ஜாதகம் பார்த்தோம்...
பணம் இருந்தது...
சாதி பொருத்தமும் சரியாக இருந்தது...
திருமணத்திற்கு கடவுளும் சாட்சி இருந்தார்...
*அவள் காப்பாற்றப்படவில்லை.* 😶
📿 ஜாதகம் காப்பாற்றவில்லையா?
💰 பணம் காப்பாற்றவில்லையா?
🧬 சாதி பொருத்தம் காப்பாற்றவில்லையா?
🛐 கடவுள் கூட காப்பாற்றவில்லையா?
ஏனெனில் இவை அனைத்தும் மனிதன் உருவாக்கிய பிம்பங்கள்.
உண்மை வாழ்க்கையை வாழ அன்பும், புரிதலும், மனசாட்சியும் போதும்.
💔 மக்களில் இன்னும் சிலர்
“ஜாதகம்” பார்த்து
“சாதி” வைத்து
மனப்பொருத்தம் இல்லாத உறவுகளை கௌரவத்திற்காக சேர்த்து வைப்பது இன்றளவும் உண்டு.…
குடும்பத்தை நம்பி , குடும்ப கௌரவத்திற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் உண்டு 💔
அந்த ஜாதகம், அந்த சாதி, அந்த பொருத்தம் — யாரையும் காப்பாற்றவில்லை.
🙏 விதியென்றே கை கட்டிக் கிடக்கிறோம்…
ஆனால் சாலை கடக்கும்போது இரண்டு பக்கமும் பார்த்துவிட்டுதான் கடக்கிறோம்!
🧠 வாழ்க்கை என்பது மூட நம்பிக்கையால் அல்ல,
நேர்மை, மனப்பொருத்தம், அன்பு ஆகியவற்றால் வளர வேண்டும்.

இது போன்ற மணமகனின் பெற்றோர்கள் இனியாவது திருந்துவார்களா?
பதிலளிநீக்கு