லேபிள்கள்

வியாழன், 3 ஜூலை, 2025

நன்மையின் முடிவு இன்பம்

 



நன்மையின் முடிவு இன்பத்தையும், தீமையின் முடிவு துன்பத்தையும் விளைவிக்கும்.

கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் உச்சரிப்பவருக்கு எந்தவித துன்பமும் உண்டாகாது.

மன அமைதியை அனைவருக்கும் வழங்குவதை வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுங்கள்.

தக்க சமயத்தில் எச்சரித்து நம்மை திருத்துபவனே உண்மையான நண்பன்.

துாய்மையான உள்ளம் கொண்டவன் எல்லாவற்றிலும் துாய்மையையே காண்பான்.

மனதில் குற்றம் இருப்பதாலேயே மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

சரியான சமயத்தில் எச்சரித்து நம்மை நல்வழிப்படுத்துபவனே நண்பன்.

துன்பம் கூட கடவுளின் பிரசாதமே. அதனால் பக்தியுணர்வு அதிகரிக்கிறது.

எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சோம்பலுக்கு இடம் அளிக்காதீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுங்கள்.

பொறுமைக்கு சமமான பண்பு இவ்வுலகில் வேறில்லை.

மற்றவர் மகிழ்ச்சியில் தான் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

வாழ்க வளமுடன்

என் அன்பான இனிய காலை வணக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...