லேபிள்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2025

மகிழ்வித்து மகிழ் - உடம்பு, ஆத்மா உயிர் இறைவன் இயக்குகிறான்


 

மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை.

மாட்டுக்கு உயிர், அறிவு இரண்டும் உண்டு.

ஆனால்....

வண்டிக்காரன்.,

உயிரில்லாத வண்டியை, 

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி.

எந்த இடம் செல்ல வேண்டும்.

என்பதை தீர்மானித்து,

வண்டியை செலுத்துவான்.


எவ்வளவு தூரம்.. எவ்வளவு நேரம்..

எவ்வளவு பாரம்... அனைத்தையும்,

தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே.


அறிவிருந்தும்..,

சுமப்பது தானாக இருந்தாலும்,

மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது..


அதுபோல..,

உடம்பு என்ற ஜட வண்டியை.!

ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி.,

இறைவன் என்ற வண்டிக்காரன்.

 ஓட்டுகிறான்..


அவனே தீர்மானிப்பவன்.

அவன் இயக்குவான்.

மனிதன் இயங்குகிறான்.


எவ்வளவு காலம். எவ்வளவு நேரம்.

எவ்வளவு பாரம்..

தீர்மானிப்பது இறைவனே.


பயணம் முடிந்ததும்.

உடம்பு என்ற ஜட வண்டியிலிருந்து

ஆத்மா, உயிர் என்ற

மாட்டை பிரித்து விடுவார் இறைவன்.

இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை.!

இதை உணராதவன் துயரத்தில் மூழ்கி விடுகிறான்..


 திருச்சிற்றம்பலம்

நடராஜா நடராஜா

ஓம் சிவாயநம


மகிழ்வித்து மகிழ்

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths