லேபிள்கள்

திங்கள், 23 ஜூன், 2025

தீதும் நன்றும் பிறர் தர வாரா


 தீதும் நன்றும் பிறர் தர வாரா

" அன்பு" ஒரு அற்புதமான பண்பு. 

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவர்களிடத்தில் மட்டுமல்ல அனைவரிடமும் அன்பு காட்டுவது, அன்போடிருப்பது, அன்புடன் பழகுவது என்பது சற்று கடினமானது என்றாலும் அதற்கு ஈடு இணை கிடையாது.

அன்பு குருடாக இருக்கலாம்.

ஆனால் அதற்கு இருட்டில் வழி தெரியும்.

உண்மையான அன்பு எவ்வளவு பெரிய தவறையும் மன்னிக்கும்.

பொய்யான அன்பு விலகிச் செல்ல ஆயிரம் காரணத்தைத் தேடும்.

உங்களிடம் சொன்னால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்,

உங்களிடம் சொன்னால் நான் சரியாகிவிடுவேன் என்று பகிரப்படும் துயரங்களிலும் நிறைந்துள்ளது உண்மையான அன்பு.

எல்லோரிடமும் அன்பை எதிர் பார்க்க முடியாது. சிலர் அன்பு என்றால் என்ன விலை? என்று கேட்கிற அளவில் இருப்பார்கள். சிரிப்பே இல்லாத சிடுமூஞ்சி சிலருக்கு நிரந்தர சொத்து.

பழம் தின்னும் கிளியும் பிணம் தின்னும் கழுகும் ஒரே பறவைகள் இனம் தான் ...

ஆனால் தரம் வேறு.  தன்மை வேறு. எல்லோரும் மனிதர்களே என்றாலும் 

சில மனிதர்கள் இப்படியும் இருப்பார்கள்.

நாம் வாழப் போவது ஒருமுறை. அன்பு விலைமதிப்பற்ற ஒன்று. நாம் அன்புள்ளவர்களாக இருப்பதால் எதையும் இழக்கப்போவதில்லை.

அதேசமயம் மிகப் பெரிய மன நிறைவுக்கும் மற்றவர்களின் மதிப்பிற்கும் ஆட்பட்டவர்களாக வாழ்ந்தோம் என்ற நல்ல பெயருக்குச் சொந்தம் ஆவோம்..

" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

வள்ளுவர் கூற்று.அதுவே நமது வழி..

இரவு இனிதாகட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...