லேபிள்கள்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

நியூட்டன் அவர்களின் மூன்று அறிவியல் விதிகள்


நியூட்டன் அவர்களின் மூன்று அறிவியல் விதிகள்

முதல் விதி. (செயலற்ற தன்மை விதி), ஒரு பொருள் வெளியில் இருந்து விசை யில்லாமல்  தன் நிலையில் இருந்து மாறாது

·         விளக்கம்:

எந்த ஒரு பொருளின் மீது வெளிப்புற விசை செலுத்தப்படாவிட்டால், ஓய்வு நிலையில் உள்ள பொருள் ஓய்வு நிலையிலேயே இருக்கும், மேலும் இயக்கத்தில் உள்ள பொருள் ஒரே சீரான இயக்கத்திலேயே தொடர்ந்து பயணிக்கும்

·         எடுத்துக்காட்டு:

கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது இந்த விதியின் ஒரு எடுத்துக்காட்டுதிடீரென கார் நின்றாலோ அல்லது பிரேக்குகள் போடப்பட்டாலோ, உடல் செயலற்ற தன்மையால் முன்னோக்கி நகரும்

2ம் விதி. (முடுக்கம் விதி, F = ma) மற்றும் ஒரு பொருளின் மீது செயல்படும் நிகர விசை (F) அதன் நிறை (m) மற்றும் முடுக்கம் (a) ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமம் (F = ma). 

விளக்கம்:

ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசைக்கு (F), அதன் முடுக்கம் (a) நேர் விகிதத்திலும், பொருளின் நிறை (m) நேர்மாறாகவும் இருக்கும்இந்த விதி கணித ரீதியாக F = ma என்று குறிப்பிடப்படுகிறது.

·         எடுத்துக்காட்டு:

ஒரு பொருளை தள்ளும்போது, நாம் செலுத்தும் விசையை அதிகரித்தால், பொருளின் வேகம் அதிகமாகும்அதே பொருளின் நிறை அதிகமாக இருந்தால், அதே வேகத்தை அடைய அதிக விசை தேவைப்படும்.

மூன்றாவது விதி (வினை-எதிர்வினை விதிஆகும்

·         விளக்கம்:

ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான மற்றும் எதிர் திசையில் ஒரு எதிர்வினை உண்டு.

·         எடுத்துக்காட்டு:

ஒரு சுவரில் பந்தை எறியும்போது, பந்து சுவரில் பட்டு திரும்பி வருவதை நாம் கவனிக்கலாம்சுவரில் பந்தை எறிவது ஒரு செயல், சுவர் பந்தை பின்னோக்கி எறிவது எதிர்வினை ஆகும்.

இது இயற்கையின் விதிகள். இந்த விதிகள் சமூக மாற்றத்திற்கும் பொருந்தும். இருக்கும் சமூக அமைபின் கருத்தியல் தாக்கத்தின் மீது வெளியில் இருந்து கூடுதல் விசை தாக்கம் ஏற்படுத்தாத வரை அந்த கருத்தியல் சமூகம் நீடித்து நிலைத்து நிற்கும்

இருக்கும் சமூக அமைப்பின் கருத்தியல் மீது செலுத்தப் படும் புதிய கருத்தியல் விசை (f) பழைய சமூக கருத்தியல் (m) மற்றும் முடுக்கும் வேகம் ஆக்சிலரேசன் (a) க்கு சமம் ஆகும்.

f=m×a 

இந்த அறிவியல் விதிகள் குறித்த தெளிவோடுதான் கம்யூனிஸ்ட்டுகள் புரட்சியை நோக்கிஎண்ணற்ற தியாகங்கள் செய்து தங்கள் களப்பணியை  தொடர்கிறார்கள். அவர்களின் எதிர்விசைகளின் தாக்கமே இன்றைய மாற்றங்கள் என்பதை உணர வேண்டும்

1 கருத்து:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...