லேபிள்கள்

செவ்வாய், 7 அக்டோபர், 2025

இலவச கல்வி மற்றும் தங்கும் விடுதி தீபம் மாணவர் மாணவியர் விடுதி விருதுநகர்

 


விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊரில் இருந்து 30 KM தொலைவில்  அழகாபுரி - வத்திராயிருப்பு  சாலையில்  (சதுரகிரி  சாலை ) அடைக்கலப்புரம் வெள்ளை பொட்டல்  கிராமம்  அமைத்துள்ளது .

அருகே மாணவ மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி செயல் பட்டு வருகிறது   இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல் தமிழ் / ஆங்கில வழியில் 1 ஆம் வகுப்பு முதல்  +2 வகுப்புகள் வரை ,  மாணவ, மாணவிகள் கல்வி கற்க பள்ளியும், பாதுகாப்புடன் கூடிய விடுதி வசதியும் உள்ளது. மாணவர்கள்  மாணவிகளுக்கு தனி தனியே விடுதிகள் உள்ளன

அத்துடன் தினந்தோறும் காலை, இரவு ஆகிய இரண்டு வேலையிலும் இட்லி, தோசை, ரவை உப்புமா, கோதுமை உப்புமா, பூரி, சப்பாத்தி, வெண்பொங்கல், லெமன்  சோறு, தக்காளி சோறு புளி சோறு , வாரம் ஒருமுறை அசைவம், அகிய உணவுகளும்,

தினந்தோறும் காலை மாலை வேளையில்  டீ, காப்பியுடன் சினாக்ஸ் , ஒவ்வொரு மாதமும்  குளியல் சோப்பு, துணி சோப்பு, தேங்காய் எண்ணெய்) ஆகியவையும், 

மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 2 ஜோடி பள்ளிச் சீருடையோடு, 2  ஜோடி கலர் டிரஸ்சும், பாய், பெட்சிட் மாலை நேரங்களில் கபடி,கிரிக்கெட் சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளும், முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.

சேர விருப்பமுள்ள மாணவ , மாணவிகள் கீழ் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தீபம் மாணவர் மாணவியர் விடுதி , அடைக்கலப்புரம், வெள்ள பொட்டல், அழகாபுரி - வத்திராயிருப்பு சாலை , விருதுநகர்  மாவட்டம் தமிழ் நாடு - 626149  கைபேசி :9750598333  பகிரி 9870437322   

(ஆதரவற்றோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர், தாய், தகப்பனார் இல்லாதோர் ஆகியோருக்கு  முன்னுரிமை வழங்கப்படும்) ...

குறிப்பு : (தயவுகூர்ந்து இந்த செய்தியை அனைத்து நண்பர்களுக்கும், குருப் களுக்கும் பகிர்மாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் மூலம் படிக்க வசதியில்லாத குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.)✍️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"மாற்றம் ஒன்றே மாறாதது..."

  உயிர் கொலை புரியாமல் இந்த உலகில் வாழவே முடியாது...  வீட்டை கழுவும் போது,  டாய்லெட் கழுவும்போதும்  காய்கறிகளை கழுவும்போதும்....  நாம் சுவாச...