லேபிள்கள்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு

 


தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் பாதுகாப்பாக இருக்கின்றனர், வந்தாரை வாழவைக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

இந்தியாவின் முதல் மாநகராட்சி என்கிற கெளரவத்தோடு பிற மாநில மக்களால் அறியப்படும் நாட்டின் 5ஆவது பெரு நகரம் சென்னை.

சுமார் ஒரு கோடிக்கும் மேலானோர் வசிக்கும் சென்னையில், ஒரு பக்கம் உழைக்கும் மக்கள். மற்றொரு பக்கம் உயர்குடிகள் என, அனைவரும் ஒருசேர உள்ளனர்

பிழைப்புத் தேடி வருவோரை, மொழி, மதம் என எந்த வேறுபாடுமின்றி அரவணைக்கிறது சென்னை.

இன்றைய நவீன சென்னை, 384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணம் என்பதில் இருந்து தொடங்கியது.

மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர், தங்களுக்காக கோட்டை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புக்காக வாங்கிய மணல் திட்டுதான், 1639ஆம் ஆண்டு இதே நாளில் செனை பட்டணம் என்ற பெயரில் கையெழுத்தானது. அன்றுதான் சென்னை பிறந்தது.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, தமிழ்நாட்டுக்கே தலைமை இடமாக தற்போதும் விளங்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இங்கு கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டடத்திலும், சென்னையின் பூர்வக்குடி மக்களின் உழைப்பும் கலந்திருக்கிறது.


2 கருத்துகள்:

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

  ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...