அனுதாபத்தின் தேவை
முன்னொரு காலத்தில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் அடுத்தவர்களுக்கு மிகவும் உதவி செய்பவராயும், இரக்க குணம் வாய்ந்தவராகவும் மேலும் பெருந்தன்மை உடையவராகவும் இருந்தார். மற்றவர்களிடம் இருந்து எதையும் பதிலுக்குத் திரும்பப் பெறாமலேயே அவர் அனைவருக்கும் உதவி செய்தார். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு நாள் தூசி நிறைந்த சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது, ஒரு பர்ஸை அந்த மனிதர் பார்த்தார். அதை எடுத்து பார்க்கும் போது, அது காலியாக இருப்பதைக் கவனித்தார்.
திடீரென்று ஒரு பெண், ஒரு போலீஸோடு அங்கு வந்தாள். இவரைக் கைது செய்யும்படி, கூறினாள்.
அந்தப் பெண், இந்த மனிதர் அவளுடைய பணத்தை எங்கே மறைத்து இருக்கிறார் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள். ஆனால், அந்த மனிதர் பதிலளித்தார், “ நான் இதைக் காணும் போது, இது காலியாகத்தான் இருந்தது, அம்மா. “
அந்தப் பெண் இந்த மனிதரை திட்டினாள், “தயவு செய்து, திருப்பிக் கொடுத்து விடு, இது என்னுடைய மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டிய பணம்.”
அந்தப் பெண் துணை இல்லாமல் இருப்பவள். மேலும் அந்தப் பணம் அவளுடைய மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வைத்திருந்த பணம் என்பதையும் அந்த மனிதர், உணர்ந்து கொண்டார்.
அந்த மனிதர் உண்மையிலேயே வருத்தம் அடைந்தார். ஆகவே, தன்னிடம் உள்ள அனைத்துப் பணத்தையும், அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டு மேலும் கூறினார், ‘ இதை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கஷ்டத்திற்காக வருந்துகிறேன்.’
அந்தப் பெண் சென்ற பிறகு போலீஸ் காரர் இந்த மனிதரை மேற்கொண்டு விசாரிப்பதற்காக பிடித்துச் சென்றார்.
பணத்தைப் பார்த்து அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். சிறிது நேரம் கழித்து அதை எண்ணிப் பார்க்கும் போது, அவள் வைத்திருந்த பணத்தைப் போல இரு மடங்கு இருந்தது. அதைப் பற்றி யாரிடமும் எதுவும் கூறாமல் அதை வைத்துக் கொண்டாள்.
அடுத்த வாரம், தன்னுடைய மகனின் ஸ்கூல் பீஸை கட்டுவதற்காக அவள் சென்று கொண்டு இருக்கும் போது, தன் பின்னால் யாரோ வருவதை அவள் தெரிந்து கொண்டாள்.
தன் பணத்தை அவன் திருடலாம் என நினைத்தாள். எனவே பக்கத்தில் நின்ற போலீஸ் காரரை அணுகினார். இவளது பர்ஸ் காணாமல் போன அன்று விசாரித்த அதே போலீஸ் காரர்தான், தற்செயலாக அங்கு இப்போது நின்றார்.
அந்தப் பெண் போலீஸ் காரரிடம் தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றான் என்று கூறினார். ஆனால், திடீரென்று அந்த மனிதன் மயங்கிக் கீழே விழுந்ததை அவர்கள் பார்த்தார்கள்.
அவர்கள் அவனை நோக்கி ஓடினார்கள். சில நாட்களுக்கு முன்பாக, பர்ஸைத் திருடியதற்காக கைது செய்யப்பட்ட அதே மனிதன் அவன் என்பதை பார்த்தார்கள்.
அவர் பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து நலிவுற்று பல்வீனமாக இருந்து கொண்டு இருந்தார்.
அந்தப் போலீஸ் காரர் அந்தப் பெண்ணிடம்,“இவர் திருடரே அல்ல. இவர் உங்கள் பணத்தை திருடவே இல்லை. ஆனால், அந்தப் பணம் ஸ்கூல் பீஸ் கட்ட வைத்திருந்த பணம் என்பதைக் கேட்டவுடன் அவர் மிகுந்த வருத்தம் அடைந்து தன்னுடைய பணத்தை உங்களிடம் கொடுத்து விட்டார்” என்று கூறினார்.
அந்த மனிதர் எழுந்து நிற்பதற்கு, அவர்கள் உதவினார்கள். அவருக்கு சிறிது உணவும், தண்ணீரும் கொடுத்தார்கள். அந்த மனிதர் அந்தப் பெண்ணிடம் கூறினார், “தயவு செய்து, நீங்கள் முதலில் போய் உங்கள் மகனுடைய ஸ்கூல் பீஸைக் கட்டுங்கள். நீங்கள் தனியாக வந்து கொண்டு இருப்பதைப் பார்த்து, நான் உங்களை பின் தொடர்ந்தேன். யாராவது உங்கள் மகனின் ஸ்கூல் பீஸைத் திருடி விடக் கூடாது என்பதற்காகத்தான். “அந்தப் பெண் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லாமல் போய் விட்டது.
வாழ்க்கை நமக்கு வித்தியாசமான அனுபவங்களைக் கொடுக்கிறது…….. சில சமயங்களில் இது நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும், மேலும் சில சமயங்களில் இது நம்மை ஆச்சரியப்படவும் செய்ய வைக்கும்.
நம்முடைய கோபம், நம்பிக்கை இழந்த நிலைமை, மேலும் மனக் கசப்பு இவற்றால் நாம் தவறுகளுக்கும், தவறான தீர்மானங்களுக்கும் முடிவாக சென்று விடுகிறோம்.
இருந்த போதிலும், நமக்கு ஒரு இரண்டாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நாம் நமது தவறுகளைத் திருத்திக் கொண்டு, அவர்களுக்கு உரிய நன்மைகளை திருப்பிக் கொடுத்து விட வேண்டும். எல்லோரிடமும் இரக்க உணர்வோடும், பெருந்தன்மையோடும் நடந்து கொள்ள வேண்டும். நமக்குக் கொடுக்கப் பட்ட ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கணத்திலும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும், இவையே நமக்கு வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
பாடம்
நம்மை மனிதனாக ஆக்குவதற்கு உரிய இரண்டு மிகவும் முக்கியமான பண்பு நலன்கள் என்னவென்றால், 1. இரக்கப்படுவதற்கான திறமை, 2. துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும் அடுத்தவர்களுக்கு, அவர்கள் துன்பத்தைப் புரிந்து அனுதாபம் காட்டுவதும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பமும் இருப்பதுவும்தான்.

பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்கு