லேபிள்கள்

சனி, 27 செப்டம்பர், 2025

இளமையில் கொடுமை வறுமை, முதுமையில் கொடுமை தனிமை.


கூட்டு குடும்பம் சொர்க்கம்  

முதியோர் இல்லம்  நரகம் என்கிறார்கள் சிலர்.

செம ஜோக்.. 

பேரன் பேத்தி களுடன் விளையாட வேண்டுமாம். 

உங்கள் பேரன் பேத்திகள் மூன்று வயது வரை தான் உங்கள் பேச்சை கேட்டு விளையாடுவார்கள்.

பிறகு கம்ப்யயூட்டரும் செல்லும் தான்.. ஏதாவது பேசினால் ஹை.. அவ்வளவு தான்.. 

இது நான் பல வீடுகளில் சென்று அனுபவத்தில் கண்டது.. 

வீட்டில் உள்ள மகன் மகளும் வேலைக்கு செல்பவர்கள்.. வீக் எண்ட் வெளியே போய் விடுவார்கள்.. அந்த ஓட்டல்களில் நீங்கள் சாப்பிடும் ஐயிட்டம் இருக்காது.. இருந்தாலும் விலை அதிகம்.. நீங்கள் கஷ்டப்பட்டு வந்திருபீர்கள்.. மனம் ஒப்பாது. 

வேலை நாளில் எல்லோரும் சென்று விட்டால் உங்களுக்கு தனிமைதான். 

இளமையில் கொடுமை வறுமை

முதுமையில் கொடுமை தனிமை. 

உங்களுக்கு பென்ஷன் வருகிறதா? போதவில்லை? 

பெற்ற குழந்தைகளிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்

அவர்களை தனியே விடுங்கள்.. வாழ்க்கையை அனுபவிக்க ட்டும்.. நினைத்த இடங்களுக்கு போய் வரட்டும்.  உங்களை தனியே விட்டு போக முடியாது. 

உங்களால் அவர்களுக்கு ஈடு கொடுத்து சுற்ற முடியாது  

ஒரே வழி சீனியர் இல்லம் தான்

நீங்கள் முதியோர் இல்லம் சென்று உங்கள் வயதொத்வர்களுடன் ஆடுங்கள்.. பாடுங்கள்.. பழைய கதைகளைப் பேசுங்கள்.. நாக்கை அடக்கி போட்டதை  சாப்பிடுங்கள்.. ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.. சாதாரண உடற்பயிற்சி செய்யுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துங்கள்.. 

விலாம்பழத்து ஓட்டினைப்போல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இளமையில் கொடுமை வறுமை, முதுமையில் கொடுமை தனிமை.

கூட்டு குடும்பம் சொர்க்கம்   முதியோர் இல்லம்  நரகம் என்கிறார்கள் சிலர். செம ஜோக்..  பேரன் பேத்தி களுடன் விளையாட வேண்டுமாம்.  உங்கள் பேரன் பே...