விவாகரத்து பெற பல காரணங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில காரணங்களே முக்கிய பங்கு வகிக்கிறது.
விவாகரத்து ஆன ஒரு சகோதரியின் வாழ்க்கை கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தனக்கு 18 வயது இருக்கும்பொழுது திருமணம் முடிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, தனது 33 வயதில் கணவனின் குடும்பத்தாரால் கட்டாயப்படுத்தி விவாகரத்து தரப்படுகிறது.
15 ஆண்டுகள் அவள் அவனுடன் வாழ்ந்த காரணத்திற்காக, நிவாரண தொகையாக எவ்வளவு கொடுத்தார்கள் தெரியுமா?
200000(இரண்டு லட்சம்)…இதை லட்சம் என்பதற்கு பதில் லஞ்சம் என்றே கூறலாம்.
விவாகரத்து பெற காரணத்தையும் சொல்கிறேன்…
பெண்ணானவள் திருமணம் ஆனபிறகு ஓரிரு வருடங்களில் குழந்தை பெற்காவிடில் அவளை மலடி என்று இந்த சமூகம் கருதுகின்றது.
இதில் குறைபாடானது அப்பெண்ணிற்கு அல்லது அவளின் கணவருக்கா என்று கூட ஆராயாமல் பெண்ணையே இந்த சமூகம் சாடும்.
இந்த வகையில் இந்த சகோதரிக்கும் நடந்தது அதுவே. சிகிச்சைக்கு சென்று பார்க்கும் பொழுது, மனைவி ஆரோக்கியமாக உள்ளார். பல உயிரணு சோதனை மூலம் அவரின் கணவரே குறையுடன் இருக்கிறார் என மருத்துவச் சோதனை மூலம் உறுதியாகிறது.
இதை தெளிவாக உணர வேண்டும் எனில், விவாகரத்து பெற்ற பெண் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து அவருத்கு குழந்தை பெற்று தரும் பொழுது, இது மேலும் உறுதியாகிறது.
தன் வீட்டில் பெற்றோர்கள் தன் மனைவியை கஷ்டப்படுவதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத அந்த கணவர் அந்தப் பெண்ணை விவாகரத்து கொடுத்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைக்கிறார். இதிலும் அவரின் பெற்றோர் வற்புறுத்துதலால் நடக்கிறது.
அந்த அக்கா முறைப்படி விவாகரத்தும் பெறுகிறார்கள், 15 வருடங்கள் வாழ்ந்த ஒரு பெண் தன் கணவனை பிரிந்து வேறு ஒரு ஆணுடன் அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் ஒரு வயதான ஆணுக்கு அவரின் மனைவி இறந்ததால் இவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள்.
என்ன ஒரு அவல நிலை பார்த்தீர்களா?
பிறந்த 18 வயது வரை பெற்றோருடன் கழித்து, மீதம் 15 வருடங்களில் தன் அப்பாவின் வெற்றிடத்தை நிரப்பும் தன் கணவன், என்ற ஆணுடன் கழித்து, விவாகரத்து பெற்று வேறு ஒரு ஆணுடன் வாழும் நிலை வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?….
இதுவே விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த மிகப் பெரிய கஷ்டம் என்று நினைக்கிறேன்.
அதை அப்பெண் எப்படி கடந்து வந்தார் என்று கேட்டால்..கல்லைப் போன்ற இறுகிய மனதுடன் அப்பெண் தன் கணவனைப் பிரிந்து வேறொர ஆணின் குழந்தைகளுக்கு தாயாக இருக்கவும் முற்படுகிறார். அங்கும் கட்டாயத்தால் மறுதிருமணம் நடக்கிறது.
ஏனென்றால், இந்த சமூகத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்கவில்லை என்றாலும் குற்றம்.
விவாகரத்து பெற்று தனியே இருந்தால், அதும் குழந்தைகள் இல்லாமல் இருந்தால், ஊர் சுற்றுகிறாள் என்று அவதூறு பேசுவார்கள்.
அதும் ஆண் குழந்தை பெற்கவில்லே அல்லது அப்படி பெற்ற ஆண்குழந்தை தந்தை போல இல்லை என்றால், இவள் வேறு யாருக்கு சென்றாலோ என்று மனசாட்சி இல்லாமல் கேட்கும் சமூகம் தான் இது.பெண்ணானவள் ஆண் குழந்தை பெற்க கட்டாயப்படுத்துவது இதற்காக தான்..உறுதி செய்து கொள்கிறார்களாம்.
இது போன்ற சூழ்நிலை என்றால் என்ன செய்ய வேண்டும்?
தொடர்ச்சியான சிகிச்சைக்கு செல்ல வேண்டும். பயனில்லை என்ற கடைசி சூழ்நிலையில்.
அப்பெண்ணின் கணவர் இன்றைய கால நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும். அதற்கும் கணவருக்கு விருப்பம் இல்லை என்றால் ஊரை விட்டு வெளியுரில் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்க்கலாம்.
ஏன் வெளியூர் என்றால், வளர்ப்பு மகன் என்று பாடியே கிராமங்களில் உறவினர்கள் குழந்தையை சொற்களால் காயப்படுத்தி விடுவார்கள்.
இல்லையென்றால் உனக்கு நான் எனக்கு நீ என்று கூட வாழலாம். ஆனால் அன்பு கொண்ட ஒருவரை இது போன்ற இயற்கையான குறையை கூறி விவாகரத்து பெற கூடாது.
இதில் எதுக்கும் கணவர்/ மனைவி அனுமதிக்கவில்லை என்றால் அவர் உங்களுக்கு பொருத்தமானவர் அல்ல. நீங்கள் வேறொரு திருமணம் தாராளமாக செய்து கொள்ளலாம்.
…
ஏனென்றால், இதில் தவறு எதுவும் இல்லை, நம்மில் ஒரு இயலாமை என்றால், அதை வேறொரு வழியில் நிவர்த்தி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை.
தம்பதியினர் வெளியூரில் வீடு எடுத்து தங்கி, மருத்துவரை அணுகி செயற்கை கருத்தரிப்பு செய்து, கர்ப்பம் தரித்ததும் வீட்டிற்கு தகவல் சொல்லி அதை கொண்டாடலாம்.
கிராமங்களில் மக்களுக்கு இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை, நகரங்களில் பல இடங்களில் செயற்கை கருத்தரிப்பு மையம் உள்ளது. இது குறித்து நண்பர்களுடன் விவரிக்கவும் பலர் தயங்குகின்றனர். இது பற்றி நண்பர்களுடன், மருத்துவருடன் கலந்து பேசுங்கள், இந்த விஷயத்தில் தயக்கம் கொள்ளுதல் கூடவே கூடாது.
இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, விவாகரத்தும் பெற தேவையில்லை. மனைவி மீது அன்பு கொண்ட கணவர் தன் உயிரணுவை செயற்கையாக கருவாக்கி குழந்தை பெற்று கொள்ளலாம்.
இந்த தீர்வு…கொண்டு
காதல் கொண்ட மனைவியை கணவன் பிரியாமல், இருவருக்கும் சமூகத்தில் எந்த களங்கமும் இல்லாமல் வாழலாம்.
இந்த பதிவு அன்புள்ள கணவன் மனைவி அனைவருக்கும் சமர்ப்பணம்.💝


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக