நம்ம பயபுள்ள ஒருத்தன்
எந்த பொருளா இருந்தாலும்
அதை ஆன்லைன்லதான் வாங்குவான்
கடைக்கு போய் வாங்குரதே இல்ல...
ஆன்லைன்ல வாங்குரதையே
பெருமையா நினைச்சான்...
கடையில் போய் வாங்குரவங்களை
எல்லாம் நம்ம பய கலாய்ப்பான்
உலகம் எவ்வளவு முன்னேறி இருக்கு
இன்னும் கடையில் போய்
க்யூவுல நின்னு வாங்கிட்டு
இருக்கீங்களா அப்படின்னு.....
இவன்கிட்ட பேச்சு வாங்குவன்
எல்லாத்துக்கும் ஒரே ஒரு
எண்ணம்தான் மனசுல
ஓடிட்டே இருந்துச்சு
மவனே என்னைக்காவது
மாட்டுவடா பம்பரகட்ட மண்டையான்னு
அந்த நாளும் வந்துச்சு
ஒரு கல்யாணத்துக்கு போகணும்னு
நம்ம பயபுள்ள புதுசா
ஒரு ஜோடி செருப்பு ஆர்டர் போட்டான்
ஆடம்பரமான செருப்புதான்
விலை 2000 ரூபாய்.....
ஆர்டர் பொருளும் வந்துச்சு
பிரிச்சு பாத்த பயபுள்ள
அதிர்ச்சி ஆகிட்டான்....
காரணம் என்னவென்றால்
செருப்புலாம் வந்துருச்சு
ஆனால் இரண்டும்
வலது கால்ல போடுரதே
அவனுக்கு அதிர்ச்சிதான்
ஆனால் மத்தவங்களுக்கு
சிரிப்போ சிரிப்பு.....
ஏண்டா டேய் இத்தனை நாள்
எங்களை திட்டிட்டு இருந்தயே
இப்போ என்னடா செய்வன்னு கேக்க...
நம்ம பயபுள்ள திருதிருன்னு முழிக்க
மொத்த ஊரும் கழுவி கழுவி
ஊத்திட்டே இருந்துச்சாம்....🤣
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக