லேபிள்கள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

வெற்றி பெற்றவர்களிடம் இருக்கிறது..!!


 

அடி மேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது!

தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் சரியான தீனி எங்கே? எங்கே? என்கிற_ தேடல் இருக்கிறது!

சூழ்நிலைக்கு தகுந்தபடி அனுசரித்துப் போகும் அடக்கம் இருக்கிறது!

விமர்சனத்தை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளும் விவேகம் இருக்கிறது!

அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் மூளை இருக்கிறது!

குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாக ஒதுக்கும் அக்கறை இருக்கிறது!

கடமைகள் காத்துக் கிடக்க பொழுது போக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது!

நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது!


இவை அனைத்தும் வெற்றி பெற்றவர்களிடம் இருக்கிறது..!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக