லேபிள்கள்

சனி, 28 ஜூன், 2025

Cyber Crime - Retired Employee - OTP sharing experience; சைபர் குற்றம் - ஓய்வு பெற்ற ஊழியர் - OTP பகிர்வு அனுபவம்

 



ஒரு நண்பர் சமீபத்தில் ரிட்டையர் ஆனார். . 

அப்போது கிடைத்த 25 லட்சத்தை வங்கியில் மனைவியோடு  உள்ள Joint அக்கௌண்டில் டெபாசிட் செய்தார். 

ATM மற்றும் PIN நம்பர்களை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார்.  

ஒரு நாள் மாலையில் நண்பர்களுடன் சைபர் Crime பற்றி  பூங்காவில் அரட்டை அடிக்கும் போது தன்னோட மொபைல் போனை வீட்டில் மறந்து விட்டு வந்ததை உணர்ந்தார்.

பதட்டத்துடன் வீடு திரும்பிய நண்பர், போன் பத்திரமாக டேபிள்ல இருந்தது கண்டு மகிழ்ந்தார்.  

மனைவியிடம் " ஏதாவது போன் வந்திச்சா  ?"  "ஆமாம் நம்ம பேங்க் மேனேஜர் பேசினார் . ஒரு OTP வரும் - அந்த நம்பரை சொல்லுங்க ன்னு கேட்டாரு." "குடுத்தியா?"  "உடனே கொடுத்துட்டேன் ".

அலறியடித்து போனில் தன் நெட் பேங்க் அக்கவுண்டை  துழாவினார் . நல்ல வேளையாக  பணம் பறி போகவில்லை.  

 " என்ன நம்பர் குடுத்தே "? " 6460 ன்னு OTP  வந்திருந்துது - நம்மோடது தான் Joint அக்கௌண்டாச்சே - அதனாலே 6460 ல... என் பாதி 3230 ன்னு நம்பர் குடுத்தேன்.  எனக்குத் தெரியாத Nett  பாங்கிங்கா "😀  அப்பாடா 😂😂😂   படித்ததில்_சிரித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...