லேபிள்கள்

சனி, 27 ஜூன், 2026

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

 



அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம்


எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்;

அப்போது, ​​"சம்பளம்" (Salary) எனும் அழகிய பெண்ணின் மீது காதல் கொண்டோம்.


ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அவள் புன்னகையுடன் வருவாள்;

ஆனால் மூன்றாம் தேதிக்குள், "விடைபெறுகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவாள்!


சில நேரங்களில் அவள் தன் தோழிகளுடன் வெளியே சென்றுவிடுவாள்;

மறுசில நேரங்களில், மாதத் தவணைகளுடன் (EMIs) ஓடி ஒளிந்து கொள்வாள்.


நாங்கள் எங்கள் பைகளின் மூலைமுடுக்குகளிலெல்லாம் அவளைத் தேடிக்கொண்டிருப்போம்;

ஆனால் அவளோ, செலவுகள் எனும் வடிவில் பறந்து சென்றுவிடுவாள்!


ஒரு நாள், வாழ்க்கையின் திசை மாறியது.

எங்கள் தலைமுடி நரைக்கத் தொடங்கியது;

எங்கள் முழங்கால்களோ இப்படிச் சொல்லத் தொடங்கின —

"நண்பா... ஓய்வெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது!"


அப்போதுதான் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கதாநாயகி நுழைந்தாள்.

அவளுக்கு ஒப்பனைகள் தேவையில்லை, எந்தச் சிணுங்கல்களும் இல்லை;

மிகவும் எளிமையானவள், ஆயினும் பேரழகு கொண்டவள்.


அவளின் பெயர் – "ஓய்வூதியம்" (Pension).

அவளின் பாணி அற்புதம்;

அவளுடனான பிணைப்பு – ஒரு "வாழ்நாள் பிணைப்பு" (Lifetime Connection)!


இப்போது அவள் ஒவ்வொரு மாதமும் குறித்த நேரத்தில் வருகிறாள்; எந்தச் சாக்குப்போக்கும் சொல்வதில்லை, கோபித்துக்கொண்டு பாதியில் விலகுவதில்லை.


அவள் வங்கிக் கணக்கிற்குள் அமைதியாக அமர்ந்திருக்கிறாள்;

ஒரே ஒரு குறுஞ்செய்தியை (SMS) அனுப்புவதன் மூலம் என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறாள்!


"அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டுள்ளது..."


அந்தச் செய்தியைக் கேட்டதும், என் மனம் பாடல்களைப் பாடத் தொடங்குகிறது.


மாலை நேரத் தேநீருடன் நான் அமர்ந்திருக்கும்போது,

அவள் என் காதில் மென்மையாக இப்படிச் சொல்கிறாள் —

"கவலைப்படாதே, கதாநாயகனே...

இந்தப் படத்தின் கதை இன்னும் முடிந்துவிடவில்லை... நான் இப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்!"


ஆனால் அவளுக்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு;

ஆண்டுக்கு ஒருமுறை அவள் ஒரு சோதனையை நடத்துகிறாள்.


அவள் உங்களிடம் ஒரு "வாழ்வுச் சான்றிதழை" (Life Certificate) சமர்ப்பிக்கச் சொல்கிறாள்;

பிறகு மிகுந்த பாசத்துடன் இப்படி வினவுகிறாள் —

"சொல்லுங்கள்... நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா?"


அதற்கு நாங்கள் பெருமிதத்துடன் இப்படிப் பதிலளிக்கிறோம் —

"ஓ என் அன்பே!

அந்தப் புலி இன்னும் உயிருடன்தான் இருக்கிறது!" 😂


மேலும் ஒன்றைக் கேளுங்கள்... இதுதான் உண்மையான காதல்!

நாங்கள் எப்போதேனும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றால்,

அவள் எங்கள் வாழ்க்கைத் துணையின் கையைப் பற்றிக்கொள்கிறாள்;

அவர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்குத் துணை நிற்கிறாள்.


எந்தப் புகார்களும் இல்லை, எந்தத் துயரமும் இல்லை;

அவள் அமைதியாகத் தன் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுகிறாள்.


ஆகவே நண்பர்களே...

நீங்கள் பலவிதமான காதல்களைக் கண்டிருக்கலாம்;

ஆனால், இது போன்றதொரு அர்ப்பணிப்பு மிகவும் அரிதானது!  சம்பளம் என்னைக் கைவிட்ட இடத்தில்,

ஓய்வூதியம் என் வாழ்நாள் முழுவதும் எனக்குத் துணையாக நின்றது.


அதனால்தான் நான் சொல்கிறேன் —

முதுமையைக் கண்டு அஞ்சாதீர்கள்;

நாளை குறித்த கவலை கொள்ளாதீர்கள்.


ஓய்வூதியம் உங்கள் துணையாக இருந்தால்,

ஓய்வுக்காலம் கூட ஒரு புதிய உற்சாகமாகவே தோன்றும்.


உங்கள் அழகான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.


(ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் சமர்ப்பணம்)

ASAP MEANINGS


 

ASAP MEANINGS 


In every company meeting, the word ASAP is used very frequently, but few people know its

 true corporate meanings


ASAP : As Soon As Possible

is what the boss thinks when he utters.


ASAP : As Slow As Possible is what the team  understands.


ASAP : Ask Some Another Person is what the middle management thinks.


ASAP : After Several Approval Processes is what actually happens in large organizations.


ASAP : Aadha Soda Aadha Pani is the  interpretation of all after office hours.


And finally, the ultimate executive interpretation.


ASAP : Alcohol Solves All Problems.


A humorous take on managing stress and you guys thought that it had only one meaning


"ஈகோவால் சிதறும் குடும்பங்கள்…

 


படித்தேன். பகிர்ந்தேன்.


"ஈகோவால் சிதறும் குடும்பங்கள்…


விட்டுக் கொடுத்தால் மட்டும் தான் நிலைக்கும் உறவுகள்!


இன்று பல குடும்பங்களில் பணத்தால் பிரச்சனை இல்லை…

வீடு இல்லை என்பதாலும் பிரச்சனை இல்லை…

அன்பு இல்லாததால்கூட பல குடும்பங்கள் உடையவில்லை…


ஆனால்…

“நான் ஏன் முதலில் பேச வேண்டும்?”

“நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?”

“எப்போதும் நான் தான் விட்டுக் கொடுக்கணுமா?”


என்ற ஒரு சிறிய ஈகோ தான்…

பல வருட உறவுகளையும், சந்தோஷங்களையும், குடும்பங்களையும் சிதைத்து வருகிறது.


ஒரே வீட்டில் இருந்த அண்ணன்-தம்பிகள் இன்று பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்…

உயிராக காதலித்து திருமணம் செய்த கணவன்-மனைவி இன்று நீதிமன்ற வாசலில் நிற்கிறார்கள்…

பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய பிள்ளைகள், “அவர்களும் தங்கள் வழி… நானும் என் வழி…” என்று பிரிந்து செல்கிறார்கள்…


இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒன்று…


“ஈகோ”


பழைய காலத்தில் வசதி குறைவு இருந்தது…

ஆனால் உறவுகள் அதிகமாக இருந்தது.


இன்று வசதிகள் அதிகம்…

ஆனால் மனங்கள் தூரமாகி விட்டது.


அந்த காலத்தில்…

ஒரு வீட்டில் 10 பேர் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஏனென்றால் அப்போது இருந்தது பொறுமை… விட்டுக் கொடுத்தல்… புரிதல்… மரியாதை…


இன்று ஒரு வார்த்தைக்கே உறவுகள் உடைந்து விடுகிறது.

Whatsapp-ல் “typing…” வராததற்கே கோபம்.

Phone எடுக்கவில்லை என்றால் சந்தேகம்.

சிறிய கருத்து வேறுபாடு வந்தாலே “பேசவே வேண்டாம்” என்ற நிலை.


ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்…

இந்த உலகத்தில் நிரந்தரமானது எதுவும் இல்லை.

இன்று நம்முடன் இருப்பவர்கள் நாளை இருக்காமல் போகலாம்.


அப்போது…

“அவர்களிடம் இன்னும் கொஞ்சம் அன்பாக பேசியிருக்கலாமே…”

“ஒரு தடவை நாமே போய் சமாதானம் செய்திருக்கலாமே…”

என்று நினைத்து அழுதாலும்… காலம் திரும்பி வராது.


உண்மையில் விட்டுக் கொடுப்பது தோல்வி இல்லை!


விட்டுக் கொடுப்பவன் பலவீனமானவன் அல்ல…

உறவுகளை காப்பாற்ற தெரிந்த புத்திசாலி.


சில நேரங்களில்

“சரி விடு…” என்று சொல்லிவிடுவது,

ஒரு குடும்பத்தை காப்பாற்றும்.


சில நேரங்களில்

ஒரு Phone call…

ஒரு “சாப்பிட்டீங்களா?” என்ற கேள்வி…

ஒரு “மன்னிச்சுக்கோ…” என்ற வார்த்தை…

உடைந்த உறவுகளை கூட மீண்டும் சேர்க்கும்.


இப்போது வளரும் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்?


படிப்பு… வேலை… சம்பளம்… போட்டி…

இவை எல்லாம் கற்றுக் கொடுக்கிறோம்.


ஆனால்…


“விட்டுக் கொடுத்து வாழ்வது”


“மற்றவர்களை புரிந்து கொள்வது”


“கோபத்தை கட்டுப்படுத்துவது”


“உறவுகளை மதிப்பது”


இவற்றை கற்றுக் கொடுக்க மறந்து விட்டோம்.


ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால்

அதில் அன்பு மட்டும் போதாது…

சகிப்புத்தன்மையும் தேவை.


அம்மா கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும்…

அப்பா கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும்…

கணவன் மனைவியை புரிந்து கொள்ள வேண்டும்…

மனைவி கணவனை மதிக்க வேண்டும்…

பிள்ளைகள் பெற்றோர்களின் கஷ்டத்தை உணர வேண்டும்…


அப்போது தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.


இதை படிக்கும் உங்களிடம் ஒரு வேண்டுகோள்…


உங்கள் மனதில் யாராவது இருக்கிறார்களா?

பல நாட்களாக பேசாமல் இருக்கும் அண்ணன்…

தங்கச்சி… நண்பன்… அப்பா… அம்மா…

அல்லது உயிருக்கு உயிரான ஒருவர்…


தவறு யாருடையது என்பதை விடுங்கள்…

முதலில் பேசுங்கள்…

முதலில் சமாதானம் செய்யுங்கள்…


ஏனென்றால்…

உறவுகள் உயிரோடு இருக்கும் போது தான் அதன் மதிப்பு தெரியாது…

இழந்த பிறகு தான் அதன் வலி புரியும்.


“ஈகோவை ஜெயிக்க விடாதீர்கள்… உறவுகளை ஜெயிக்க விடுங்கள்!”


இதை படிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் யோசிக்கவும்…

நம்மால் உடைந்த ஒரு உறவு இருந்தால்…

இன்றே அதை சரி செய்ய முயற்சி செய்வோம்.


உறவுகள் முக்கியமா?

அல்லது ஈகோ முக்கியமா?


உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்…

இந்த பதிவை அதிகமாக பகிருங்கள்…

ஒரு உடைந்த குடும்பம் மீண்டும் சேர இதுவே காரணமாக இருக்கலாம்…


இலவச பள்ளி புத்தகம் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

 


வணக்கம்,

பள்ளி புத்தகம் தேவைப்படும் குழந்தைகள், மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள், கீழே உள்ள எண்களில் தொடர்ட கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும்,


9460031554


9826858785


9001236414


7489587851


9549677770


9098321420


9314459474


9879537809


9828926151


9825700070


9328620003


9727215130


9826267649


9879200245


9888989746


8107371224


9653150004


9406824074


8889712233


8889995731


9926311234


9752033255


8889995733


9826813756


முடிந்தவரை இந்த செய்தியை, குரூப்புகளுக்கு அனுப்பவும். உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும், அவசியம் படித்து மற்றவர்களுக்கு அனுப்பவும்.

"பிரார்த்தனை" செய்யும் கரங்களை விட உதவும் கரங்கள் மேலானது

‘பத்மஸ்ரீ’ வீ. காமகோடி இயக்குனர் பேராசிரியர் சென்னை ஐஐடி (IIT Madras)

 


"இவருக்கெல்லாம் எதுக்கு அவார்டு? அப்படி என்னத்த கிழிச்சிட்டாரு?"


சமூக வலைத்தளங்களில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கோ, கிரிக்கெட் வீரர்களுக்கோ விருது கிடைத்தால் கொண்டாடும் நாம், ஒரு விஞ்ஞானிக்கோ, பேராசிரியருக்கோ விருது அறிவிக்கப்பட்டால் உடனே கூகுளைத் திறந்து, "யார் இவர்? இவருக்கு எதுக்கு இந்த அவார்டு?" என்று தரம் பிரிக்கத் தொடங்கிவிடுவோம்.


சமீபத்தில் மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்ட சென்னை ஐஐடி (IIT Madras) இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடி குறித்தும் சிலருக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கலாம்.


அரசியல், சினிமா தாண்டி அறிவியல் உலகத்தில் நடக்கும் நிஜமான 'ஹீரோயிசங்கள்' நம் ஊடகங்களில் பிரதான செய்தியாவதில்லை. அதனால் இந்தக் கேள்வி எழுவதில் நியாயம் இருக்கிறது. வாருங்கள்... எந்த பில்டப்பும் இல்லாமல், வெறும் தரவுகளை (Facts) மட்டும் வைத்துப் பார்ப்போம். இவர் அப்படி என்ன சாதித்துவிட்டார்?


1. இந்தியாவின் முதல் 'மூளை' – சக்தி (SHAKTI Processor)


பாமரர்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் - உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், நீங்கள் ஓட்டும் கார், வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின், நம் ராணுவத்தின் ஏவுகணை... இவை அனைத்திற்கும் ஒரு 'மூளை' வேண்டும். அந்த மூளைக்குச் பெயர்தான் மைக்ரோபிராசசர் (Microprocessor). இத்தனை காலமும் இந்த மூளையை நாம் அமெரிக்காவிடமிருந்தோ (Intel, AMD), தைவானிடமிருந்தோதான் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். நாளை அவர்கள் "தரமாட்டோம்" என ஒரு பொத்தானை அணைத்தால், நம் ஒட்டுமொத்த நாடும் இருண்டுவிடும்.


இந்த அடிமைத்தனத்தை உடைத்து, "இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு மைக்ரோபிராசசர்" ஒன்றை உருவாக்கிய குழுவின் தலைமைச் சிற்பிதான் இந்தக் காமகோடி! அந்த சிப்-ன் பெயர் 'சக்தி' (SHAKTI).


நிபுணர்களுக்கான (Experts) சொல்லணும்னா - இது ஏதோ அசம்பிள் செய்யப்பட்ட சிப் அல்ல. உலகளாவிய ‘Open Source RISC-V ISA’ (Instruction Set Architecture) அடிப்படையில், முற்றிலும் ஸ்கிராட்ச்சில் (Scratch) இருந்து இவருடைய தலைமையிலான குழுவால் டிசைன் செய்யப்பட்டது. மொபைல் போன்களுக்கான 'E-Class' முதல், சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான 'S-Class' வரை பல விதமான பிராசசர்களை இவருடைய லேப் உருவாக்கியுள்ளது. இன்று உலக அளவில் செமிகண்டக்டர் டிசைன் (Semiconductor Design) ரேஸில் இந்தியாவை ஒரு கெத்தாக உட்கார வைத்த முதல் புள்ளி இவர்தான்.


2. "ஐஐடி என்பது அக்ரகாரம் அல்ல; அது அனைவருக்கான தர்பார்!"


பல தசாப்தங்களாக ஐஐடி (IIT) என்றாலே நம் சமூகத்தில் ஒரு பிம்பம் உண்டு: "அது ரொம்பப் பெரிய இடம்ப்பா. கோச்சிங் சென்டருக்கு பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் வசதியான வீட்டுப் பசங்க மட்டும் படிக்கிற இடம். நம்ம ஊரு அரசுப் பள்ளிப் பையன்லாம் அந்த கேட்டைத் தாண்டி எட்டிப் பார்க்கக் கூட முடியாது."


இந்த இரும்புத் திரையை உடைத்து சுக்குநூறாக்கியவர் காமகோடி.


 JEE இல்லாமலேயே ஐஐடி டிகிரி (BS in Data Science): உலகிலேயே முதல்முறையாக ஆன்லைன் மூலமான தரவு அறிவியல் (Data Science) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் (Electronic Systems) பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தினார். இதற்கு JEE அட்வான்ஸ்டு தேர்வு எழுத வேண்டியதில்லை. பிளஸ் 2 முடித்த எவரும், ஒரு சாதாரண நுழைவுத்தேர்வை எழுதி ஐஐடிக்குள் நுழையலாம். இன்று கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ பட்டதாரிகள்!

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடிஎம்: "அனைவருக்கும் ஐஐடிஎம்" என்ற திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் (Electronics) செய்முறைப் பயிற்சிகளை ஐஐடி பேராசிரியர்களை வைத்தே அவர்களுடைய பள்ளிக்கூடத்துக்கே சென்று சொல்லிக் கொடுக்க வைத்தார்.

 விளையாட்டு இடஒதுக்கீடு (Sports Quota): இந்திய ஐஐடி வரலாற்றிலேயே முதல்முறையாக, "படிப்பில் மட்டும் கில்லாடியாக இருந்தால் போதாது, ஒரு நல்ல விளையாட்டு வீரனாக இருந்தாலும் அவனுக்கு ஐஐடியில் சீட் உண்டு" என ஸ்போர்ட்ஸ் கோட்டாவைக் கொண்டு வந்த முதல் மனிதர் இவர்தான்.

 மருத்துவப் பொறியியல் (Medical Sciences & Tech): டாக்டர்கள் இன்ஜினியரிங் படிக்கலாம், இன்ஜினியர்கள் மருத்துவம் படிக்கலாம் என்ற 'BS in Medical Sciences and Engineering' என்ற புதிய துறையை இந்தியாவிலேயே முதல்முறையாகத் தொடங்கி வைத்தார்.


3. நாட்டின் 'டிஜிட்டல் காவலாளி' (National Security Expert)


இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும் வழக்கமான 'தியரி' பேராசிரியர் அல்ல; இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (National Security Advisory Board - NSAB) மிக முக்கிய உறுப்பினர்.


ஏன் தெரியுமா? எதிர்காலப் போர்கள் பீரங்கிகளை வைத்து நடக்கப் போவதில்லை; சைபர் உலகத்தில் 'மால்வேர்களை' (Malware) வைத்து நடக்கும். எதிரி நாடு ஒரு வைரஸை அனுப்பி நம் நாட்டின் மின்சாரக் கட்டமைப்பையோ, வங்கிச் சேவையையோ, பங்குச்சந்தையோ ஒரே நொடியில் முடக்க முடியும்.


அப்படிப்பட்ட ஆபத்துகளில் இருந்து இந்தியாவைக் காக்கும் 'ஹார்டுவேர் செக்யூரிட்டி' (Hardware Security) மற்றும் 'கிரிப்டோகிராஃபி' (Cryptography) துறையில் இந்தியாவின் நம்பர் ஒன் மூளை இவருடையது. நாம் தினமும் பயன்படுத்தும் UPI பரிவர்த்தனைகள், ஆதார் தரவுத்தளங்கள் ஆகியவற்றின் பின்புலத்தில் இருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு அரண்களில் இவருடைய பங்களிப்பு மிக அதிகம். கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக் கிடந்தபோது, 'ஆரோக்ய சேது' (Aarogya Setu) செயலியின் தொழில்நுட்பக் கட்டமைப்பைச் சரிசெய்த குழுவில் இரவும் பகலுமாக உழைத்தவர் இவர்.


4. ஸ்டார்ட்-அப் (Startup) களின் 'தொட்டில்' – சென்னை ஐஐடி!


இன்று சென்னை ஐஐடி ரிசர்ச் பார்க் (IITM Research Park) இந்தியாவிலேயே தலைசிறந்த 'டீப் டெக்' (Deep Tech) ஸ்டார்ட்-அப் மையமாகத் திகழ்கிறது.


 சமீபத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக 3D பிரிண்டிங் முறையில் ராக்கெட் இன்ஜினைத் தயாரித்து விண்ணில் செலுத்திய 'அக்னிகுல் காஸ்மாஸ்' (Agnikul Cosmos) எங்கே பிறந்தது? காமகோடியின் மேற்பார்வையில் உள்ள ஐஐடி வளாகத்தில்!

 காற்றில் பறக்கும் எலக்ட்ரிக் டாக்சிகளை உருவாக்கும் 'ePlane Company',

 இந்தியாவின் பாதுகாப்பான சொந்த மொபைல் இயங்குதளமான 'BharOS',

 கடலில் மிதக்கும் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிஸ்டம்...


எனத் தொழில்நுட்பத் துறையில் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பல நூறு ஸ்டார்ட்-அப்களுக்குத் தாய்ப்பால் ஊற்றி வளர்க்கும் இடம் சென்னை ஐஐடி.


மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ‘NIRF’ தரவரிசையில், ஒட்டுமொத்தப் பிரிவில் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாகவும் 'இந்தியாவின் நம்பர் 1 கல்வி நிறுவனம்' என்ற அசைக்க முடியாத சிம்மாசனத்தில் சென்னை ஐஐடியை உட்கார வைத்திருப்பதில் இவருடைய அசுரத்தனமான உழைப்பு இருக்கிறது.


5. கடல் தாண்டிய 'தமிழ்' ஐஐடி (IITM Zanzibar)


இந்திய வரலாற்றில் முதல்முறையாக நம் நாட்டின் ஐஐடி கேம்பஸ் ஒன்று வெளிநாட்டில் திறக்கப்பட்டது. அதுவும் எங்கே? ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் 'சான்சிபார்' (Zanzibar) தீவில்!


வெறும் காகிதத்தில் இருந்த ஒரு ஒப்பந்தத்தை, ஒரே ஆண்டில் நிஜமான கட்டிடங்களாக மாற்றி, ஆப்பிரிக்க ஏழை மாணவர்களுக்கும் இந்தியாவின் உயர்தரத் தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும். அதுமட்டுமல்ல, அந்த வெளிநாட்டு ஐஐடியின் முதல் இயக்குனராகப் பிரீத்தி அகிலயம் என்ற பெண் பேராசிரியரை நியமித்து, "இந்திய ஐஐடி வரலாற்றில் ஒரு ஐஐடியை வழிநடத்தும் முதல் பெண் இயக்குனர்" என்ற வரலாற்றுச் சாதனையையும் தன் கேம்பஸுக்குப் பெற்றுத் தந்தார்.


6. "பிள்ளையை நம்பி கொடுங்கள்..." – ஒரு தந்தையின் இதயம்!


இந்தத் தொழில்நுட்பச் சாதனைகளை எல்லாம் தாண்டி, ஒரு மனிதனாக அவர் செய்த ஆகப்பெரிய காரியம் ஒன்று உண்டு.


இந்தியாவின் பல ஐஐடிகளில் படிப்பு அழுத்தம் தாங்காமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தேசிய அளவிலான சோகமாக இருந்த நேரம் அது. சென்னை ஐஐடியிலும் அப்படிச் சில துயரங்கள் நடந்தன. பொறுப்பேற்ற புதிதில் காமகோடி செய்த முதல் வேலை, பிரச்சனையை மூடிமறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுதான்.


"Be Happy" என்ற வலைத்தளத்தைத் தொடங்கினார். மாணவர்களுக்கு 24 மணி நேரமும் இலவச உளவியல் ஆலோசனைகளை அறிமுகப்படுத்தினார். பெற்றோர்களைக் கூட்டி வைத்து அவர் சொன்ன அந்த ஒற்றை வரி:


> "உங்கள் பிள்ளைகளை என்னிடம் நம்பி ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள்; அவர்களைச் சிறந்த பட்டதாரிகளாக நான் உங்களிடம் பத்திரமாகத் திருப்பித் தருகிறேன்."


அதன் பிறகு, தேர்வு முறைகளில் தளர்வுகள், கேம்பஸுக்குள் 'வெல்னஸ் சென்டர்கள்', மன அழுத்தத்தைக் குறைக்க வார இறுதியில் கட்டாயக் கலை நிகழ்ச்சிகள் என ஐஐடியின் இறுக்கமான முகத்தை மாற்றி, அதை ஒரு 'ஹேப்பி கேம்பஸாக' மாற்றிக் காட்டினார்.


முடிவாக: இப்ப சொல்லுங்கள்... இவருக்கு எதுக்கு அவார்டு?


அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் சென்று மாதத்திற்கு பல கோடிகள் சம்பளம் வாங்கியிருக்க வேண்டிய ஒரு மூளை, நம் சென்னை அடையாறு ஆலமரங்களின் நிழலில் உட்கார்ந்து கொண்டு:


>>> நம் நாட்டுக்கான 'சிப்'-ஐ டிசைன் செய்கிறது;

>>> குக்கிராமத்து ஏழைப் பிள்ளைகளுக்கும் ஐஐடியின் கதவைத் திறந்து விடுகிறது;

>>> நாட்டின் ராணுவ ரகசியங்களைக் காக்கிறது;

>>> பல நூறு புதிய தொழில்முனைவோர்களை (Entrepreneurs) உருவாக்குகிறது.


பேராசிரியர் வீ. காமகோடிக்கு 'பத்மஸ்ரீ' கொடுத்திருப்பதன் மூலம் விருதுக்குப் பெருமையா, அவருக்குப் பெருமையா என்ற பட்டிமன்றத்திற்குள் நாம் போக வேண்டாம். ஆனால், தொழில்நுட்பத்தை வெறும் 'வியாபாரமாக' மட்டும் பார்க்காமல், அதைச் சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றும் 'ஆயுதமாகப்' பார்க்கும் ஒரு அசலான தமிழனுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம்... நம் ஒவ்வொருவருக்குமான பெருமை!


அடுத்த முறை யாராவது "இவரு என்னத்த கிழிச்சிட்டாரு?" என்று சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டால், இந்த லிஸ்ட்டை அவர்கள் முகத்தின் முன்  அன்போடு நீட்டுங்கள்! அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் !

சனி, 13 ஜூன், 2026

Meet Lance Naik Meenatchi Sundaram A - Keerthi Chakra Awardee

 


Meet Lance Naik Meenatchi Sundaram A.

A soldier who took a bullet on his face and still refused to stop.

On 19 December 2024, he was part of a counter-terrorist operation in Kulgam, South Kashmir.

He belongs to the Regiment of Artillery and was serving with 34 Rashtriya Rifles.

During the intense firefight, he sustained severe gunshot wounds to his face and right shoulder.

The injuries were serious enough to stop any normal person.

But Lance Naik Meenatchi Sundaram A did not step back.

Despite pain, bleeding and danger, he continued the fight.

In close combat, he engaged the terrorist with exceptional courage.

He neutralised one hardcore terrorist at close range.

His bravery helped his team and contributed to the success of the operation.

For this extraordinary act of courage, he was awarded the Kirti Chakra.

The Kirti Chakra is India’s second-highest peacetime gallantry award.

On 8 June 2026, President Droupadi Murmu presented him the award at Rashtrapati Bhavan.

His citation praised his indomitable spirit and exceptional bravery.

Lance Naik Meenatchi Sundaram A proved that courage is not the absence of fear.

It is the will to complete the mission despite injury, pain and danger.

He took a bullet on his face.

But he stood like a man of steel.

And he showed the nation what the Indian Army is made of. 

ஞாயிறு, 7 ஜூன், 2026

நலவாழ்வியல் சிந்தனைகள்!!

 


நலவாழ்வியல் சிந்தனைகள்!!

🟤🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟤

🌗சொன்ன உடன் புரிந்து கொள்ளவில்லை என்று சலிக்கும் நாம், மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு சொன்னோமா என்று யோசிப்பதில்லை.


🌗தூரத்தில் இருந்து பார்த்து  நல்லவரா, கெட்டவரா என்று கணிப்பதை விட, பழகிப் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.


🌗மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாக சிந்தித்து முடிவு எடுப்பது. ஆனால்  அதை அப்படியே செய்யாமல் மாற்று வழியில் செல்வதே பிரச்சினை வரக் காரணம்.


🌗நடந்தவற்றை மறந்து விடுங்கள். வாழ்வும், தாழ்வும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நல்லதை செய்து கொண்டே வந்தால், விரைவில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.


🌗வலி, வேதனை, வருத்தம், துன்பம் எல்லாம் விதியின் விளையாட்டு. சமாளிக்க பழகினால், இறைவன் அருளால் இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் எல்லாம் கிடைக்கும்.

🟤🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟤

நல்லதே நினை.

நல்லதே நடக்கும்.

வாழ்க வளமுடன்

வாழ்க நலமுடன்

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

 


வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை


1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 

கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.


2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 

மலம் கழிக்க வேண்டும். 

கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.


காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.


3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 

6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். 

ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.


4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், 

சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும். 

வந்தால் கட்டுக்குள் இருக்கும்.


5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் 

தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். 

கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.


உணவை நன்றாக மென்று, 

பொறுமையாக உண்ணுங்கள்.


6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. 

அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்; 

புற்றுநோயை உருவாக்கும்.


7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், 

வாழ்நாளைக் குறைக்கும்.

குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.


8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். 

மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். 

மது, புகை கூடவே கூடாது.


9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு 

சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.


உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு 

அடுத்த திட உணவு கூடாது.


10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.


11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.


12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*

தயவு செய்து

வேர்க்கடலை,

பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!

கீரை வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,

ராகியை

சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்!

ஆப்பிள்,ஆரஞ்சை விட பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள் அதிகம்!

தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???

தயவு செய்து மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!

கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்!

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்???

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்

🥃 சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்!

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *

 இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நாம் நம் நடைமுறை வாழ்க்

கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.

இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை 

கட்டாயம் உறங்க வேண்டும்...          

நமது நலனில் என்றும் உங்களுடன்...

✿✿✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்... ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...

சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..✿✿✿....

𝐓𝐡𝐞 𝐎𝐥𝐝 𝐊𝐞𝐲

 


𝐓𝐡𝐞 𝐎𝐥𝐝 𝐊𝐞𝐲


A retired professor had a habit of locking an old wooden box every night.

Inside it were his most precious papers, memories, and a small amount of cash.


One day, he misplaced the tiny key.


He searched everywhere—his desk, cupboards, bookshelves, even under the carpets.

Nothing.


He called his son, an engineer.


The son came with gadgets, flashlights, and tools. He examined the lock carefully and said,

“Don’t worry, Father. I’ll break it open.”


Just then, the professor said,

“Wait. Let me call my old college roommate first.”


The son was puzzled.

“Why? He’s not a locksmith!”


A little later, the old roommate arrived. They smiled, laughed, and began talking about their college days.


After an hour, the roommate suddenly asked,

“Do you still hide important things inside your old dictionary, like you did in the hostel?”


The professor froze.


He walked to his bookshelf, pulled out a thick dictionary, and there—between the pages—was the tiny key.


The son laughed.

“All my engineering tools, and your friend solved it just by knowing you!”


The professor smiled and said:


“Experts can solve problems.

But old friends remember the places where you lose yourself.”


𝐌𝐨𝐫𝐚𝐥 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐬𝐭𝐨𝐫𝐲:


Stay connected with people who have known you through different chapters of life.

Sometimes, they don’t just help you find solutions—they help you find parts of yourself you forgot

படித்ததில் பிடித்தது

 


படித்ததில் பிடித்தது 

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம்


எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்;

அப்போது, ​​"சம்பளம்" (Salary) எனும் அழகிய பெண்ணின் மீது காதல் கொண்டோம்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அவள் புன்னகையுடன் வருவாள்;

ஆனால் மூன்றாம் தேதிக்குள், "விடைபெறுகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவாள்!

சில நேரங்களில் அவள் தன் தோழிகளுடன் வெளியே சென்றுவிடுவாள்;

மறுசில நேரங்களில், மாதத் தவணைகளுடன் (EMIs) ஓடி ஒளிந்து கொள்வாள்.

நாங்கள் எங்கள் பைகளின் மூலைமுடுக்குகளிலெல்லாம் அவளைத் தேடிக்கொண்டிருப்போம்;

ஆனால் அவளோ, செலவுகள் எனும் வடிவில் பறந்து சென்றுவிடுவாள்!

ஒரு நாள், வாழ்க்கையின் திசை மாறியது.

எங்கள் தலைமுடி நரைக்கத் தொடங்கியது;

எங்கள் முழங்கால்களோ இப்படிச் சொல்லத் தொடங்கின —

"நண்பா... ஓய்வெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது!"

அப்போதுதான் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கதாநாயகி நுழைந்தாள்.

அவளுக்கு ஒப்பனைகள் தேவையில்லை, எந்தச் சிணுங்கல்களும் இல்லை;

மிகவும் எளிமையானவள், ஆயினும் பேரழகு கொண்டவள்.


அவளின் பெயர் – "ஓய்வூதியம்" (Pension).

அவளின் பாணி அற்புதம்;

அவளுடனான பிணைப்பு – ஒரு "வாழ்நாள் பிணைப்பு" (Lifetime Connection)!


இப்போது அவள் ஒவ்வொரு மாதமும் குறித்த நேரத்தில் வருகிறாள்; எந்தச் சாக்குப்போக்கும் சொல்வதில்லை, கோபித்துக்கொண்டு பாதியில் விலகுவதில்லை.


அவள் வங்கிக் கணக்கிற்குள் அமைதியாக அமர்ந்திருக்கிறாள்;

ஒரே ஒரு குறுஞ்செய்தியை (SMS) அனுப்புவதன் மூலம் என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறாள்!


"அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டுள்ளது..."


அந்தச் செய்தியைக் கேட்டதும், என் மனம் பாடல்களைப் பாடத் தொடங்குகிறது.


மாலை நேரத் தேநீருடன் நான் அமர்ந்திருக்கும்போது,

அவள் என் காதில் மென்மையாக இப்படிச் சொல்கிறாள் —

"கவலைப்படாதே, கதாநாயகனே...

இந்தப் படத்தின் கதை இன்னும் முடிந்துவிடவில்லை... நான் இப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்!"


ஆனால் அவளுக்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு;

ஆண்டுக்கு ஒருமுறை அவள் ஒரு சோதனையை நடத்துகிறாள்.


அவள் உங்களிடம் ஒரு "வாழ்வுச் சான்றிதழை" (Life Certificate) சமர்ப்பிக்கச் சொல்கிறாள்;

பிறகு மிகுந்த பாசத்துடன் இப்படி வினவுகிறாள் —

"சொல்லுங்கள்... நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா?"


அதற்கு நாங்கள் பெருமிதத்துடன் இப்படிப் பதிலளிக்கிறோம் —

"ஓ என் அன்பே!

அந்தப் புலி இன்னும் உயிருடன்தான் இருக்கிறது!" 😂


மேலும் ஒன்றைக் கேளுங்கள்... இதுதான் உண்மையான காதல்!

நாங்கள் எப்போதேனும் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றால்,

அவள் எங்கள் வாழ்க்கைத் துணையின் கையைப் பற்றிக்கொள்கிறாள்;

அவர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்குத் துணை நிற்கிறாள்.


எந்தப் புகார்களும் இல்லை, எந்தத் துயரமும் இல்லை;

அவள் அமைதியாகத் தன் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுகிறாள்.


ஆகவே நண்பர்களே...

நீங்கள் பலவிதமான காதல்களைக் கண்டிருக்கலாம்;

ஆனால், இது போன்றதொரு அர்ப்பணிப்பு மிகவும் அரிதானது!  சம்பளம் என்னைக் கைவிட்ட இடத்தில்,

ஓய்வூதியம் என் வாழ்நாள் முழுவதும் எனக்குத் துணையாக நின்றது.


அதனால்தான் நான் சொல்கிறேன் —

முதுமையைக் கண்டு அஞ்சாதீர்கள்;

நாளை குறித்த கவலை கொள்ளாதீர்கள்.


ஓய்வூதியம் உங்கள் துணையாக இருந்தால்,

ஓய்வுக்காலம் கூட ஒரு புதிய உற்சாகமாகவே தோன்றும்.


உங்கள் அழகான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.


(ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் சமர்ப்பணம்)

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...