லேபிள்கள்

வியாழன், 2 அக்டோபர், 2025

கோபுர கலசத்தில் தானியங்களை பயன்படுத்துவதன் காரணம்?

 கோபுர கலசத்தில் தானியங்களை பயன்படுத்துவதன் காரணம்?



மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது. 

என்ன காரணம் என்றால் கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கின்றன.

நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் ஆகியவை கோபுர கலசத்தில் இருக்கும். 

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக  இருக்கும். காரணம் என்ன வென்றால் "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றது என அந்தகாலத்திலேயே அறிந்து வைத்துள்ளார்கள். இந்த நுட்பம்  மிகவும் சரியான விசயம் என இப்போதுள்ள அறிவியல் கூறுகிறது. 

இயற்கை சீற்றத்தினால் விவசாயங்கள் அழிந்து போனாலும். 

மீண்டும் விவசாயம் செய்ய தானியங்களை கோபுர கலத்திலிருந்து எடுத்து பயன்படுத்தலாம்.

இந்த தானியங்களின் திறன் 12 வருடங்கள் வரை தாக்கு பிடிக்கக்கூடியது அதற்கு பிறகு தானியங்கள் தன் சக்தியை இழந்துவிடும் என்பதால் பனிரெண்டு  வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோபுர கலசத்தில் தானியங்களை பயன்படுத்துவதன் காரணம்?

  கோபுர கலசத்தில் தானியங்களை பயன்படுத்துவதன் காரணம்? மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாத...