லேபிள்கள்

புதன், 29 அக்டோபர், 2025

தாய் தந்தையிடம் இணக்கமாக இரு இல்லை என்றால், உனக்கு எந்த உதவியும் செய்ய என்னால் இயலாது. '


 

ஒரு சூஃபி ஞானி.

இவர் தனது குடிசை சுவற்றில்

ஒரு வாசகத்தை எழுதி வைத்திருந்தார்.

' நீ உன் தாய் தந்தையிடம்

இணக்கமாக இல்லை என்றால்,

இங்கிருந்து எழுந்து சென்று விடவும்.

உனக்கு எந்த உதவியும் செய்ய என்னால் இயலாது. '

இதுதான் அந்த வாசகம்.

அந்த வாசகத்தை பற்றி

அவர் சொல்லும்போது,

ஒருவன் தன் தாயிடம்

அன்பாக, இணக்கமாக இல்லை என்றால்,

வேறு யாரிடமும் அன்பாக இருக்க இயலாது.

அவன் தன் மனைவி மற்றும்

வேறு எவரிடமும் இணக்கமாக

இருக்க முடியாது.

தந்தையிடம் அன்பாக இல்லை என்றால்,

அவனால் ஒரு குருவிடம் அன்பாக,

இணக்கமாக இருக்க இயலாது.

அவனுக்கு கடவுளின் மேல் நம்பிக்கை

இருக்காது.

பெற்றவர்களை அன்புடன் நடத்த வேண்டும்.

அவர்களை எவ்வளவு ஆழமாக நேசிக்க முடியுமோ, அவ்வளவு ஆழமாக

நேசிக்க வேண்டும்.

இல்லை என்றால்,

ஞான வழி என்பது

எட்டாத தூரம்தான் ' என்பார்.

ஓஷோ

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்

தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்

இரண்டும் இருந்தால் பேரைவாங்கலாம்

பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம் - இந்த

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப்போல்

அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்

கவிதைகள் வழங்கு பாரதியைப்போல்

மேடையில் முழங்கு திரு.வி.க. போல்

மேடையில் முழங்கு திரு.வி.க. போல்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த

நாடே இருக்குது தம்பி

கவிஞர் வாலி

1 கருத்து:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...