லேபிள்கள்

வெள்ளி, 29 மே, 2026

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

 



வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.


உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார் அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.


நான்கு நபர்களை புறக்கணி


மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
சோம்பேறி


நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!


பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்

நான்கு நபர்களுடன் கடினமாக நடத்தாதே!


அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி

நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!


மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
சேவகன்

நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!


பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு

நான்கு நபர்களை வெறுக்காதே!


தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி

நான்கு விசயங்களை குறை!


உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு

நான்கு விசயங்களை தூக்கிப்போடு!


துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!


மனத்தூய்மை உள்ளவன்
வாழ்க்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையானவன்

நான்கு விசயங்கள் செய்!


தியானம், யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

 


Vallalar Amazing Life Lessons

 


வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 

43 அறிவுரைகள்!


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

2. தேவைக்கு செலவிடு.

3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.

5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 

13. அவ்வப்போது பரிசுகள் அளி. 

14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!

16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.

18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.

19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.

20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 

22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.

23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 

26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 

27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

28. நண்பர்களிடம் அளவளாவு.

29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.

30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!

31. வாழ்வை கண்டு களி!

32. ரசனையோடு வாழ்!

33. வாழ்க்கை வாழ்வதற்கே!


34. நான்கு நபர்களை புறக்கணி!

மடையன்

சுயநலக்காரன்

முட்டாள்

ஓய்வாக இருப்பவன்


35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!

பொய்யன்

துரோகி

பொறாமைக்கைரன்

மமதை பிடித்தவன்


36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!

அனாதை

ஏழை

முதியவர்

நோயாளி


37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!

💑மனைவி

💑பிள்ளைகள்

💑குடும்பம்

💑 சேவகன்


38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!

♂️பொறுமை

♂️சாந்த குணம்

♂️அறிவு

♂️அன்பு


39. நான்கு நபர்களை வெறுக்காதே!

👳தந்தை

💆தாய்

👷சகோதரன்

🙅சகோதரி


40. நான்கு விசயங்களை குறை!

👎உணவு

👎தூக்கம்

👎சோம்பல்

👎பேச்சு


41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!

🏃துக்கம்

🏃கவலை

🏃இயலாமை

🏃கஞ்சத்தனம்


42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு

மனத்தூய்மை உள்ளவன்


வாக்கை நிறைவேற்றுபவன்


கண்ணியமானவன்


உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!

🌷 தியானம், யோகா

🌷 நூல் வாசிப்பு

🌷 உடற்பயிற்சி

🌷 சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்....

TMC MLA Shmeem Ahmad's, West Bengal house raid

 

 West Bengal Police raided the residence of Shibpur (Howrah) Trinamool Congress (TMC) leader Shamim Ahmed (alias 'Gabbar') in May 2026, following allegations of his involvement in post-poll violence and crude bomb attacks against BJP workers. 

Raids and Discoveries
  • The Secret Hideout: During the raid on his G.T. Road property, police discovered a concealed, luxury underground basement hidden behind a trap door. 
  • Lavish Amenities: The concealed flat featured high-end amenities, CCTV surveillance, and opulent furnishings. Local and social media reports went viral claiming investigators uncovered gold-plated furniture and themed beds, though authorities have primarily highlighted the hidden, illicit structural nature of the basement. 
Legal Repercussions
  • Arrest: Shamim Ahmed was located and arrested by police from a rented flat in Chembur, Mumbai. He was subsequently brought back to Howrah on transit remand. 
  • Controversy: The police action sparked significant political debate after visuals circulated online showing the once-influential local leader being publicly paraded on the streets by authorities. 

ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர் - பிரதமர் மோடி

 


 ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர் - பிரதமர் மோடி


📌 பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்குமாறும் பிரதமர் கோரிக்கை


📌 சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்கவும் பிரதமர் கோரிக்கை.!


📌 ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை, பொதுமக்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்


📌 தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்


📌 நாட்டு மக்களின் தேவைக்காக தங்கம் இறக்குமதியாவதால், நமது அந்நிய செலாவணி கையிருப்பு கரைகிறது - பிரதமர்


📌 திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவதை, ஓராண்டுக்கு தவிர்க்குமாறு பிரதமர் வேண்டுகோள்


📌 நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்த, தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்த பிரதமர் வேண்டுகோள்


📌 கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் - பிரதமர்


📌 நாட்டின் நலனுக்காகவும், உடல் நலனை பேணும் வகையில், சமையலில் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க பிரதமர் வேண்டுகோள்


📌 பெருமளவில் இறக்குமதி நடைபெறுவதால், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

Health Minister TN Dr.KG Arunraj

 


Dr K.G. Arunraj is the Health Minister of Tamil Nadu in the newly formed Tamilaga Vettri Kazhagam (TVK) government.

Background: 

He earned his MBBS from Madras Medical College and previously worked as a Government Medical Officer at a primary health centre in Krishnagiri

Minister Profile: 

Dr Kottaipalayam Ganesan Arunraj is a 46-year-old physician and former Indian Revenue Service (IRS) officer. He resigned from his civil services career to join politics.

AGARAM FOUNDATION

 


தங்களது பகுதிகளில், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் மாணவ/மாணவிகள் வறுமை காரணமாக தொடக்க கல்வி மற்றும் கல்லூரி மற்றும் இதர மேல்படிப்பினை தொடர இயலாத ஏழை குடும்பங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி கல்வியினை தொடர உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... என்றால் கல்வி கற்க உதவியவன் கடவுள் ஆவான். 


வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.


AGARAM FOUNDATION


முடிஞ்சா பகிருங்க ஒரு பத்து பேருக்கு உதவியா இருக்கும்

10 symptoms of Maturity

 



வலிகளை ஏற்றுக் கொண்டு பயணப்படு

  🌼 வாழ்க்கையில் வரும் வலிகளை ஏற்றுக் கொண்டு பயணப்படு 🌼 


 🌼 விழிகளில் வரும் கண்ணீர் கூட வழி காட்டும் 🌼 


 🌼 சோதனைகளை கடந்தால் தானே சாதனைகளை செய்ய முடியும் 🌼 


 🌼 வேதனைகளை விட்டு வெளியே வா 🌼 


 🌼 அதாவது உன்னை ஒதுக்கியவர்களுக்கும், ஒதுக்குபவர்களுக்கும் முதலில் நன்றி சொல்லியே ஆக வேண்டும் 🌼 


 🌼 அவர்கள் ஒதுக்கியதால் தான் நாம் தனித்துவமாக விளங்குகிறோம் 🌼 


 🌼 இன்று அஸ்தமித்த சூரியன் நாளை உதிக்கும் என்பதை மறவாதே 🌼 


 🌼 கடந்து கொண்டே இரு 🌼 


 🌼 யார் வென்றாலும், தோற்றாலும், பூமி நிற்காது என்பதைப் புரிந்து கொள் 🌼 


 🌼 உன்னுடைய தனித்துவ பாதையில் நடைபோடு 🌼 


 🌼 மயக்கம் தவிர்த்து நல்மதி கொண்டு போராடு 🌼 


 🌼 உன் வாழ்க்கை என்றும் உன்னோடு தான் என்று சிந்தித்து செயல் படு வெற்றி நிச்சயம் 👍 🌼 


 🌼 வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்  

சனி, 16 மே, 2026

கடைசி_பேனா; பெரியசாமி மதுரை, மீனாட்சி கோவில் வாசல்

 

மதுரை. மீனாட்சி கோவில் வாசல். 



பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல.


பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு. "தம்பி. பரீட்சையா."


"ஆமா தாத்தா. இன்னைக்கு கணக்கு பரீட்சை. பேனா மறந்துட்டேன்."


உடனே பெரியசாமி நல்ல பேனாவா எடுத்து கொடுப்பாரு. "இந்தா. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா."


"காசு எவ்ளோ தாத்தா."


"காசு அப்புறம். முதல்ல பரீட்சை எழுது. மார்க் வந்து சொல்லு. அப்புறம் காசு தா."


பிள்ளைங்க சிரிச்சுட்டே ஓடிடும். திரும்பி வராது. பெரியசாமி கேக்கவும் மாட்டாரு.


மனைவி தங்கம் திட்டுவா. "யோவ். பைத்தியமா உனக்கு. பேனா ஒன்னு பத்து ரூபா. இப்படி சும்மா கொடுத்தா நாம என்ன திங்க. வாடகை யார் கட்டுவா."


பெரியசாமி பழைய டயரிய எடுப்பாரு. அதுல தேதி வாரியா எழுதியிருப்பாரு.  

"12.03.2010 - ரமேஷ் - கணக்கு பரீட்சை - பேனா - பாக்கி"  

"05.06.2011 - சுமதி - ஹிந்தி பரீட்சை - பேனா - பாக்கி"  

"18.09.2013 - முருகன் - பத்தாவது பப்ளிக் - பேனா - பாக்கி"


டயரி முழுக்க பாக்கி. கூட்டி பார்த்தா மூவாயிரத்து சொச்சம் பேனா. முப்பதாயிரம் ரூபா.


"இத பாரு தங்கம். இது பாக்கி இல்ல. முதலீடு. ஒரு நாள் வரும்."


தங்கம் தலைல அடிச்சுக்குவா. "உன் முதலீடு மண்ணா போகுது. வயசாயிடுச்சு. இனிமே யாரு வர போறா."


இருபது வருஷம் ஓடிடுச்சு. பெரியசாமிக்கு இப்ப வயசு 80. கண்ணு மங்கிடுச்சு. காது கேக்கல. ஆனாலும் தினமும் கோவில் வாசல். அதே துணி. அதே பேனா. ஆனா இப்ப வியாபாரமே இல்ல. பிள்ளைங்க எல்லாம் ஜெல் பேனா. ஸ்கெட்ச். ஆன்லைன்.


ஒரு நாள் காலைல. கோவில் வாசல்ல ஒரு கார் வந்து நின்னுச்சு. உள்ள இருந்து ஒருத்தர் இறங்கினாரு. வயசு 35 இருக்கும். கோட் சூட். கையில ஒரு பூங்கொத்து.


நேரா பெரியசாமி கிட்ட வந்தாரு. கால்ல விழுந்தாரு. "தாத்தா. என்ன தெரியுதா."


பெரியசாமி கண்ண கசக்கினாரு. "தம்பி. வயசாயிடுச்சு. சரியா தெரியல."


"தாத்தா. பதினெட்டு வருஷம் முன்னாடி. பத்தாவது பப்ளிக் எக்ஸாம். கணக்கு பரீட்சை அன்னைக்கு காலைல. நான் அழுதுட்டே வந்தேன். பேனா உடைஞ்சு போச்சு. வீட்ல காசு இல்ல. நீங்க தான் தாத்தா ஒரு பேனா கொடுத்தீங்க. 'ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா'னு சொன்னீங்க. காசு கேக்கல."


பெரியசாமிக்கு லேசா ஞாபகம் வந்துச்சு. "தம்பி. நீ..."


"நான் தாத்தா. முருகன். அந்த பேனால தான் கணக்கு எழுதினேன். 98 மார்க். பாஸ் ஆனேன். காலேஜ் போனேன். இன்னைக்கு நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வச்சிருக்கேன். பேரு 'பேனா டெக்னாலஜிஸ்' தாத்தா. உங்க பேனால தான் என் வாழ்க்கை ஆரம்பிச்சது."


தங்கம் பாட்டி வாசல்ல நின்னு கேட்டுட்டு இருந்தா. வாய பொத்திக்கிட்டு அழுதா.


முருகன் பர்ஸ் எடுத்தான். ஒரு கவர். "தாத்தா. அன்னைக்கு பத்து ரூபா பாக்கி. இன்னைக்கு வட்டியோட தரேன்." உள்ள ஒரு செக். பத்து லட்சம்.


பெரியசாமி கை நடுங்குச்சு. "தம்பி. எனக்கு காசு வேண்டாம். நீ பெரிய ஆளா வந்துட்டியே. அதுவே போதும்."


"இல்ல தாத்தா. இது காசு இல்ல. நீங்க போட்ட முதலீடு. இன்னைக்கு லாபத்தோட திரும்ப வந்திருக்கு. இனிமே இந்த பிளாட்பாரம் வேண்டாம். உங்களுக்கும் பாட்டிக்கும் நான் இருக்கேன்."


அடுத்த நாள் பேப்பர்ல நியூஸ். "பிளாட்பாரம் தாத்தாவுக்கு சாஃப்ட்வேர் முதலாளி குருதட்சணை. பத்து லட்சம் பரிசு."


நியூஸ் பார்த்துட்டு அடுத்த நாள் இன்னொரு கார். "தாத்தா. நான் சுமதி. ஹிந்தி பரீட்சைக்கு பேனா வாங்கினேன். இப்ப ஹிந்தி டீச்சர்."


அடுத்து ரமேஷ். "தாத்தா. நான் இப்ப ஆடிட்டர். உங்க பேனா தான் என் முதல் பேலன்ஸ் ஷீட் எழுதுச்சு."


ஒரு வாரம். கோவில் வாசல் கல்யாண வீடு மாதிரி ஆயிடுச்சு. டாக்டர், இன்ஜினியர், கலெக்டர், போலீஸ். எல்லாரும் வரிசைல வந்து பெரியசாமி கால்ல விழுந்தாங்க. கையில பூ, பழம், கவர்.


தங்கம் பாட்டி பழைய டயரிய எடுத்தா. மூவாயிரம் பேரு. பாக்கி முப்பதாயிரம். ஆனா இப்ப வந்திருக்கு மூணு கோடி.


பெரியசாமி அழுதுட்டே சொன்னாரு. "தங்கம். நான் சொன்னேன்ல. இது பாக்கி இல்லனு. இது விதை. நான் விதைச்சேன். இன்னைக்கு காடா வளர்ந்து நிக்குது."


இன்னைக்கு மீனாட்சி கோவில் வாசல்ல ஒரு பெரிய கடை இருக்கு. பேரு "பெரியசாமி பேனா அங்காடி". வாடகை இல்ல. முருகன் வாங்கி கொடுத்துட்டான்.


கடைல போர்டு. "இங்க பரீட்சை எழுத போற பிள்ளைகளுக்கு பேனா இலவசம். மார்க் வந்து சொன்னா போதும். காசு அப்புறம்."


கீழ சின்னதா ஒரு வரி. "ஒரு பத்து ரூபா பேனா ஒரு உயிரோட வாழ்க்கைய மாத்தும். நம்புங்க."


இப்ப அந்த கடைய நடத்துறது யாரு தெரியுமா. முருகன். சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி. வாரத்துல ரெண்டு நாள் கோட் சூட்ட கழட்டி வச்சுட்டு கடைல உட்கார்ந்து பிள்ளைகளுக்கு பேனா கொடுக்குறான்.


"தம்பி. இது ராசியான பேனா. நூறு மார்க் வாங்கிட்டு வா."


நீ கொடுக்குறது பேனா இல்ல. நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒரு நாள் உன் கால்ல வந்து விழும். அன்னைக்கு தெரியும். நீ ஏழை இல்லனு. நீ தான் பெரிய பணக்காரன்னு.


ஸ்ரீ வத்சன் ரகுநாதன் என்பவரின் பதிவு இது... 


படித்தவுடன் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.. 


அந்த நண்பருக்கு நன்றி..

வெள்ளி, 1 மே, 2026

நிம்மதி

 


பெரியவர் சொன்ன ரகசியம்…ஒரு மனிதன்….எந்தக் குறையும் இல்லை அவனுக்கு…ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை.படுத்தால் தூக்கம் வரவில்லை… சிரமப்பட்டான்… அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்.பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு… அங்கே ஒரு பெரியவர் இருக்கார்… போய்ப் பாருங்கள்!”

ஆசிரமத்துக்குப் போனான்…பெரியவரைப் பார்த்தான். ஐயா…. மனசுலே நிம்மதி இல்லே… படுத்தா தூங்க முடியலே!” அவர் நிமிர்ந்து பார்த்தார்…தம்பி… உன் நிலைமை எனக்குப் புரியுது… இப்படி வந்து உட்கார்!” பிறகு அவர் சொன்னார்:உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது…தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!அது எப்படிங்க? சொல்றேன்… அது மட்டுமல்ல… 

மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!ஐயா  நீங்க சொல்றது எனக்கு புரியலே!புரியவைக்கிறேன்…. அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.வயிறு நிறையச் சாப்பிட்டான்.பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டான்…

பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்…கதை இதுதான்:ரயில் புறப்படப் போகிறது… அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை…ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.ரயில் புறப்பட்டது…தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை…எதிரே இருந்தவர் கேட்கிறார்: “ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே? இறக்கி வையேன்.அவன் சொல்கிறான்:”வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!’பெரியவர் கதையை முடித்தார். படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.ஏன் சிரிக்கிறே? பைத்தியக்காரனா இருக்கானே…ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?அது அவனுக்கு தெரிய வில்லையேயார் அவன்? இயல்பாக கேட்டான் நீதான்!”

என்ன சொல்றீங்க?பெரியவர் சொன்னார்: வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்…பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்! அவனுக்கு தனது குறை மெல்ல புரிய ஆரம்பித்தது…சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்… கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார். ”எழுந்திரு” என்றார் எழுந்தான்!”அந்த தலையணையைத் தூக்கு!” என்றார். தூக்கினான்…அடுத்த கணம்”ஆ”வென்று அலறினான். தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது ஐயா! என்ன இது? உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு… அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்…!அது … அது எனக்குத் தெரியாது…பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது… அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்! அவன் புறப்பட்டான்,, நன்றி பெரியவரே… நான் போய் வருகிறேன்! நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா? புரிந்து கொண்டேன்! என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அறிவின் வெளிச்சத்தால் அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா.

படித்தேன் ரசித்தேன்.  

நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது

 


நான் Five star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.


சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.


தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.


எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service... no need to wait like begger என்றார்.


என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன்.


வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார்.


Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef தயாரித்து கொண்டிருக்கிறார்.


அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.


நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன்.


சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்கள் எனக்கு பறிமானார்கள்.


Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.


நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.


அவர் என் பள்ளி நண்பர். He wanted to surprise me. He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.


பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களுக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாகப் பேசிக் கொண்டார்கள்.


அது தான் வாழ்க்கை.


சிலர் நம்மைப் பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.


உங்களுக்குக் கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.


அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.


Do not worry.


The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை


Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.


பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.


அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.


Stay blessed and enjoy your day.


Believe in The God.


நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.


When you are brutally broken down to pieces and still you give love and care to others.You yourself deserve an ocean of Love..

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...