லேபிள்கள்

சனி, 20 செப்டம்பர், 2025

"இன்று நாம் செய்வது நாளை நமக்கு நிச்சயம் நடக்கும்..!!!"

 


இன்றைய இரவு  நேர சிந்தனை

அழைத்த மறுநொடியே வந்து பேச காத்திருப்பவர்களைத் தவிர்க்கவும் வேண்டாம்,

உங்களைத் தேடுபவர்களை நீங்கள் காயப்படுத்தவும் வேண்டாம்.

உங்களைத் தொலைப்பவர்கள்‌ இடத்தில் உங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம்.

உங்களைத் தவிர்க்கப்படும் இடங்களின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கவும் வேண்டாம்.

அழைக்கும் பொழுது அலைபேசியை பார்த்து வஞ்சமின்றி சிரித்துக் கொண்டு எடுத்தாலே போதும்.

வாழ்க்கை பரமபத கட்டத்தை விட புதிரானது....

எந்த ஏணி ஏற்றிவிடும் எந்த பாம்பு இறக்கி விடும் எனவும் தெரியாது....

அதைவிடவும் எது ஏணி எது பாம்பு என்று கண்டு கொள்வதும் (உருட்டுவதும்) எளிதல்ல.... ஆனாலும் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும்....

மரணத்தை விட கொடூரமானது வாழ்ந்து கெட்டவர்கள் வாழ்வை தொடர நேரும் அவலம்.. அடக்கமாகும் வரை அடக்க ஒடுக்கமாக இரு என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்களின் அவலங்கள்....

ஆனாலும் வாழ்ந்து காட்டியே ஆக வேண்டும்....

ஆகவே..

இறக்கும் வரை பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்....

நாவடக்கம் கொள்ளுங்கள்....

முடிந்தவரை உதவி செய்யுங்கள்....

முதியவர்களிடம் கருணை காட்டுங்கள்....

"இன்று நாம் செய்வது நாளை நமக்கு நிச்சயம் நடக்கும்..!!!"

இரவு இனிதாகட்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Protect Your Second Heart

  Protect Your Second Heart Did you know your body has more than one “heart”?  Scientists call the calf muscles the body’s second heart beca...