லேபிள்கள்

சனி, 29 நவம்பர், 2025

பெண்கள் திருமணத்திற்கு முன்! திருமணத்திற்கு பின்!

 


பொண்ணுக்கு வயசாயிடுச்சு இன்னும் கல்யாணம் பண்ணிவைக்கலயா?

இந்த பொண்ணுக்கு ஏதாச்சும் தோஷம் இருக்கும் போல.அதுதான் நல்ல வரன் எதுவுமே கிடைக்கல. கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆயிடுச்சு. விஷேசம் ஏதுமில்லையா?’

‘குழந்தை பொறக்கலானா அப்போ அந்த பொண்ணுக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கு இவையெல்லாம் பெண்கள் மேல் இந்த சமூகம் எழுப்பும் விமர்சனங்கள். ஏன் பெண்பிள்ளைகள் பிறந்தாலே சாபக்கேடு என்று கள்ளிப்பால் ஊற்றிக் கொலை செய்யும் சமூதாயமும் இருந்திருக்கிறது என்பதும் மறைக்க முடியாத உண்மைதான்.

வாசித்துக்கொண்டிருக்கும் போதே புரிந்திருக்கும் உங்களுக்கு இப்படியொரு சமுதாயத்தில் தான் நாமும் வாழ்கின்றோம் என்று.இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் ஒரு பெண்ணென்றால் இது போன்ற விமர்சனங்களை நீங்களும் கேள்விப்பட்டோ அல்லது அனுபவித்தோ இருந்திருக்ககூடும். இத்தனை கேள்வி கேட்கும் இந்த சமூகம் உன் இலட்சியம் என்ன? உன் கனவு என்ன? உன் விருப்பம் என்னவென்று கேட்காமலேயே ஒரு பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்கிறது.

பன்னிரண்டு வயதில் பூப்படைவு. இருபது வயது கடந்தால் திருமணம். கணவன் இழந்தால் மறுமணம். அடுத்த வருடம் கையில் குழந்தை. இல்லையென்றால் பெயர் தரும் மலடி.

திருமணம் வரையில் சுதந்திரம் முடிந்தபிறகு சிறைதினம் இப்படி பெண்கள் சிலருக்கு வாழ்வதும் கூட ரணம் தான்.பெண்களின் வாழ்க்கை உண்மையிலேயே மீளமுடியாத போராட்டம்தான். அதிலும் மிகப்பெரிய போராட்டம் திருமணவாழ்வு.ஒரு பெண்ணின் விருப்பத்தை கேட்காமலேயே சில இடங்களில் திருமணம் நடக்கிறது. அவளுடைய வாழ்க்கையை முடிவு செய்யவும் தனி கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமும் நிச்சயம் பெண்களுக்கு உண்டு. ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து கனவுகளோடு வாழும் பெண்களை கல்யாண உறவமைத்து அவர்களின் வாழ்க்கையை வேறொரு பாதைக்கு திசைதிருப்புகின்றனர்.

பெண்கள் தம் வாழ்வையை பிறருக்காக அர்ப்பணிப்பவர்கள்.இதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு நம் அம்மாக்கள் தான். தம்மை சுற்றியிருப்பவர்களுக்கு செய்யும் அன்றாட சேவைகளே தன்னுடைய கடமைகளாக கருதிவாழ்கிறவர்கள் பெண்கள்தான். பெண்கள் பிறந்ததிலிருந்து வளர்ந்து வர வர சமூதாயத்தின் கண்ணோட்டத்திற்குள் அகப்பட்டுவிடுவார்கள்.நான் கூறியது போல் விமர்சனங்களும் எழக்கூடும்.பெண்கள் சுதந்திரமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா?பின்பா? என்ற கேள்வி எழுப்பினால் பெரும்பாலான பதில்கள் முன்பு என்றுதானிருக்கும்.பெண்பிள்ளைகள் பெற்றோர்களுடன் இருக்கும் போது தான் சுதந்திரமாகவும்,தமக்கு பிடித்தமாதிரியும் இருப்பார்கள்.வளரும் காலத்தில் தம்முடைய பெற்றோருடன் சுதந்திரமாக வெளிப்படையாக வாழும் வாழ்க்கையை தான் பெண்பிள்ளைகள் அதிகம் விரும்புகின்றனர்.

ஒப்பனைகள் திருமணத்திற்கு முன்னரான வாழ்க்ககையில் தம்மை அழகாக பாவித்து அலங்கரித்து இன்பம் கொள்ளும் பெண்களுக்கு திருமணம் முடிந்தால் தம்மை அலங்கரிப்பதற்கு கூட நேரமொதுக்குவதில்லை. பேரழகிகள் என்று எண்ணி திருமணத்திற்கு முன்பு தம்மை ஒப்பணை செய்யும் பெண்கள் திருமணமான பின் தலை வாரி பூ வைப்பதை கூட விரும்பிசெய்வதில்லை. தம்மை தாமே கவனித்துக்கொண்டு அலங்கரித்து அழகாக இருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து தம்மை எங்கு கவனித்துகொள்ள போகிறார்கள்? கணவரையும் அவர் குடும்பத்தையும் தம் குழந்தைகளையும் கவனிப்பதிலேயே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

அதிலும் வேடிக்கையான விடயம் என்ன தெரியுமா? திருமணத்திற்கு முன் ஒல்லியாக
ஸ்ரோபரி பழம் போலிருக்கும் பெண்கள் திருமணம் முடிந்து பழுத்துவிட்ட பலாபழம் போல் மாறிவிடுகின்றனர். அவர்கள் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு சில சமயம் தோன்றாது காரணம் வீட்டு சூழ்நிலைதான்.
கணவருக்காகவும் தம் புகுந்த வீட்டிற்காகவும் தமக்கு பிடித்த வேலைகளை கூட திருமணமான பெண்கள் செய்ய முன்வருவதில்லை.

கணவருக்காக தமக்கு பிடித்த வேலைகளை கூடத் தியாகம் செய்யும் எத்தனையோ பெண்கள் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர்.தம்முடைய கனவுகளை மூட்டை கட்டி வைத்து. பெண்கள் எந்த துறையை தேர்வு செய்து சிறப்பாக செயற்படுகின்றனரோ அதில் அவர்கள் சாதிக்க நாம் உறுதுணையாக இருக்கவேண்டும்.சமையலறையிலும் வீட்டுக்குள்ளேயும் தம் வாழ்நாளை கழித்துக்கொள்ளும் பெண்கள் பலரும் தனக்கென்று ஒரு வேலைசெய்யவேண்டும். நிறைய சம்பாதிக்கவேண்டுமென்ற விருப்பத்தோடு வாழ்பவர்கள்.

அவர்களிடம் அவர்களுக்கு பிடித்த தொழில் என்னவென்று கேட்டு அதனை அவர்கள் செய்ய இடமளிக்கவேண்டும். அதுவரையில் வெளியில் சென்று வேலை பார்த்த பெண்கள் சுயதொழிலை ஏற்படுத்தும் திறமையும் கொண்டவர்கள். எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பின் சுய வியாபாரம் சுயதொழில் போன்றவற்றை மேற்கொண்டு சம்பாதிக்கின்றனர். சாதிக்கத்துடிக்கும் பெண்களை முடக்கிப்போடக்கூடாது. அவர்களின் திறமைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கக்கூடாது. திருமணமாகினாலுமே அவர்களுக்கு அவர்களுக்கு பணிபுரிய விருப்பம் இருந்தால் அதற்கு இடமளியுங்கள்.சாதிக்கும் எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பிறகு தான் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். இல்வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்கும் ஆதரவும் ஊக்கமும் அவளை உச்சம் தொட செய்யும். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைவதுமில்லை. அப்படியிருக்க சாதிக்கும் கனவோடு இருக்கும் பல பெண்களை கல்யாணமெனும் பாசக்கயிற்றில் கட்டிபோடுகின்றனர். பல பெண்கள் இதனால் தம்முடைய விருப்பத்தை செய்யாமல் கணவருக்காக விட்டுக் கொடுக்கின்றனர். ஆணோ பெண்ணோ கனவுகள் யாருக்கும் வரலாம்.திருமணத்திற்கு முன்னோ பின்னோ அது எப்போதும் வரலாம்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மையென்றால் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அதுவும் திருமணமான பெண்ணின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் அவளின் கணவர் தான் இருப்பார். விஞ்ஞானத்துறையிலிருந்து விளையாட்டுத்துறை வரை பெண்கள் தடம்பதித்து வருகின்றனர். அதிலும் திருமணமான பெண்கள் பலதுறைகளில் சாதித்துவருகின்றனர்.

திருமணமான உங்கள் வீட்டு பெண்களுக்குள்ளேயும் பல திறமைகள் ஒழிந்திருக்கும். மறைந்திருக்கும். சிலசமயம் புதைந்திருக்கும்.அவற்றை வெளிக்கொணர்ந்து உலகிற்கு உணர்த்துங்கள்.வரம்புகளற்ற பெண்களின் கனவுகளை மஞ்சற்கயிறு கட்டிவிடக்கூடாது. சுதந்திரமாக வாழவேண்டிய வாழ்க்கைக்கு தாலி வேலி போடக்கூடாது. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முடிந்த அளவு ஆதரவும் அன்பும் கொடுத்தாலே போதும் வீட்டுக்கொரு பெண் நிச்சயம் சாதனைப்பெண்தான்..!

வெள்ளி, 28 நவம்பர், 2025

பஞ்சாங்க பலன் பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.

பஞ்சாங்க பலன் 

 பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.


பற்கள் எல்லாம் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டார்.   மன்னர் ஒருவர் பீதியுடன் எழுந்தவர் அரண்மனை ஜோதிடருடன் ஆலோசித்தார்.  பஞ்சாங்கத்தைப் புரட்டிய ஜோதிடர் அரசே உங்களது மனைவி குழந்தைகள் உறவினர் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்துவிடுவார் என பலன் கூறினார்.

வெகுண்ட மன்னர் அவரை சிறையிலிட உத்தரவிட்டார்.  அதன் பிறகும் மனம் சமாதானமாகவில்லை. இன்னொரு ஜோதிடரிடம் கனவுக்கான பலன் கேட்டார்.  பஞ்சாங்கத்தை புரட்டிய அவர் நூராண்டு காலம் வாழ்வீரகள் மன்னா   சொந்த பந்தங்களில் நீண்ட காலம் வாழும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றார். பரிசுகள் வழங்கி கவுரவித்தார் மன்னர்.

இருவரும் பார்த்தது ஒரே பஞ்சாங்கம் என்றாலும் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார் ஒருவர்  இன்னொருவருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்  இது தான் வித்தியாசம். பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.

நூறாண்டு காலம் வாழ்க

 



நூறாண்டு காலம் வாழ்க

பற்கள் எல்லாம் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டார்.   மன்னர் ஒருவர் பீதியுடன் எழுந்தவர் அரண்மனை ஜோதிடருடன் ஆலோசித்தார்.  பஞ்சாங்கத்தைப் புரட்டிய ஜோதிடர் அரசே உங்களது மனைவி குழந்தைகள் உறவினர் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்துவிடுவார் என பலன் கூறினார்.

வெகுண்ட மன்னர் அவரை சிறையிலிட உத்தரவிட்டார்.  அதன் பிறகும் மனம் சமாதானமாகவில்லை. இன்னொரு ஜோதிடரிடம் கனவுக்கான பலன் கேட்டார்.  பஞ்சாங்கத்தை புரட்டிய அவர் நூராண்டு காலம் வாழ்வீரகள் மன்னா   சொந்த பந்தங்களில் நீண்ட காலம் வாழும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றார். பரிசுகள் வழங்கி கவுரவித்தார் மன்னர்.

இருவரும் பார்த்தது ஒரே பஞ்சாங்கம் என்றாலும் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார் ஒருவர்  இன்னொருவருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்  இது தான் வித்தியாசம். பேசும் வார்த்தைகளால் பிறர் தெளிவு பெற வேண்டுமே தவிர வருந்துவது கூடாது.

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
விளையாத மண்ணில் தளிராக
மலராத கொடியில் கனியாக
மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக
வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க... நீ வாழ்க..

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

இசை : KV மகாதேவன்
பாடியவர் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி

Walking Away விலகுங்கள்.

 


Walking Away


Walking away from certain things can make your life much better.


Walk away from arguments that only make you angry.


Walk away from people who try to put you down.


Walk away from trying to please people who don’t value you.


Walk away from thoughts that disturb your peace of mind.


Walk away from judgmental people — they don’t know your struggles or what you’ve been through.


Walk away from your past mistakes and fears — they don’t decide your future.


The more you walk away from things that hurt your soul, the healthier and happier your life will be.


சில விஷயங்களிலில் இருந்து விலகுவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

உங்களை கோபப்படுத்தும் வாதங்களிலிருந்து விலகுங்கள்.

உங்களை தாழ்த்திப் பேசும் மனிதர் களிடமிருந்து விலகுங்கள்.

உங்கள் மதிப்பை உணராதவர்களை மகிழ்விக்க முயல்வதை நிறுத்துங்கள்.

உங்கள் மன அமைதியை கெடுக்கும் எண்ணங் களிலிருந்து விலகுங்கள்.

மற்றவர்களை குறை கூறும், உங்கள் போராட்டங்களை அறியாதவர் களிடமிருந்து விலகுங்கள்.

உங்கள் தவறுகள் மற்றும் பயங்களிலிருந்து விலகுங்கள் — அவை உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது.

உங்கள் ஆன்மாவை நச்சாக்கும் விஷயங்களிலிருந்து விலகும் பொழுது, உங்கள் வாழ்க்கை ஆரோக்கிய மானதும் அமைதியானதும் ஆகும்.

மரு.ஆர்.பாலகுரு

மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க


 

மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க.


”நிறுத்துங்க .. எல்லாத்தையும் நிறுத்துங்க. “ ஒரு திருமணக்கூடத்தில் ஒலித்த குரல் இது. சினிமாவில் வர்ற மாதிரி வில்லன்கள் யாரும் வந்து அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. கரெக்டா தாலி கட்டும் சமயம் மணமேடையில் மணமகன் முன் சர்வாலங்கார பூஷிதையாக நின்றுகொண்டு இருந்த கல்யாணப் பெண்ணின் குரல்தான் அது.
அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார்கள் கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினர்கள். ”பையனைப் பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லி நிறுத்தி இருக்கலாமே. மணவறைக்கு வந்துட்டு இதென்ன அக்கிரமம் ?” என்று கொந்தளித்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்.  
அந்தப் பெண் மணமேடையை விட்டு இறங்கி வந்து “ எங்க அப்பா அம்மா கிட்ட இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்பதை சொல்லிட்டேன். ஆனால் அவங்க கட்டாயப்படுத்தியதால் ஒன்றும் செய்ய முடியாமல் இங்கே வந்து சொல்ல வேண்டியதாப் போச்சு “ என்றார்.
இரண்டு மாதங்களாக மணமகன் மணமகள் இருவருமே போனில் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். அப்போதும் ஒருவருக்கொருவர் பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிக்கொள்ளவில்லையா என்று கேட்டால் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்கிறார் மணப்பெண்.

”அப்பா சொன்னாங்கன்னு கட்டிக்கிட்டேன்” என்று ஒரு பெண் திருமணம் செய்தார். ஆனால் கணவருடன் ஒரு நாள் கூட உருப்படியாக வாழ்ந்தார் இல்லை. எல்லாவற்றுக்கும் தாய் தந்தையிடம் வாட்ஸப்பில் மெசேஜ் செய்து கேட்டுத்தான் நடப்பார். கணவர் ஒன்று கேட்டால் இவர் ஒன்று செய்வார். இதை எல்லாம் மீறி நடத்தப்படும் விருப்பமில்லாத் திருமணங்கள் கூடா நட்பாலும் கூடா உறவாலும் பிரிகின்றன. இது போல் நடத்தப்படும் திருமணங்கள் அநேகம் விவாகரத்திலும் முடிகின்றன. ஒரு மணி நேரத்தில் 5 டைவர்ஸ் கேஸ்கள் பதிவாகின்றன என்கிறார்கள்.

கட்டுப்பாடு மிக்க சமூகம் என்று சொல்லப்படும் செட்டிநாட்டில் கூட கிட்டத்தட்ட 60 சதவிகித திருமணங்கள் இன்று விவாகரத்தில் முடிவது அதிர்ச்சியூட்டும் செய்தி. மணமகன் வீட்டில் இப்போதெல்லாம் ’சீர் செனத்தி எல்லாம் ஒன்றுமே வேண்டாம். எங்களிடம் எல்லாம் இருக்கிறது. பெண்ணைக் கொடுத்தால் போதும். எங்களுடனும் எங்கள் பையனுடனும் ஒத்துமையாக இருக்கும் நல்ல பெண்கிடைத்தால் போதும்’ என்ற பேச்சுத்தான் நிலவுகிறது.
இன்னொரு திருமணத்தில் திருமணக்கூடத்திலிருந்து பெண் முதல்நாள் காணாமல் போய்விட்டார். இன்னுமொரு இடத்தில் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்குப் பெண் அழைத்துச் செல்லும்போது போகும் வழியில் பெண் போகமாட்டேன் என்று முரண்டு பிடித்ததால் வரிசை கட்டிச் சென்ற கார்கள் பாதி வழியிலேயே திரும்பி விட்டன. கோடிக்கணக்கான சொத்திருந்தும் தன் சொந்த மகளின் நடவடிக்கையால் சூன்யம் வைத்தது போன்ற நிலையில் பிரமை பிடித்தாற்போலிருக்கின்றனர் அவர்களது பெற்றோர்.
நான்கு நாட்கள் முன்பு போலீஸ் நிலையத்தில் பதினோரு நாட்கள் வாழ்ந்த காதல் தம்பதியினர் உறவினர் பிரித்துவிடுவார்களோ என்று புகார் கொடுக்க வந்திருந்தனர். பையனும் பெண்ணும் ஒரு கடையில் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கின்றார்கள். காதல் வந்ததும் அவர்கள் ஜாதி வித்யாசம் உறுத்த எங்கே பிரித்துவிடுவார்களோ என்று திருமணம் செய்து கொண்டுவிட்டார்கள் அன்று அந்தப் பெண்ணின் அம்மா அழுத அழுகை. “ கருவாடு வித்து சம்பாதிக்கிறேன். என் மூஞ்சியில கரியைப் பூசிட்டாளே. எத்தனை எத்தனை மாப்பிள்ளையையோ கொண்டு வந்து நிறுத்தினேன். பைசா பெறாத இவனைக் கட்டிக்கிட்டு இவ சம்பாரித்து அவனைக் காப்பாத்துறாளே “ என்று கதறிக் கொண்டிருந்தார். கூட நின்றிருந்த உறவுக்காரப் பெண்மணி அவர்கள் ஒவ்வொருவரையும் ஏசிக்கொண்டிருந்தார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?. முன் காலத்தில் பெண்கள் அப்பா அம்மா தாத்தா பாட்டி சொன்னதைக் கேட்டுத் திருமணம் செய்துகொண்டது போல் திருமணம் செய்துகொள்ளத் தயாராயில்லை. திருமணம் என்பது இருமணம் ஒப்பியதாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தான் வாழும் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். இதற்கு அப்பா அம்மா மற்றும் உறவினர்கள் பெற்றதையும் வளர்த்ததையும் சொல்லி ஜாதி மதம் மற்றும் அந்தஸ்து வித்யாசக் கோடு கிழிப்பதையும் கட்டுப்பாடு விதிப்பதையும் எதிர்க்கிறார்கள். உலகமயமாக்கலில் வெளிநாட்டு உணவும் உடையும் புகுந்ததுபோல் கலாச்சாரமும் புகுந்து தங்கள் திருமணத்தைத் தாங்களே முடிவெடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். முதலில் இன்றைய பெண் மக்கள் பற்றி அவர்களின் அவா பற்றித் தெரிந்து கொள்வோம்.  தாங்கள் திருமணம் செய்யப் போகும் ஆண் தங்களுக்குப் பிடித்த உடல் உருவம் மற்றும் முடி ஆகியன கொண்டிருக்க வேண்டும் எனவும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். தாய் தந்தை சகோதரன் சகோதரி ஆகியோருடன் வசிக்காமல் தனியாக வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிள்ளையே வேண்டும் என்றும் கார் மற்றும் சொந்த வீடு இருக்கவேண்டும் சொல்லும் பெண்களும் கூட உண்டு.
பெண்களுக்கு ஏற்படும் உடல் மனச் சிக்கல்கள், நெருக்கடிகள் என்னென்ன. எதிர்பார்ப்புகள் என்னென்ன. கணவனும் சமைக்க வேண்டும், பாத்திரம் துலக்குதல் போன்ற வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தன்னை சமைக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்கள். ஆணைப் போலவே பெண்ணும் கல்வியறிவு பெற்று வேலைக்குச் சென்று சம்பாதிப்பதாலும் மேலும் சில இடங்களில் பெண் ஆணை விட அதிகமாகவே சம்பாதிப்பதாலும் பெண்ணின் விருப்பம் இன்றியமையாததாகிறது. அவர்களுடன் ஒத்துப் போகும் அல்லது விட்டுக் கொடுத்துப் போகும் ஆண்தான் இவர்களை சமாளித்துக் குடும்பம் நடத்த முடியும்.
பெற்றோர் சாதி மதம் பார்க்காமல் தன் பிள்ளைகளுக்குப் பிடித்த நபரை அவரது வாழ்க்கைத் துணையாக்க ஒப்புக் கொள்ளுதல் முக்கியம். தன் பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி அவர்கள் மன விருப்பத்தோடும் முழுமையான ஒப்புதலோடும் திருமண ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். திருமணத்தைப் புனிதம் பாரம்பரியம் போன்ற கோட்டுக்குள் அடக்காமல் அது தங்கள் பிள்ளையின் வாழ்க்கை என்பதை உணர்ந்து அவசியம் ஏற்பட்டால் தனது கொள்கைகளை விட்டுக் கொடுப்பது நல்லது.  ஜாதகம்ஜோசியம்ராசிக்கட்டம் என்றெல்லாம் பார்க்கும் பெற்றோர் மணமக்கள் உள்ளத்தில் என்னஇருக்கிறது என்று பார்க்கத் தவறுவதுதான் இன்றைய விவாகரத்துக்குக் காரணம்
செவ்வாய் பகை, ராகு கேது தடை என்றெல்லாம் பார்ப்பவர்கள் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பிடித்திருக்கிறதா என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்பதில்லை. மேலும் ஜாதிக்கட்டுமானம் விட்டுப் போய்விடக்கூடாது என்றோ, குடும்பத்தின் பாரம்பர்யச் சொத்துக் கைவிட்டுப் போகக்கூடாது என்றோ இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாகக் கூடத் தன் பெண்ணைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
திருமண வயது 21 என்று அரசாங்கம் அறிவித்தாலும் பள்ளியில் படிக்கும் பெண்ணைக் கூடத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்கள். பூப்படைந்த உடன் திருமணம் செய்வதால் குழந்தை சுமக்கும் பக்குவத்தை அவர்கள் உடல் பெறுவதில்லை. 2017 இல் கூட கிட்டத்தட்ட 1, 600 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கு, அதுவும் தமிழ்நாட்டுலதான். 2016 இல் நடந்த 62, 500 தமிழ்நாட்டில் நடந்த குழந்தைத் திருமணங்களில்  சென்னையில்தான் மிக அதிகம் என்பது அதிர்ச்சித் தகவல்.  
உறவில் திருமணம், நட்பில் திருமணம், சொத்துக்காகத் திருமணம், ஜாதிக்கட்டுப்பாட்டைக் காக்கத் திருமணம் செய்வதை நிறுத்திவிட்டு பிள்ளைகளின் மனநலன் உடல் நலன் எதிர்கால வளமான சந்ததிக்காகவும் அவர்களின் இன்பமான இல்வாழ்வுக்காகவும் திருமணம் என்று முடிவெடுங்கள். மேலும் கலப்புத் திருமணங்கள் மூலம் மரபு சார்ந்த நோய்கள் வருவது தடுக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
பெண்ணையும் மாப்பிள்ளையையும் திருமணத்துக்கு முன்பே பேச அனுமதிப்பதன் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். அநேக திருமணங்கள் இப்படி திருமணத்துக்கு முன் மனம் விட்டுப் பேசுவதால் முறிந்துவிடுகின்றன என்று பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் பெருவாரியாகச் செலவு செய்து திருமணம் முடிந்ததும் இருவருக்கும் ஒற்றுமையும் அனுசரிப்பும் இல்லாமல் விவாகரத்தில் முடிவதற்கு திருமணத்துக்கு முன்பே விலகுதல் நல்லது.
ஆணிடம் இருக்கக்கூடிய குடி, சிகரெட், போதை, கூடா பெண் நட்பு போன்ற பழக்கங்களும், பெண்களுக்கு இருக்கக்கூடிய ஆண் நட்பைக் கொச்சைப்படுத்துவதும் கூட இத்திருமணங்களைக் கேள்விக்குறியாக்குகின்றன. பொருளாதாரத் தற்சார்போ நிலையான வேலையோ இல்லாத ஆணும் பிரச்சனைக்குக் காரணமாகிறார். வேலைக்குச் செல்லும் இன்றைய பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளார்கள். தங்கள் நட்பு , தங்கள் பாலியல் விழைவு, விருப்பம் ஆகியவற்றில் தீர்மானமான கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் ஏற்படும் தான் என்ற ஈகோ பிரிவினைக்குக் காரணமாகிறது.
பண்டிகை நாட்களில் சிறுவயதில் கடைக்குக் கூட்டிச் சென்று எந்த உடை பிடிக்கும், எந்த உணவு பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துப் பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்டு வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தில் மட்டும் தாங்கள் எடுக்கும் முடிவே உத்தமமானது என்று பிடிவாதம் பிடிப்பது தவறு. சில பெற்றோர் பிள்ளைகள் தங்களுக்கான எந்தத் தேர்வையும் சிறுவயது முதலே செய்ய விடாமல் அடக்குமுறையுடன் வளர்த்திருப்பார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் ஆளுமைக் குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.
ஓரிரு பிள்ளைகள் மட்டுமே இருக்கும் குடும்பங்களில் பெற்றோரின் ஆதிக்கம் குழந்தைகளின் மேல் அதிகமாகச் செலுத்துதலும் பிரச்சனையைக் கொண்டு வரும். பிள்ளைகளும் சிறுவயது முதல் பெற்றோரை அண்டியே முடிவெடுப்பதால் மனரீதியாக அவர்களைப் பிரிவதில் சிக்கலும், உளவியல் ரீதியாக தன்னம்பிக்கை குறைதல் அல்லது அவர்கள் தூண்டுதலின் பேரில் அதீதமாக நடந்து கொள்ளுதலும் பிரச்சனையாகும்.
எதிலும் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாமல் வளர்ப்பதும் அதீத செல்லம் கொடுப்பதும் அதே போல் அதீதமாகக் கண்டிப்பதும் திருமணமானதும் இல்வாழ்க்கையில் கிடைக்கும் திடீர் சுதந்திரத்துக்கு வேட்டு வைக்கும். எனவே குழந்தைகளை வளர்க்கும் முறையில் மாற்றத்தைக் கைக்கொள்வது மட்டுமல்ல. சமூகத்தையும் சமுதாயத்தையும் எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் தைரியமுள்ள மக்களாக வளர்க்க வேண்டும். கல்வி, வேலை, திருமணம் போன்றவற்றில் அவர்களுக்கு ஏற்படும் தகுதியான விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.  
குழந்தைகள் உங்கள் வழியாக வந்தார்கள். ஆனாலும் அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகத்தை நினைவில் கொண்டு அவர்கள் தனித்துவம் வாய்ந்த இண்டிவிஜுவல்ஸ் ( தனிமனிதர்கள் ) என்று கருதி அவர்கள் விருப்பு வெறுப்புக்குச் செவிசாய்க்க வேண்டும். உங்கள் அன்பைக் கொடுங்கள். எண்ணங்களை அவர்களுடையதாக இருக்கட்டும். நீங்களும் முதலில் மகிழ்ச்சியும் நிறைவும் உடைய பெற்றோராய் வாழ்ந்து காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழுங்கள்.
நீடித்த மணவாழ்வுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுபவை இந்தியத் திருமணங்களே. அவை இன்று கேள்விக்குறியாகி வருவது வருத்தத்துக்குரியது. சகிப்புத்தன்மையும் விட்டுக் கொடுத்தலும் மட்டுப்பட்டு வருகிறது. கூடி வாழும் இருவரின் விருப்பத்தேர்வாகவும் இரு மனம் ஒப்பிய திருமணம் இருப்பது பெற்றோரின் கைகளில்தான் உள்ளது . எனவே மணப் பொருத்தம் சேர்க்குமுன்னே பிள்ளைகளின் மனப் பொருத்தும் பார்த்துத் திருமணம் செய்தால் அது நிச்சயம் ஆயிரங்காலத்துப் பயிர்தான் என்பதில் சந்தேகமில்லை. 

பெண் வீட்டார் எதிர்பார்ப்பு அன்று 50 முதல் இன்று 2020 வரை

 


1950 -70 💥

மாப்பிள்ளைக்கு கவர்ன்மென்ட் உத்தியோகம். பென்ஷன் உண்டு. சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி. உங்க பொண்ண ஒரு குறையும் இல்லாம பார்த்துப்பார்.

1970 - 90 💥

மாப்பிள்ளைக்கு பாங்க் உத்தியோகம். கை நிறைய சம்பளம். வீடு கட்ட, கார், வீட்டு உபயோகப் பொருட்கள் என்ன வாங்கணும்னாலும் குறைந்த வட்டில கடன்னு எல்லா வசதியும் உண்டு. இந்த இடம் கிடைச்சா உங்க பொண்ணு அதிர்ஷ்டக்காரின்னுதான் சொல்லணும். கூட குறைய இருந்தாலும் எப்படியாவது இந்த இடத்தை முடிச்சுடுங்கோ.

1990 - 2010  💥

பையன் சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான். இரண்டு லகரத்தில சம்பளம். எச் 1 பி விசாக்கு அப்ளை பண்ணிட்டான். அமெரிக்கா போய்டுவான். அப்புறம் உங்க பொண்ணு ராணி தான். 

2010 லிருந்து இப்போ வரை

எம் பொண்ணு 2 லக்ஷம் சம்பாதிக்கிறா, மாப்பிள்ளைக்கு அதுக்கு குறைவா சம்பளம் இருக்கக் கூடாது. எச் 1 பி விசா வைச்சிண்டிருக்கா. அப்பப்ப அமெரிக்கா, இங்கிலாந்துன்னு சுத்திண்டிருப்பா. பையனுக்கும் எச் 1 பி விசாவோ அல்லது அமெரிக்கா க்ரீன் கார்ட் ஹோல்டராக இருந்தால் தேவலை. பையனுக்கு சமைக்க மற்றும் வீட்டு  வேலைகளை எல்லாம் செய்ய தெரிஞ்சு இருக்கணும்.. பொண்ணோட அட்ஜஸ்ட் பண்ணி வாழத் தெரியனும். பையன் லக்கேஜோட   (பையனோட அப்பா, அம்மா) வரக் கூடாது.  பெண் சோசியல் டிரிங்கிங்கெல்லாம் இருக்கலாம். யாரும் அப்ஜெக்ட் பண்ணக் கூடாது.

சமூகத்தின் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் - யார் எழுதியது தெரியவில்லை, நன்றாக இருக்கிறது. அதனால் பகிர்ந்தேன்.

மனமே அமைதிகொள்; அரசனின் ஆதங்கமும் 99 ஆட்டமும்

 


மனமே அமைதிகொள் 🌹

ஒரு அரசன் 

தனது மந்திரியை அழைத்து:...

"இதோ பார் மந்திரியாரே, நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கிறேன். 

எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. 

இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது.

சலிப்பும், வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது. 

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, 

அவன் என்னை விட 

வாழ்வில்  மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகிறேன்.

ஆனந்தத்தில் அவன் 

மிதக்கிறான். பார்க்க பொறாமையாக இருக்கிறது' என்று ஆதங்கப்பட்டான். 

உடனே அந்த மந்திரி, அரசே! அந்த 

சேவகனிடம் 99 ஆட்டத்தை  பரீட்சித்துப் 

பாருங்கள்' என்றான்

அதற்கு அரசன்: அது என்ன 99 ஆட்டம்? 

புதுமையாக இருக்கிறதே!" என்றான். 

அதற்கு மந்திரி சொன்னான், 99 ஆட்டம் 

என்பது 99 பொற்காசுகளை எடுத்து 

ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு 

வாசலில் வைத்துவிடுங்கள். 

"100 பொற்காசுள் உங்களுக்கான 

அன்புப் பரிசு " என்று அதிலே எழுதி 

வைத்துவிட்டு வந்துவிடுங்கள். 

பின்பு என்ன நடக்கிறது என்று 

பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான். 

அப்படியே அரசனும் செய்துவிட்டு 

அவதானித்தான்.

பொற்காசுள் நிறைந்த 

பையைக்கண்ட சேவகன் ஆனந்தத்தில் 

மிதந்தான். 

பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக்கொண்டான். 

அதன்படி அவனும், அவனது மனைவி, பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர்.

தேடித்தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, 

தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. 

கோபமடைந்த சேவகன் அவர்கள் மீது 

எரிந்துவிழத் தொடங்கினான். அவன் 

மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். 

புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் ஓரமாக நின்று 

பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு 

99 ஆட்டம் என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.  

🙏அதுதான் நண்பர்களே!....

அந்த வல்ல இறைவன் நமக்கு 

வழங்கிய 99 வகையான 

செளபாக்கியங்களோடு இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். 

வாழ்வில் நமக்கு கிடைக்காத 

அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.  

கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒன்றுக்காக மனக்கவலையோடு வாழ்துவருகிறோம்.

 மனமே அமைதிகொள்.✍🏼🌹

செவ்வாய், 25 நவம்பர், 2025

Satara Village Maharashtra Chandrapur Dist new benchmark for rural self-reliance and cleanliness.

 


Satara, Maharashtra, Nov 23, 2025 Far from the noise and rush of city life, Satara village near the Tadoba Andhari Tiger Reserve in Maharashtra is quietly setting an example of how rural communities can be self-reliant, clean, and well-organized.

A recent video by travel vlogger Ankita Kumar showcased the village, highlighting how the community has come together to build a sustainable, disciplined, and inspiring environment.

The streets of Satara are spotless, maintained by a community system where villagers take turns cleaning the entire village each day. There are no open drains or garbage piles, reflecting a high level of civic pride and responsibility.

Basic amenities are modern and eco-friendly: hot water is provided through a common solar heater, drinking water is accessible via an RO water ATM, and every home has a metered tap to ensure fair use.



Streetlights are solar-powered and turn on automatically after sunset. The village also places strong emphasis on community welfare.

There is a hangout spot for senior citizens to relax and socialize, and children have access to a small library.

Residents practice rainwater harvesting, composting, and sanitation is strictly managed with no open toilets anywhere.

Even cattle sheds are clean and odor-free, highlighting the village’s commitment to hygiene.

Ankita praised the role of one man, Gajanan, who spent five years planning and persuading the villagers to adopt this way of life.

Under his leadership, the community has successfully combined modern technology with traditional values, creating a model village where everyone contributes time, labor, and resources.

Women play a prominent role in the village, including working as safari guides in Tadoba National Park. The video shared on social media impressed viewers nationwide.

Many commented on how inspiring it was to see such discipline and cooperation, suggesting that this village could serve as a blueprint for others.

Visitors noted that Satara is proof of what can be achieved when people care for their environment and work together for the common good.

For travelers interested in visiting, Satara village can be reached via the Tadoba-Andhari Tiger Reserve.

The nearest airport is Dr. Babasaheb Ambedkar International Airport in Nagpur, approximately 106–140 km away.

Alternatively, travelers can take a taxi or bus from Chandrapur Junction, which is about 37 km from the reserve, or from Nagpur Railway Station, around 103 km away. Guided tours or local drivers can help visitors explore the village after visiting the national park.

Satara village stands as a testament to how rural India can combine self-reliance, sustainability, and community spirit, offering a cleaner, greener, and more organized way of life.

The village’s efforts show that with dedication, leadership, and collective action, even small communities can achieve remarkable progress while inspiring others to follow their example.

Satara Village in Maharashtra Shows How Rural India Can Be Self-Reliant and Beautiful Satara village in Maharashtra, near the Tadoba Andhari Tiger Reserve, is setting a new benchmark for rural self-reliance and cleanliness.

Satara village demonstrates what can be achieved with dedication, cooperation, and a focus on sustainability. It is a model for other villages and cities alike, showing the power of community-driven progress. 


இரண்டு குதிரைகள்



இரண்டு  குதிரைகள்

என்னுடைய  வீட்டிலிருந்து  பக்கத்தில் இருக்கும் சாலையில் உள்ள  ஒரு வயலில்  இரண்டு குதிரைகள்  இருக்கின்றன.    தூரத்தில் இருந்து  பார்த்தோம்  என்றால்,   இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான்   இருக்கும்.    ஆனால், அருகில்  சென்று பார்க்கும் போது எதிர்பாராத  அளவு முழுவதும்  அற்புதமாகத் தெரிவதை  அறிவீர்கள்……

ஒரு குதிரையின் கண்களைப் பார்க்கும் போது, அது கண் பார்வை  அற்றது என்பது  தெரியப்படுத்தப்படும். இப்படி அது  பார்வை அற்றதாக   இருந்த போதிலும்,   அங்கிருந்து அதை விரட்டாமல், அந்தக் குதிரைக்கு ஒரு  நல்ல இருப்பிடத்தைக் கொடுத்து, தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டார். இந்த ஒன்றுதான்  அற்புதம் ஆனது.     நீங்கள் அதன்  அருகில் நின்று   கவனித்தீர்கள்  என்றால், நீங்கள்   ஒரு மணியின்  ஒலியைக் கேட்கலாம். அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று  சுற்றி   நோக்கினால், அது  அந்த வயலில் இருக்கும் சிறிய குதிரையிடம்  இருந்து, வருகிறது  என்பது  தெரியவரும்.    

அந்தக் குதிரையின்  கடிவாளத்தோடு  இணைத்து அந்த சிறிய மணி  கட்டப்பட்டு இருந்தது.    இந்த மணிச் சத்தம், அந்த பார்வை இழந்த நண்பனுக்கு,   அடுத்தக் குதிரை   எங்கு இருக்கிறது  என்பதை தெரிந்து  கொள்ள உதவும்.     எனவே, அதைத் தொடர இதற்கு  முடியும். நீங்கள்  நின்று மேலும் அந்த இரண்டு நண்பர்களையும்  கவனித்துப் பார்த்தால், மணி  கட்டி இருக்கும்  அந்தக் குதிரை  எப்போதும் அந்த  பார்வை இழந்த குதிரையைக் கவனித்துக் கொண்டு இருக்கும்.     அந்தப் பார்வை  இழந்த குதிரை  மணியோசையை  கவனித்து,   மெதுவாக நடந்து,  அடுத்த குதிரை  எங்கு இருக்கிறதோ  அங்கு செல்லும்.     அது தன்னை வழி தவறி நடத்திச் செல்லாது என்ற  நம்பிக்கையுடன் செல்லும்.    

ஒவ்வொரு மாலையிலும், அந்த  மணி கட்டிய  குதிரை தன்  வசிப்பிடத்திற்கு வரும் போதெல்லாம்,  அவ்வப்போது  ஆங்காங்கே நின்று,  அந்த பார்வை  இழந்த குதிரை  வருகிறதா,  வெகுதூரத்தில்  வராமல்,  மணியோசை   கேட்கும் அளவு  அருகில் வருகிறதா  என்று கவனித்து,  உறுதி செய்த பிறகுதான் நடக்க ஆரம்பிக்கும்.    

இந்த இரண்டு குதிரைகளின்  சொந்தக்காரர் மாதிரி கடவுள்  நம்மையும் விரட்டி அனுப்பாமல் இருக்கிறார்.    ஏனெனில், நாம்  ஒன்றும் முழுமையும்  நேர்மையானவர்கள்  அல்ல. என்ற நிலையிலும்,  நமக்கும் நிறைய சவால்களும்,  மேலும் பிரச்சனைகளும்  உள்ளன!     

கடவுள் நம்மையும்    கவனித்துக் கொண்டு, மேலும்  நமது தேவைக்காக,  நமக்கு உதவுவதற்காக  பிறரையும் நம்  வாழ்க்கையின்  உள்ளே அனுப்பி  வைக்கிறார்.     

சில சமயங்களில்  நாம் விழி இழந்த  குதிரையாக  இருக்கிறோம்;   நமது  வாழ்க்கைக்காக  கடவுள் அனுப்பி வைக்கும்  அவர்களின்  மணிச்சத்தத்தால்  வழிகாட்டப்படுகிறோம். சில நேரங்களில் நாம் அந்த வழிகாட்டும்  குதிரையைப் போல,   அடுத்தவர்களுக்கு  வழி காட்டி உதவி புரிந்து  கொண்டிருக்கிறோம்.  

சிறந்த நண்பர்கள்  அதே போன்றுதான் இருக்கிறார்கள்….. நம்மால் அவர்களை  எப்போதும் பார்க்க முடியாது, ஆனால்  அவர்கள்  அங்கேதான்  எப்போதும்   இருக்கிறார்கள்  என்பது  உங்களுக்குத் தெரியும். ……..    

எப்போதும் நமது காதுகளை திறந்து  வைத்துக் கொண்டு,  அடுத்தவர்களின்   ஒவ்வொரு மணியோசையையும்   கவனிக்க  வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களின்   உள்ளீர்ப்பை  வரவேற்க, நாம்  எப்போதும்   எச்சரிக்கையுணர்வுடன் அதை நோக்கி இருக்க வேண்டும்.

பெருந்தன்மையின்  எல்லை வரை  சென்று அன்பாக இருக்கவும்,  இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து  உதவி புரிந்து கொள்ளவும்,   இதயத்தில் இருந்து   இரக்க   உணர்வுடனும்  இருக்கும் போது,   நமது  வாழ்க்கையையும்,  பிறருடைய  வாழ்க்கையையும்  முழுமையாக,   மிகப்பெரிய  அளவில்   ஆனந்தமயமாக  மாற்ற முடியும்.

“வெறும்  பார்வையாக இல்லாமல்,   பற்றுறுதியோடு நடந்து, நம் வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும்.  “

 

ஞாயிறு, 23 நவம்பர், 2025

வீடுகளுக்குச் சென்றால் குருடனாகவும் வெளியே வந்தால் ஊமையாகவும இருந்து விடுங்கள்!

 


யாரிடம் பேசும்போதும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் அவர்கள் போகிறபோக்கில் அள்ளி வீசிவிட்டு சென்று விடுவார்கள்...

இரண்டு நபர்கள் சந்தித்து கொள்கிறார்கள்
ஒருவர் : நீ எங்கே வேலை செய்கிறாய்?
மற்றவன்: இன்னாரின் நிறுவனத்தில்.
அவன் : எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?
இவன்: 30 ஆயிரம் தான்.
அவன்: ஓ...ஹ்! இந்த வேலைக்கு இது போதாதே!
உன் முயற்சியை அவர்கள் மதிப்பதில்லை போல! வாழ்க்கை செலவுகளை எப்படி சமாளிக்கிறாய்?
என்ற வார்த்தை குண்டை போட்டுவிட்டு அவன் சென்றுவிடுகிறான்.
இவனோ அவன் சொல்வது சரிதான், என்று கருதி வேலையில் ஆர்வம் குறைந்து, சலிப்புடனே மறுநாள் வேலைக்கு செல்கிறான். நிறுவன உரிமையாளரிடம் சம்பளம் கூட்டிக் கேட்கிறான்.
உரிமையாளரோ "முடியாது" என்கிறார். இவன் வேலையை விட்டு விடுகிறான்.
இப்போது இவன் வேலை இன்றி வெட்டியாக இருக்கின்றான்.
2
👉
இரு பெண்கள் சந்திக்கின்றனர்.
ஒருவள்: உன் கணவன், உனக்கு குழந்தை பிறந்ததற்காக உனக்கு என்ன அன்பளிப்பு செய்தார்?
மற்றவள்: எதுவும் தரவில்லை.
அவள்: ஏன் இப்படி! உன்னைப் பற்றி அவரிடம் எந்த மதிப்பும் இல்லையா...?' பாசம் இல்லையா..?
என்று அவள் சின்ன புகைச்சலை போட்டுவிட்டு சென்றுவிடுகிறாள்.
இவளின் மனதிலோ கணவனை பற்றிய மதிப்பு குறைகிறது. கவலையடைகிறாள்...
கணவன் வந்தவுடன் கோபத்துடன் தர்க்கம் செய்கிறாள். அதனால் சன்டை முற்றி அவன் அவளை விவாகரத்து செய்துவிடுகிறான்.
இப்போது இவள் விதவையாகிவிட்டாள்.
இது போன்றே...
3
👉
இரு நண்பர்களுக்கு மத்தியிலும்...
4
👉
தந்தை மகனுக்கு மத்தியிலும்...
இப்படியான கிண்டல் கிளறல்களை உண்டாக்கி பிரிவை உண்டாக்கும் நயவஞ்சகர்கள் நம்மிடையே நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏன் இன்னும் இதனை வாங்கவில்லை...?
ஏன் இன்னும் திருமணம் முடிக்கவில்லை...?
எவ்வளவு காலம்தான் இவரை சகித்துக் கொள்வாய்...?
இப்படி ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்...?
இப்படிச் செய்யலாமா???
அப்படிச் செய்யலாமா???
இப்படி சிலரின்
தேவையற்ற கேள்விகள், விவரமற்ற வார்த்தைகள், கிண்டிப் பார்க்கும் ஆர்வங்கள், கிளறிப் பார்க்கும் பழக்கங்கள் கேட்க அழகாகவும், பார்க்க புண்ணியம் போன்றும் தோன்றும்...
ஆனால், அவைகளே வார்த்தை வடிவில் அவதாரம் எடுத்து சைத்தான்களாக வந்து, குடும்பங்களில் பெரும் வெடிப்பை தோற்றுவிக்கிறன, உறவுகளுக்குள் நீண்ட விரிசல்களை உண்டாக்கிவிடுகின்றன. சொந்த பந்தங்களை இன்னுமின்னும் பிரித்து வைத்துவிடுகின்றன.

எனவே...
பிரச்சினைகளை, பிரிவினைகளை தோற்றுவிக்கக் கூடியவர்களின் சொற்களை கவனத்தில் கொள்ளாதீர்.

வீடுகளுக்குச் சென்றால் குருடனாகவும் வெளியே வந்தால் ஊமையாகவும இருந்து விடுங்கள்!

நீங்கள் உங்கள் சுய சிந்தனையோடு இருங்கள்...

சிறந்த ஆயுதம்

அறிவே சிறந்த ஆயுதம்



“ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்.. சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார்.
“பிரபு.. இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு” என்றார் பீர்பல்.
“ஓகோ.. ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை, பிரபு.. நான் அவற்றைச் சொல்லவில்லை” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்.. நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன” என்றார் பீர்பல்.
“பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு.. அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி, ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர். அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின.
மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். “வாள்” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்” என்றார் மற்றொருவர்.
“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்” என்றார் பீர்பல்.
“வெறும் பிதற்றல்.. நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.
மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். அக்பரை கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு ஆபத்து.. அபாயம்... பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது. அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது. உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார். வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது.
ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது. வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது.

யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது. தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.

சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்.. சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்.. நீ சொன்னதே சரி.. உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்” .

வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths