லேபிள்கள்

சனி, 20 செப்டம்பர், 2025

நாளை என்பது நமதே!



நாளை
என்பது நமதே!
ஆம்.
நாளை என்பது நிச்சயம் நமதே!!

சுவரில் எறிந்த பந்தும்
அண்ணாந்து உமிழும் எச்சிலும்
நிச்சயம் நமதே

இன்றைய செய்கை
நாளைய பயனே!

வழிகாட்டி நாமேநல்
வழி காட்டலாமே!

விட்டுக் கொடுத்து போவது கெட்டுப் போய் விட்டது
விலகிச் செல்லும் போது?

தட்டிக் கேட்டல் என்பது
பட்டுப் போய் விட்டது
தரம் தாழும் போது?

கட்டுச் சோறு காலம் முழுதும் மணக்காது
புறம் கூறல் எல்லா நாளும் வெல்லாது

வாழ்க்கை கண்ணாடி போன்றது
நம்மை நமக்கு நிச்சயம் காட்டும்

வர்ணம் பூசி மகிழும் நாம்
வாழ்க்கையின் வண்ணங்களை (உறவுகளை)
எண்ணங்களால் அழித்திட வேண்டாம்

நாளை என்பது நமதே!
ஆம்.

நாளை என்பது நிச்சயம் நமதே!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Protect Your Second Heart

  Protect Your Second Heart Did you know your body has more than one “heart”?  Scientists call the calf muscles the body’s second heart beca...