இந்த உலகத்தில் குறைகளே இல்லாத குடும்பம் கிடையாது.
வேதனையும், வலியும் இல்லாத மனிதன் கிடையாது. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை
மட்டுமே அனுபவித்தவனும் கிடையாது. இதுவே உலகின் இயல்பு நிலை
என்பதை அறிந்து வாழ பழகி கொள்ளுங்கள்.
நேருக்கு நேர் இனிமையாக பேசிவிட்டு, பின்னர் போகவிட்டு புறம் பேசும் மனிதர்களை தவிர்த்து
விடுங்கள். அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது, பசும்பாலில்
கடும் விஷத்தைக் கலந்து பருகுவதற்கு ஒப்பாகும்.
இருப்பதைக் கொண்டு
திருப்தி கொள்ளும் மனம், தன் வாழ்க்கைக்கு ஏற்ற தக்கத் துணை மற்றும் தன் அறிவுரைகளைக்
கேட்டு நடக்கும் பிள்ளைகள் - ஆகிய மூன்றையும் பெற்றவன் தான் வாழும் காலத்திலே
சொர்க்கத்தை அடைகிறான்.
மிகப்பெரிய குரு மந்திரம். உன் ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துக்
கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும்.
நீயே காப்பாற்ற முடியாத
உன் ரகசியத்தை மற்றவர்கள் வெளியே
சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.
கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களை தேர்வு செய்கிறேன்.
ஏனென்றால் அவர்களால் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க
முடியும்.
இன்று கடினமாக இருக்கலாம். நாளை
இன்னும் மோசமாக இருக்கலாம்.
ஆனால் நாளை மறுநாள்
பிரகாசமான நாளாக இருக்கும்... நம்பிக்கையை
இழக்க வேண்டாம்.