பனை மரத்தை வைத்து விட்டு,_
இளநீரை எதிர்பார்க்க முடியுமா?
நெல்லை விதைத்து விட்டு,
கோதுமையை அறுவடை செய்ய முடியுமா ?
உன்னை மாற்ற
வேண்டுமென்றால்,
உன் எண்ணத்தை
தெளிவாக்கு...
நல்ல எண்ணங்களை
விதையுங்கள்,
நல்லவை நாடி வரும்..
நினைத்தது எல்லாம் நடப்பதில்லை...
நடப்பது எல்லாம் நினைத்ததில்லை...
நினைப்பது தவறா?
இல்லை,
நடப்பது சரியா?
விடையற்ற வினாக்களுக்கு விடை தேடும் வாழ்க்கை வினோதமானது..!!
யார் மனதையும் காயப்படுத்தாமலும் யாரிடமும் காயப்படாமலும் இருக்க வேண்டும் என்றால்
அளவோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் கற்றுக் கொள்ளுங்கள்...!
மருத்துவமனையில் எல்லா*டெஸ்ட்டும் செய்துவிட்டு
ஒன்றுமில்லை என்றவுடன்...
செலவு செய்த அனைத்தும் நம் நிம்மதிக்கான விலை என்றறிக...!!!!!
இந்த நிலையற்ற உலகில் நீ எதை மாற்ற நினைத்தாலும்....
அதுநிலைத்து நிற்கப் போவதில்லை. பிறகு ஏன் உனக்கு தேவையற்ற மனக்கவலை...!!!!.
கிடைத்த சொற்ப வாழ்க்கையை மனக்கவலையின்றி..!!!!
சந்தோசமாக வாழ்ந்துவிட்டுச் செல்.
வாழ்க வளமுடன்
இயன்றவரை இல்லாதவர்களுக்கு உதவுவோம்.

இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்றலாம்.
பதிலளிநீக்கு