது இடம்: கல்லறை.

அவர் ஒரு கல்லறை அருகே நின்றார். அதோடு பேசினார். என்ன சொன்னார் என கேட்கவில்லை. முப்பது நிமிடம்.

திரும்பி வந்தபோது கண்கள் சிவந்திருந்தது.

“என் மனைவி. மூன்று வருடம் ஆகிறது.”


ஐந்தாவது இடம்: மருத்துவமனை.

காரை நிறுத்தச் சொன்னார். “இது கடைசி இடம்.”


அவர் என்னைப் பார்த்தார்.

“இப்போ சொல்றேன். எனக்கு Stage-4 புற்றுநோய். இன்னும் சில சில நாட்கள் மட்டுமே இருக்கலாம். இன்று என் முழு வாழ்க்கையையும் கடைசியாக பார்க்கணும்னு நினைத்தேன்.”


நான் அங்கேயே அழ ஆரம்பித்தேன்.


“அந்த வீடு — என் குழந்தைகளை வளர்த்த இடம்.


அந்த பள்ளி — என் வாழ்க்கையின் அர்த்தத்தை கண்ட இடம்.


அந்த ஹோட்டல் — நான் காதலித்த இடம்.


அந்த கல்லறை — நான் மனைவியிடம் விடைபெற்ற இடம்.


இங்கே இந்த மருத்துவமனை — நான் இன்று அனுமதியாக போகும் இடம்.


அவர் 10,000 கொடுத்தார்.

“என் வாழ்க்கை முழுவதையும் எனக்காக ஓட்டிச்சென்றதுக்கு நன்றி. இனி என்னை நல்லவனாக பார்க்கும் கடைசி அந்நியர் நீங்கதான். அது மென்மையாக இருக்கணும்னு நினைத்தேன். நீங்க அதை மென்மையாக்கிட்டீங்க.”

நான் பணத்தை மறுத்தேன்.


அவர் வலியுறுத்தினார்.

“தயவு செய்து. இதை கொடுக்க எனக்கு யாரும் இல்ல. என் குழந்தைகள் என்னோட பேசவே மாட்டாங்க. நண்பர்கள் யாரும் இல்லை. மூன்று மணி நேர அன்பு நீங்க தந்தீங்க. அது 10,000-க்கும் மேலானது.”


திரும்பி கேட்டார்: “உங்க பெயர்?”

“முகிலன்.”

“நன்றி, முகிலன். என் வாழ்க்கையின் கடைசி நல்ல விஷயம் நீங்க.”

அவர் மருத்துவமனைக்குள் நடந்துசென்றார்.


நான் காரில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கதறி அழுதேன்.

அடுத்த நாள் மீண்டும் சென்றேன்.

“Mr. Stephen. Room 412.”

மலர்கள் கொண்டு சென்றேன்.

அவர் படுக்கையில் இருந்தார். என்னைப் பார்த்து சிரித்தார்.

 எப்படி இருக்கீங்க?”

“இறக்கிறேன்… ஆனா நேத்து என் வாழ்க்கையை பார்த்துட்டேன்.”

நாங்கள் இரண்டு மணி நேரம் பேசினோம் —

அவரின் மனைவி, மாணவர்கள், தொடர்பு கொள்ளாத குழந்தைகள், வாழ்ந்த வாழ்க்கை…


இரண்டு வாரங்கள் தினமும் சென்றேன். காபி கொண்டு சென்றேன். செய்தி வாசித்துக் காட்டினேன். சில நேரம் அமைதியாக உட்கார்ந்தேன்.

அவர் எல்லாம் சொன்னார் — வருத்தங்கள், சந்தோஷங்கள், மறுபடியும் வாழ நினைக்கும் தருணங்கள்.


ஒருநாள் சொன்னார்:

“நான் தனியாக இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நீ இருக்கிறாய்”

நான் அவரது கையை பிடித்தேன்.

“நீங்க தனியா இறக்கமாட்டீங்க.”

அவர் அழுதார்.

“என்னை பார்த்ததற்கு நன்றி. நான் யாருக்கும் தெரியாதவனாக இருந்தேன்”

செவ்வாய்க்கிழமை காலை 4:28.

Mr. Stephen இறந்தார்.

அவரது கையை பிடித்தபடியே நான் இருந்தேன்.


அவரது கடைசி வார்த்தைகள்:

“மக்களிடம் சொல்லு… அந்நியர்களை உண்மையாகப் பாருங்கள். எல்லாரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சீக்கிரம். சிலர் மெதுவாக. ஆனாலும் எல்லாரும் ஒரே பாதை. அந்த பாதையில் கருணையா இருங்கள். நீ கருணையா இருந்தாய். என் கடைசி நாட்களை காப்பாற்றினாய்.”

அவர் கண்களை மூடினார்.

அவரது இறுதிச்சடங்கில் ஆறு பேர் மட்டுமே —

நான், மூன்று நர்ஸ்கள், ஒரு வழக்கறிஞர், ஒரு பழைய மாணவன்.


“Mr. Stephen எனக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுத்தார்.

ஒவ்வொரு அந்நியரும் ஒருவரின் முழு உலகம்.


ஒவ்வொரு பயணிக்கும் ஒரு கதை.

நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கிறார்கள்… யாராவது அவர்களை கவனிக்க வேண்டும் என நம்புகிறார்கள்.

அவர் 10,000 கொடுத்து தனது வாழ்க்கை முழுவதையும் பார்க்கச் சொன்னார். ஆனால் அவர் எனக்கு அதைவிட பெரிய ஒன்றை கொடுத்தார் — அந்நியர்களிடம் கருணை காட்டுவது கூடுதல் அல்ல… அது தான் வாழ்க்கையின் மையம்.

ஏனெனில் நாமெல்லாம் அந்நியர்கள்தான்…

யாராவது நின்று… பார்த்து… கேட்டு… நம்முடன் இருந்துவரை.”


அந்த 10000-ஐ நான் இன்னும் செலவழிக்கவில்லை. என் கார் க்ளோவ் பாக்ஸில் வைத்திருக்கிறேன் — அவர் நினைவாக.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

AI பயோமெட்ரிக் அடையாள மோசடி.

 

புதிய மோசடி முறை – மிகவும் அபாயம் ⚠️

30 நிமிடங்களில் உங்கள் வாழ்க்கை நிதியாக சிதறி போகலாம்.

இது சாதாரண தொலைபேசி மோசடி அல்ல — இதை விட மிகவும் ஆபத்தானது.

அவர்கள் உங்கள் பணம், கடவுச்சொல் அல்லது நம்பிக்கை வேண்டாம்.

அவர்கள் உங்கள் அன்பும் உதவி மனப்பான்மையும் மட்டுமே விரும்புகிறார்கள்.

சமீபத்தில், மால்கள், மெட்ரோ நிலையங்கள், மார்க்கெட்டுகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒரு புதிய “உதவி கேட்கும் மோசடி” தொடங்கியுள்ளது.

மோசடிகாரர்கள் பொதுவாக நன்றாக உடையணிந்த நடுத்தர வயது அல்லது முதியவர்கள் போல இருப்பார்கள்.

அவர்கள் சொல்வார்கள்:

“எனக்கு போன் பயன்படுத்த தெரியாது”

“என் பென்ஷன் / சப்ஸிடி பார்க்கணும்”

“தவறான பக்கம் ஓபன் ஆகிவிட்டது” என்று கூறி, அவர்களின் போனை பயன்படுத்த உதவி கேட்பார்கள்.

ஆபத்தான பகுதி என்ன தெரியுமா?

நீங்கள் போனை கையில் எடுத்த உடனே, அது பெரும்பாலும்:

ஏற்கனவே வீடியோ கால் ஆனிருக்கும்

அல்லது

ஸ்கிரீன் ரெக்கார்டிங் + முகஅடையாள அனுமதி இயக்கப்பட்டிருக்கும்.

மற்றொரு பக்கத்தில் யாரோ உங்களை நேரடியாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள் — ஆனால் உங்கள் பயோமெட்ரிக் தகவல்கள் திருடப்படுகின்றன.

இது சாதாரண மோசடி இல்லை.

இது ஒரு AI பயோமெட்ரிக் அடையாள மோசடி.

அவர்களுக்கு உங்கள் பணம் வேண்டாம்.

அவர்களுக்கு நீங்கள் தான் வேண்டும்.

நீங்கள் செய்யும் விஷயங்கள்:

போனை தொடுவது → விரல் ரேகை

எண்கள் அல்லது OTP வாசிப்பது → குரல்

கேமராவை பார்த்து பேசுவது → முகஅடையாளம்

இந்த மூன்று முக்கிய அடையாளங்களும் திருடப்படலாம்.

நவீன AI மூலம் உங்கள் டிஜிட்டல் நகல் (Digital Clone) உருவாக்க முடியும்.

அடுத்து என்ன நடக்கும்?

மோசடிகாரர்கள் உங்கள் டிஜிட்டல் நகலை பயன்படுத்தி:

ஆன்லைன் லோன்

கன்ச்யூமர் ஃபைனான்ஸ்

கிரெடிட் கேஷ் அவுட்

எல்லாவற்றையும் உங்கள் பெயரில் எடுத்து,

முகம் + குரல் சரிபார்ப்பை கடந்து விட முடியும்.

30 நிமிடங்களில், நீங்கள் பெற தகுதியான அனைத்து கடனும் எடுக்கப்பட்டிருக்கும்.

பாங்க் மெசேஜ் வந்த பிறகு தான் தெரியும்:

உங்கள் பணம் போகவில்லை…

ஆனால் நீங்கள் லட்சங்கள் அல்லது கோடிகள் கடனில் மூழ்கியிருக்கலாம்.

இந்த 3 விதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

1️⃣ அந்நியவர்களின் போனை பயன்படுத்த உதவி செய்யாதீர்கள்.

தொடாதீர்கள், கிளிக் செய்யாதீர்கள், பார்க்காதீர்கள், எதையும் வாசிக்காதீர்கள் — “ஒரு கிளிக் மட்டும்” என்றாலும் கூட.

2️⃣ தெரியாத வீடியோ கால் வந்தால் உடனே துண்டிக்கவும்.

கேமராவை பார்த்து பேசச் சொன்னால் ஒருபோதும் ஒத்துழைக்காதீர்கள்.

3️⃣ இந்த தகவலை முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நல்ல மனம் கொண்டவர்களுடன் பகிருங்கள்.

மோசடிகாரர்கள் இப்போது நல்ல மனசுடையவர்களை தான் குறிவைக்கிறார்கள்.

இறுதி நினைவூட்டல்:

“நான் சிக்க மாட்டேன்” அல்லது “நான் புத்திசாலி” என்று நினைக்காதீர்கள்.

அந்த நம்பிக்கையும் அன்பும் தான் மோசடிகாரர்கள் பயன்படுத்தும் ஆயுதம்.

இந்த தகவலை பகிருங்கள்.

**ஒரு பகிர்வு = ஒரு உயிர் பாதுகாப்பு

மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று!

 



📢 முதுமையில் தனித்து விடப்படாமல்,எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க,

 இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்

 01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்!பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள், நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில்,நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்!

🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும்.


🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள்.


💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: 30 வருடங்கள் உழைத்துச் சேர்த்த ஓய்வூதியத் தொகையை (Pension) பிள்ளைகளின் தொழிலுக்காக கொடுத்துவிடாதீர்கள். இறுதியில் மருந்து வாங்குவதற்கும் அந்த பிள்ளைகளிடமே கையேந்த வேண்டிய நிலை வரலாம்.


☝️ 05. பிள்ளைகளின் வீடுகளில் ஒட்டிக்கொண்டிருக்காதீர்கள்: "நமது பிள்ளைகள்தானே" என்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள். அளவுக்கு மிஞ்சி நெருங்கினால் உங்கள் அன்பு அவர்களுக்கு "தொல்லையாக" மாறும். உங்களுக்கென ஒரு சிறு இடத்தைத் தேடிக்கொண்டு சுதந்திரமாக இருங்கள்.


🥰⛰️ 06. யாத்திரை செல்ல பிள்ளைகள் வரும் வரை காத்திருக்காதீர்கள்: "பிள்ளைகளுக்கு லீவு கிடைக்கும்போது என்னை அழைத்துச் செல்வார்கள்" என்று காத்திருக்காதீர்கள். அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது உங்களால் நடக்க முடியாமல் போகலாம். தெம்பு இருக்கும் காலத்திலேயே தனியாகவாவது பிடித்த இடங்களுக்குச் சென்று வாருங்கள்.


😋🍲 07. சாப்பிட நினைப்பதை இன்றே சாப்பிடுங்கள்: உங்கள் துணைக்கு (மனைவி/கணவன்) பிடித்தமானதை இன்றே வாங்கிக் கொடுங்கள். இறந்த பிறகு சவப்பெட்டியின் அருகே சோற்றுத் தட்டை வைத்து "அவருக்கு இது ரொம்பப் பிடிக்கும்" என்று அழுவது ஒரு கேலிக்கூத்து!


🥰🛋️ 08. ஓய்வை உருவாக்கிக் கொள்ளுங்கள்: இறக்கும் வரை வேலைகளைக் குவித்து வைத்துக் கொள்ளாதீர்கள். காலை முதல் இரவு வரை ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் நீங்கள் வென்றது எதுவுமே இருக்காது. உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுங்கள்.


☝️✨️😴 09. தூக்கத்தைப் போன்ற மருந்து வேறில்லை: தேவையற்ற தூக்கமின்மையைக் குறைத்து, நிம்மதியாகத் தூங்குங்கள். நீங்கள் நோய்வாய்ப்படும்போது உங்கள் வலியை யாரும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், அதை நீங்கள் தனியாகவே அனுபவிக்க வேண்டும்.


🌘 10. "தனியாக" வந்ததை மறக்காதீர்கள்: யாராவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பைக் குறைக்கப் பழகுங்கள். உங்கள் நிழல் கூட உங்களைக் கைவிடும் ஒரு நாள் வரும். இறப்பதும் தனியாகத்தான், அதனால் தனியாக மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.


மகிழ்ச்சி என்பது யாரோ தருவதல்ல, அது நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய ஒன்று!

புதன், 18 பிப்ரவரி, 2026

Chand Baori, located Jaipur, Rajasthan, is one of the world's largest and deepest stepwells

 



Chand Baori, located Jaipur, Rajasthan, is one of the world's largest and deepest stepwells
Chand Baori, located in Abhaneri village near Jaipur, Rajasthan, is one of the world's largest and deepest stepwells, built in the 9th century by King Chanda of the Nikumbha Dynasty. It features 3,500 narrow steps over 13 stories, descending roughly 30 meters (100 feet) to conserve water and provide a cool, social gathering spot.
Key Features and History
  • Location: Abhaneri, Dausa district, Rajasthan, near the Harshat Mata Temple.
  • Purpose: Designed to harvest rainwater and provide a reprieve from the intense, dry heat, as the air at the bottom is 5-6°C cooler than the surface.
  • Architecture:
     It consists of a square, four-sided structure with symmetrical, geometrical steps descending to a water source
    . It includes a pavilion, resting chambers for royalty, and intricate carvings
    .
  • Structure: It measures approximately 100 feet deep with 13 stories, making it an architectural marvel of the 8th/9th century.
  • Significance: It is often featured in films and is considered a must-see, historic attraction in India.

The stepwell is a stunning example of early engineering, showcasing how ancient civilizations managed water resources in arid climates.

கும்பகோணம் அருகே திருநல்லூரில் அமைந்துள்ள பஞ்சவர்ணேஸ்வரர் தினமும் 5 முறை நிறம் மாறும்.

 


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநல்லூரில் அமைந்துள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் (கல்யாணசுந்தரேஸ்வரர் கோயில்) ஒரு புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்து மூலவர் தினமும் ஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் அதிசயமும் (பஞ்சவர்ணேஸ்வரர்), மாடக்கோயில் அமைப்பும், அமர்நீதி நாயனார் வரலாறும் இக்கோயிலின் சிறப்புகளாகும்.
முக்கிய அம்சங்கள்:
  • மூலவர்: ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) -  தினமும் 5 முறை நிறம் மாறும்.
  • அம்மன்: கிரிசுந்தரி (பஞ்சவர்ணேஸ்வரி).
  • சிறப்பு: சிவன் ஐந்து நிறங்களில் (செம்பு, சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை, பன்ணிறம்) காட்சி தருவதாக நம்பப்படுகிறது.
  • அமைவிடம்: கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், வலங்கைமான் வட்டத்தில், பாபநாசத்திற்கு அருகில் உள்ளது.
  • வரலாறு: கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில். சம்பந்தர், அப்பர் பாடிய தலம்.
  • சிறப்பு வழிபாடு: இறைவனுக்கு 'சப்தசாகரம்' என்னும் தீர்த்தமும், வில்வம் தல விருட்சமும் உள்ளது.
  • நேரம்: காலை 7.30 - மதியம் 12.00, மாலை 5.30 - இரவு 8.00.

இத்தலம் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. அமர்நீதி நாயனாரை சோதித்து ஆட்கொண்ட தலம் இதுவாகும்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

ராகவா லாரன்ஸ் மனிதருள் மாணிக்கம்

 


ராகவா லாரன்ஸ் மனிதருள் மாணிக்கம் 

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனராகப் புகழ்பெற்று, பல சமூக சேவைகளைச் செய்து வருவதால் "மனிதருள் மாணிக்கம்" என்றும் "வாழும் கடவுள்" என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், மற்றும் தனது சொந்த வீட்டைப் பள்ளியாக மாற்றுவது போன்ற பணிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார் Wikipedia,.
ராகவா லாரன்ஸ் பற்றிய முக்கிய குறிப்புகள்:
  • சமூக சேவை: 2015-ல் அப்துல் கலாம் பெயரில் அறக்கட்டளையை நிறுவி, ₹1 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்து பல நற்பணிகளைச் செய்தார்.
  • குழந்தைகளுக்கான உதவி: லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்ய உதவியுள்ளார்.
  • மாற்றுத்திறனாளிகள் ஆதரவு: மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவித்து, சினிமா மற்றும் நடனத்தில் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
  • ஜல்லிக்கட்டு போராட்டம்: 2017-ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கு உணவு, மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளைச் செய்து தந்தார்.
  • கல்விப் பணி: சொந்த வீட்டை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியாக மாற்றியுள்ளார்.

தன் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டு, பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

மாத்தூர் தொங்கு பாலம் - கன்னியாகுமரி மாவட்டம்


                          
    மாத்தூர் தொங்கு பாலம்

மத்தூர் தொங்கும் தொட்டி, ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் நீளமான பள்ளத்தாக்கு பாலமாகும், இது 115 அடி உயரமும் ஒரு கிலோமீட்டர் நீளமும் கொண்டது. 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியுள்ளது, மேலும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். இது திருவட்டார் பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள அருவிக்கரை வருவாய் கிராமத்தின் குக்கிராமமான மத்தூரில் அமைந்துள்ளது.

               இந்தப் பாலம், பறையாறு ஆற்றின் குறுக்கே மாத்தூரில் ரூ.12.90/- லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் உள்ள பள்ளக் கால்வாய் (பட்டணம்கல் கால்வாய்) மலையின் ஒரு பக்கத்திலிருந்து மலையின் மறுபக்கத்திற்கு பாசனத்திற்காக தண்ணீரைக் கொண்டு செல்கிறது. பள்ளக் கால்வாய் ஏழு அடி உயரமும் ஏழு அடி ஆறு அங்குல அகலமும் கொண்டது. இந்தக் கால்வாய் 28 பெரிய தூண்களால் தாங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த திரு. கே. காமராஜின் அயராத முயற்சியால், வறட்சி நிவாரண நடவடிக்கையாகவும், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களில் விவசாய மேம்பாட்டிற்காகவும் இந்தக் கால்வாய் கட்டப்பட்டது. மாவட்ட நிர்வாகம் பாலத்தின் மேலிருந்து கீழ் வரை படிக்கட்டுகளை அமைத்துள்ளது, மேலும் இங்கு குழந்தைகள் பூங்கா மற்றும் குளியல் தளங்களையும் கட்டியுள்ளது.

சனி, 7 பிப்ரவரி, 2026

கர்ப்பிணி கோலத்தில் சீதை; ஒரு ராமாயண அதிசயம்! கோயம்பேடு பெயரின் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு.

 


கர்ப்பிணி கோலத்தில் சீதை... மரவுரி தரித்த ராமன்! சென்னையின் இதயப்பகுதியில் ஒரு ராமாயண அதிசயம்! 

ராமாயண காவியத்தின் கிளைக்கதைகள் பல இடங்களில் நடந்திருந்தாலும், அன்னை சீதை தன் பிள்ளைகளான லவ-குசர்களுடன் வாழ்ந்த புண்ணிய பூமி நம்ம சென்னையில் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்!

இந்த ஆலயத்தின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகளை விரிவாகப் பார்ப்போம்:

📍 கோயம்பேடு - பெயரின் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறு.

ராமபிரான் அசுவமேத யாகம் நடத்தியபோது, அதன் குதிரையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்த லவனும் குசனும் பிடித்துக் கட்டினர்.

கோ - அரசன் (ராமர்)

அயம் - இரும்பு

பேடு - வேலி அதாவது, அரசனின் குதிரையை இரும்பு வேலி அமைத்துக் கட்டி வைத்த இடம் என்பதே நாளடைவில் மருவி 'கோயம்பேடு' என்றானது.

எங்கும் காணாத ராமரின் அபூர்வ கோலம்.

பொதுவாக எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் ராமபிரான் பட்டாபிஷேகக் கோலத்திலோ அல்லது வில் ஏந்திய வீரக் கோலத்திலோ தான் காட்சி தருவார். ஆனால், இங்கு சீதையைத் தேடி வந்தபோது இருந்த அதே 'மரவுரி தரித்த' (வனவாசி) கோலத்தில் மிக எளிமையாகக் காட்சி தருகிறார். ராமரின் இந்தத் தோற்றத்தைக் காண்பது மிகவும் அரிது.

அன்னை சீதையின் தாய்மைக் கோலம்.

இத்தலத்தின் மற்றொரு மிக முக்கிய சிறப்பு, இங்கு அன்னை சீதை கர்ப்பிணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் சீதை தங்கியிருந்த காலத்தை இது நினைவுபடுத்துகிறது. தாய்மைக்காக ஏங்கும் பெண்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பிரார்த்தனை தலம்.

ஏன் இங்கு லட்சுமணனும் அனுமனும் இல்லை?

ராமர் சந்நிதி என்றாலே அங்கே லட்சுமணனும் அனுமனும் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு லவ-குசர்களுடன் ராமர் போர் புரிந்தபோது, லட்சுமணனும் அனுமனும் எதிரெதிர் துருவங்களாக நின்ற தலம் இது. எனவே, மூலவர் சந்நிதியில் ராமரும் சீதையும் மட்டுமே தனித்து எழுந்தருளியுள்ளனர். (அனுமனுக்குத் தனியே தீர்த்தக்கரையில் சந்நிதி உள்ளது).

🌳 விசேஷ வழிபாடுகளும் பலன்களும்.

புத்திர பாக்கியம்: அறிவான மற்றும் வீரமான ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று விரும்பும் தம்பதிகள் இங்கு வந்து சீதா பிராட்டியிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.

திருமணத் தடை நீங்க: 'பார்வதி சுயம்வர விருட்சம்' (வில்வம் மற்றும் வேம்பு இணைந்த மரம்) இங்குள்ளது. திருமணத் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் இந்த மரத்திற்குத் தாலி கட்டி வேண்டினால் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.

பித்ரு தோஷ நிவர்த்தி: லவ-குசர்களால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது காசிக்கு நிகரான பலனைத் தரும் எனக் கருதப்படுகிறது.

📖 ஆன்மீகத் தகவல்கள்

மூலவர்: வைகுண்டவாசப் பெருமாள் (பக்தவச்சலர்)

தாயார்: கனகவல்லி தாயார்

பழமை: அருணகிரிநாதரால் 'கோசைநகர்' எனத் திருப்புகழில் போற்றப்பட்ட தலம்.

தரிசன நேரம்: காலை 5.30 - 12.00 | மாலை 4.30 - 8.30

சென்னையில் இருப்பவர்கள் தவறவிடக்கூடாத தலம் இது. இந்த வாரமே உங்கள் குடும்பத்துடன் சென்று ராமபிரானின் அருளைப் பெற்று வாருங்கள்! ✨

மருந்தாகும் பழைய சாதம்!

 


பழைய சாதம் (பழஞ்சோறு)
என்பது முந்தைய நாள் வடித்த சாதத்தில் நீர் ஊற்றி, இரவு முழுவதும் நொதித்தல் (Fermentation) முறைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சத்துமிக்க உணவாகும். 

இது உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், மலச்சிக்கலை நீக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் வைட்டமின் B12 குறைபாட்டைச் சரிசெய்தல் போன்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

பழைய சாதத்தின் மருத்துவப் பயன்கள்:
  • குடல் ஆரோக்கியம்: வயிற்று எரிச்சல், அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளைத் தீர்த்து, குடலுக்குக் குளிர்ச்சி அளிக்கிறது.

  • சத்துக்கள்: நொதித்தல் காரணமாக, பழைய சாதத்தில் வைட்டமின் 
    B12cap B sub 12
    மற்றும் பிற சத்துக்கள் அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.

  • உடல் வெப்பநிலை: கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைத் தணித்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

  • மலச்சிக்கல்: நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை நீக்குகிறது.

  • ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

உண்ணும் முறை:
  • இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி மூடி வைத்த, கைக்குத்தல் அரிசி சாதம் சிறந்தது

  • மறுநாள் காலையில் அந்த நீருடன் சின்ன வெங்காயம், மோர் சேர்த்து உண்பது சிறந்தது.
குறிப்பு: பழைய சாதத்தை அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது, மதியம் வரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது, ஏனெனில் அது அதிக குளிர்ச்சியைத் தரக்கூடும். 

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths