லேபிள்கள்

செவ்வாய், 25 நவம்பர், 2025

இரண்டு குதிரைகள்



இரண்டு  குதிரைகள்

என்னுடைய  வீட்டிலிருந்து  பக்கத்தில் இருக்கும் சாலையில் உள்ள  ஒரு வயலில்  இரண்டு குதிரைகள்  இருக்கின்றன.    தூரத்தில் இருந்து  பார்த்தோம்  என்றால்,   இரண்டுமே ஒரே மாதிரியாகத்தான்   இருக்கும்.    ஆனால், அருகில்  சென்று பார்க்கும் போது எதிர்பாராத  அளவு முழுவதும்  அற்புதமாகத் தெரிவதை  அறிவீர்கள்……

ஒரு குதிரையின் கண்களைப் பார்க்கும் போது, அது கண் பார்வை  அற்றது என்பது  தெரியப்படுத்தப்படும். இப்படி அது  பார்வை அற்றதாக   இருந்த போதிலும்,   அங்கிருந்து அதை விரட்டாமல், அந்தக் குதிரைக்கு ஒரு  நல்ல இருப்பிடத்தைக் கொடுத்து, தன்னுடன் சேர்த்து வைத்துக் கொண்டார். இந்த ஒன்றுதான்  அற்புதம் ஆனது.     நீங்கள் அதன்  அருகில் நின்று   கவனித்தீர்கள்  என்றால், நீங்கள்   ஒரு மணியின்  ஒலியைக் கேட்கலாம். அந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்று  சுற்றி   நோக்கினால், அது  அந்த வயலில் இருக்கும் சிறிய குதிரையிடம்  இருந்து, வருகிறது  என்பது  தெரியவரும்.    

அந்தக் குதிரையின்  கடிவாளத்தோடு  இணைத்து அந்த சிறிய மணி  கட்டப்பட்டு இருந்தது.    இந்த மணிச் சத்தம், அந்த பார்வை இழந்த நண்பனுக்கு,   அடுத்தக் குதிரை   எங்கு இருக்கிறது  என்பதை தெரிந்து  கொள்ள உதவும்.     எனவே, அதைத் தொடர இதற்கு  முடியும். நீங்கள்  நின்று மேலும் அந்த இரண்டு நண்பர்களையும்  கவனித்துப் பார்த்தால், மணி  கட்டி இருக்கும்  அந்தக் குதிரை  எப்போதும் அந்த  பார்வை இழந்த குதிரையைக் கவனித்துக் கொண்டு இருக்கும்.     அந்தப் பார்வை  இழந்த குதிரை  மணியோசையை  கவனித்து,   மெதுவாக நடந்து,  அடுத்த குதிரை  எங்கு இருக்கிறதோ  அங்கு செல்லும்.     அது தன்னை வழி தவறி நடத்திச் செல்லாது என்ற  நம்பிக்கையுடன் செல்லும்.    

ஒவ்வொரு மாலையிலும், அந்த  மணி கட்டிய  குதிரை தன்  வசிப்பிடத்திற்கு வரும் போதெல்லாம்,  அவ்வப்போது  ஆங்காங்கே நின்று,  அந்த பார்வை  இழந்த குதிரை  வருகிறதா,  வெகுதூரத்தில்  வராமல்,  மணியோசை   கேட்கும் அளவு  அருகில் வருகிறதா  என்று கவனித்து,  உறுதி செய்த பிறகுதான் நடக்க ஆரம்பிக்கும்.    

இந்த இரண்டு குதிரைகளின்  சொந்தக்காரர் மாதிரி கடவுள்  நம்மையும் விரட்டி அனுப்பாமல் இருக்கிறார்.    ஏனெனில், நாம்  ஒன்றும் முழுமையும்  நேர்மையானவர்கள்  அல்ல. என்ற நிலையிலும்,  நமக்கும் நிறைய சவால்களும்,  மேலும் பிரச்சனைகளும்  உள்ளன!     

கடவுள் நம்மையும்    கவனித்துக் கொண்டு, மேலும்  நமது தேவைக்காக,  நமக்கு உதவுவதற்காக  பிறரையும் நம்  வாழ்க்கையின்  உள்ளே அனுப்பி  வைக்கிறார்.     

சில சமயங்களில்  நாம் விழி இழந்த  குதிரையாக  இருக்கிறோம்;   நமது  வாழ்க்கைக்காக  கடவுள் அனுப்பி வைக்கும்  அவர்களின்  மணிச்சத்தத்தால்  வழிகாட்டப்படுகிறோம். சில நேரங்களில் நாம் அந்த வழிகாட்டும்  குதிரையைப் போல,   அடுத்தவர்களுக்கு  வழி காட்டி உதவி புரிந்து  கொண்டிருக்கிறோம்.  

சிறந்த நண்பர்கள்  அதே போன்றுதான் இருக்கிறார்கள்….. நம்மால் அவர்களை  எப்போதும் பார்க்க முடியாது, ஆனால்  அவர்கள்  அங்கேதான்  எப்போதும்   இருக்கிறார்கள்  என்பது  உங்களுக்குத் தெரியும். ……..    

எப்போதும் நமது காதுகளை திறந்து  வைத்துக் கொண்டு,  அடுத்தவர்களின்   ஒவ்வொரு மணியோசையையும்   கவனிக்க  வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களின்   உள்ளீர்ப்பை  வரவேற்க, நாம்  எப்போதும்   எச்சரிக்கையுணர்வுடன் அதை நோக்கி இருக்க வேண்டும்.

பெருந்தன்மையின்  எல்லை வரை  சென்று அன்பாக இருக்கவும்,  இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து  உதவி புரிந்து கொள்ளவும்,   இதயத்தில் இருந்து   இரக்க   உணர்வுடனும்  இருக்கும் போது,   நமது  வாழ்க்கையையும்,  பிறருடைய  வாழ்க்கையையும்  முழுமையாக,   மிகப்பெரிய  அளவில்   ஆனந்தமயமாக  மாற்ற முடியும்.

“வெறும்  பார்வையாக இல்லாமல்,   பற்றுறுதியோடு நடந்து, நம் வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும்.  “

 

1 கருத்து:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...