லேபிள்கள்

வியாழன், 10 ஏப்ரல், 2025

பிரச்சனைகள்,அவை விடுவிக்கும் சவால்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கிடைக்கும் அற்புதமான வாய்ப்புத் தான்

 பிரச்சனைகள்,அவை விடுவிக்கும் சவால்கள்

என்பவை பயமுறுத்துபவையோ, தலையைச் சீவி விட்டுப்

போ அல்ல,,! திறமைகளை வளர்த்துக்

கொள்ளக் கிடைக்கும்

அற்புதமான வாய்ப்புத் தான்.  பிரச்சனை என்று பார்த்தால் பிரச்சனை தான். அதே நேரம் அதில் இருந்து பாடம் கற்றுக்

கொள்ளத் தயாராக

இருப்பவர்களுக்கு அது ஒரு கற்றுக் கொள்ளும் 

அனுபவம் மட்டுமல்ல

அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்குக் 

கொண்டு சேர்க்கும்

ஏணியாகவும் இருக்கிறது.


வீழ்வதும் அழகே , நீரருவியாய் இருந்தால்

தலை தாழ்வதும் அழகே,

நெற்கதிராய் இருந்தால்

தொடர் தோல்விகள் அழகே, அலைகடலாய் இருந்தால் சிதறல்கள்

அழகே. விண் மீனாய் இருந்தால் கதறலும் அழகே, கார்முகிலாய் இருந்தால் அழகின் உருவாய் இருப்பதை

எல்லாம் அழிவின் உருவாய் பார்ப்பது உனது பிழையோ அல்லது மனிதா,! நீயே

இயற்கையின் இலக்கணப் பிழையோ.?


ஒரு செயல் தொடங்கும்

முன் தயங்காதே, தொடங்கிய பின் நடுங்காதே. இடையில் நீ உறங்காதே, வேதனை

கண்டு பதுங்காதே, சோதனை வரும் துவளாதே, சாதனை செய்வாய் கலங்காதே!

ஒரு நாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டுமே முடியும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

  ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...