லேபிள்கள்

வெள்ளி, 14 நவம்பர், 2025

“நம்பிக்கை பரிசோதனை” “நம்பிக்கை என்பது மனித வாழ்க்கையின் அத்யாவசியமான மூலக் கூறு.”

 


“நம்பிக்கை  பரிசோதனை” 

ஒரு நம்ப முடியாத பரிசோதனை

1950 –களின்  பின்னால், கர்ட் ரிக்டர் என்பவர்  எல்லோராலும்  அறியப்பட்ட  ஹார்வர்டு  பட்டதாரியும்   மேலும் ஜான்ஸ்  ஹாக்கின்ஸ்  பல்கலைக் கழகத்தின் ஒரு  விஞ்ஞானியும்  ஆவார். அவர்  வழக்கத்திற்கு  மாறான தொடர் பரிசோதனைகளை  செய்தார்.    தண்ணீர், ஜாடிகள்,  மற்றும் எலிகள்  இவற்றை வைத்து  சோதனைகளை செய்தார். இதன்  முடிவாக  திகைப்பான கண்டுபிடிப்புக்கள்  வந்தன. அந்த  எலிகள் தண்ணீரில்  மூழ்குவதற்கு முன்,   எவ்வளவு நேரம்  நீந்துகிறது  என்பதை பார்க்க  விரும்பினார்.

அவரது  பரிசோதனைகளில்,  ரிக்டர் பாதி அளவு  தண்ணீர் உள்ள ஜாடியில், எலியைப் போடுவார்.    இயற்கையாக அந்த எலி உடனே அந்த கணத்திலேயே,  வெறி பிடித்தது போலாகி,  தன்னுடைய உயிரைப் பாதுகாக்க  பரபரப்பு அடையும்.

சில நிமிடங்கள் அளவு  போராட்டத்திற்குப் பிறகு, அந்த எலி  ஜாடியில் இருந்து  வெளியே வருவதற்கான  தன்னுடைய முயற்சியை விட்டு விட்டது. முடிவாக,  அது நீரில் மூழ்கி  இறந்து விட்டது.

ரிக்டர், அந்த பரிசோதனையில்  சிறிது மாற்றத்தை செய்தார்.    இன்னொரு எலியை,  அதே மாதிரியான  தண்ணீர் நிரம்பிய  ஜாடியில் போட்டார்.    அது இறந்து போகும் தருணத்தில்,   எப்படியோ அதை  அதற்கு முன்பாக  வெளியே எடுத்து,   சிறிது நேரம்  அன்பாய்த் தடவிக் கொடுத்து மீண்டும்  தண்ணீர் ஜாடியில்  போட்டார்.     

அந்த எலி  திரும்பவும்  போராடத் தொடங்கியது.    முதல் எலிக்கு  நடந்ததை விட,   இந்த முறை சிறிது  இடைச் செருகல்  நடந்தது. ஆனால் அது மிகப் பெரிய அளவில் எலியின் நடத்தையில்   வேறுபாட்டைக் கொண்டு வந்தது.    ரிக்டரை   ஆச்சரியப்படும்  வைக்கும் அளவில்  அது நடந்தது!    

ரிக்டர் அந்த எலி  குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் நீந்தி, அதன் பிறகு மூழ்கி விடும் என யூகித்தார்.    

ஆனால் ஆச்சரியப்படும்  விதத்தில் அது  அவ்வாறு  நடக்கவில்லை.    அந்த எலி  இல்லாமல் போகவில்லை.    அது அந்த ஜாடிக்குள் சுற்றி  நீந்திக் கொண்டே இருந்தது.    தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக,  அது தொடர்ந்து  போராடிக் கொண்டே இருந்தது.     எதிர்பார்த்ததை விட அதிக நேரம்  உயிரோடு இருந்தது. 

60 மணிகள் !

ஆமாம், 60 மணி நேரமாக, அந்த எலி  நீந்திக் கொண்டும்,   தண்ணீரை விட்டு வெளியே வருவதற்கு,  விடாமல் முயற்சி செய்து கொண்டும்  இருந்தது.    

ரிக்டர் இதனைப் பார்த்து மிகவும்  திகைப்பு அடைந்தார்.    முதல் எலி  நீரில் போட்ட  15  நிமிடத்திலேயே  இறந்து விட்டது.   ஆனால் இந்த எலியோ, 60 மணி நேரமாக நிலையாக  முயற்சி செய்து கொண்டும் தன் உயிரை விடுவதற்கு  மறுத்துக் கொண்டும்  இருக்கிறது!

கர்ட் ரிக்டர்  தன்னுடைய பரிசோதனையை,  “நம்பிக்கை  பரிசோதனை”  என்று பெயரிட்டு அழைத்தார். 

ஏதாவது  காரணத்திற்காக  மக்கள், ஒரு முறை  நம்பிக்கை கொள்வதற்கு  ஆரம்பிக்கின்றார்கள்   என்றால், அந்த வாழ்க்கை  வாழ்வதற்கு தகுதி உடைத்தானது என்றாகிடும்;    அந்த நம்பிக்கையே    சுய தேவை  நிறைவேற்றப் படுவதற்கென்று  மாறிவிடும். 

முதன் முதலில்  தண்ணீரில் போடப்பட்ட எலியை கொன்றது எது ?    அது நம்பிக்கையின்  குறைபாடுதான்   அல்லது நாம் அதை நம்பிக்கை இன்மை என்றும் கூற முடியும்.        முதலாவதாக,   அந்த எலிக்கு  இப்படி ஒரு எண்ணம்தான் இருந்தது.   அதாவது, இந்த மாதிரியான சூழ்நிலைக்கு எதிராக அதற்கு  எந்த வித பாதுகாப்பும்  இல்லாமல்  இருந்தது போல்    தெரிந்தது.    எனவே, அந்த முதல் எலி இறந்துபோய் விட்டது.

பிறகு,  சூழ்நிலைக்குத் தக்கவாறு எதிர் செயல் செய்ய,  இரண்டாவது எலியை மாற்றியது எது ?

நம்பிக்கை இன்மையை  முற்றிலும்  இல்லாமல்  ஆக்கியதுதான்.    பிறகு, அந்த இரண்டாவது எலி  மூழ்குவதற்கு முன்பாகவே, உடனே  தன்னை மீட்டுக் கொண்டது. தான்  இறந்து போவதற்காக வரவில்லை  என்பதை அது  கற்றுக் கொண்டது.   அந்த சூழ்நிலை  உண்மையிலேயே  நம்பிக்கை இழந்த நிலையில் இல்லை.    விரைவில் தனக்கு  உதவி புரிய ஒரு  உதவிக் கரம் வரும்.      இந்தக் காரணத்தால்தான்,   அது நீந்திக் கொண்டே  இருந்தது. தன் முயற்சியை விடவும் இல்லை; மேலும்  அடியில் போகவும் இல்லை. 

“நம்பிக்கை என்பது  மனித வாழ்க்கையின் அத்யாவசியமான  மூலக் கூறு.”

மனிதர்களுக்கும்,  எலிகளுக்கும்  இடையில் அதிக அளவில்  வேறுபாடுகள் இருப்பது   தெளிவாகத் தெரிகிறது.     ஆனால், ஒன்று மட்டும் ஒத்த தன்மையோடு  நிற்கிறது:    “தொடர்ந்து நீந்திக் கொண்டு  இருப்பதற்கு, நம் அனைவருக்கும்  ஒரு காரணம்  தேவைப் படுகிறது.”

 பாடம்

நம்பிக்கை ஒரு மனோபாவம்; அது  இதயத்தின் உள்முக  பற்றுறுதியில்  இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டு  வெளியாகின்றது. 

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths