லேபிள்கள்

செவ்வாய், 22 ஜூலை, 2025

'' மனிதனாக வாழ்வது எப்படி?'' இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும்..




'' மனிதனாக வாழ்வது எப்படி?''

♻️இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்த நாம் ,மனிதனாக வாழ வேண்டும்

சரி..மனிதனாக வாழ்வது எப்படி ?

♻️எல்லா உயிர் இனங்களைக் காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது

♻️இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் கொடுக்கப்பட்டு உள்ளது

♻️மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது இயற்கையின் சட்டமாகும்.

♻️அடுத்து சாதி,சமய ,மதக் கொள்கைகளை மனிதனால் உருவாக்கியதாகும்.. அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் தற்போது அழிந்து கொண்டு இருக்கிறான்.

♻️உலகில் உண்டாகும் அனைத்துப் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணம் சமய, மத ,சாதி, வேற்றுமைகளால் தான்..

♻️இதை உண்டாக்கியவர்கள் ஆதிக்க எண்ணம் படைத்தவர்கள். இந்தப் பொய்யான மதங்களை உண்மை என்று எண்ணி அவர்கள் காட்டிய கொள்கையில் வாழ்வதால், மனிதநேயம் இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் வேறுபட்டு வாழ்ந்து வருகிறான்.

♻️அவற்றை முழுவதும் விட்டு விட்டால் ,மனிதன் மனிதனாக வாழ்ந்தவனாகக் கருதப்படுவான்

♻️அடுத்துப் பொருள்.. அனைருக்கும் பொதுவானது. அதை அனைவருக்கும் பொதுவாக, சமமாக பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும், அதுவே மனிதப் பண்பாகும்



♻️உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது பொருளின் அதாவது பணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது ,அந்த நிலையை மாற்றுவது மனிதப் பண்பாகும்.

♻️எவ்வளவு தான் பணம், பட்டம், பதவி,படிப்பு இருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணம் என்னும் பிணியில் அகப்பட்டு அழிந்து விடுகிறோம்

♻️அந்தப் பணமோ, பதவியோ, மரணத்தைக் காப்பாற்றுவது இல்லை

♻️மரணத்தைக் காப்பாற்றாத, பணம், பதவி இருந்து என்ன பயன்? என்பதை மனிதனாகப் பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும். இவையே மனிதப் பண்பாகும்

♻️மனிதன் பிறக்கிறான்; பணத்தைத் தேடி அலைகிறான்; பெண்ணாசை, மண்ணாசை அவனை வாட்டி வதைக்கிறது.

♻️இதற்கெல்லாம் அடிமையாகி, இந்த உலக வாழ்வே நிரந்தரம் எனக் கருதி இங்கேயே தங்கி விட நினைக்கிறான்.

♻️தன் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, பல தவறுகளை செய்கிறான்.

♻️தான் வாழ வந்த இந்த உலகம், ஒரு வாடகை வீடு என்பதை அவன் உணர்வதில்லை.

♻️மனிதன் காலப்போக்கில் மனிதநேயம் மறந்து, பொருட்களின் மீது நாட்டம் கொண்டு மனிதன் மனிதனாக வாழ மறந்து வருகிறான்.

♻️பொருட்கள் நிரந்தரம் அல்ல, மனித வாழ்வும் நிரந்தரம் அல்ல என்பதை உணர வேண்டும்..

😎ஆம்.,நண்பர்களே..

🏵️மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும்..

அப்படி செய்வதால் நமக்கும் மன நிறைவு கிடைக்கும்

⚽வந்தோம் , பிறந்தோம் , வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல்ல வழி வகைகள் செய்வோம்.....

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths