1950 -70 💥
மாப்பிள்ளைக்கு கவர்ன்மென்ட் உத்தியோகம். பென்ஷன் உண்டு. சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி. உங்க பொண்ண ஒரு குறையும் இல்லாம பார்த்துப்பார்.
1970 - 90 💥
மாப்பிள்ளைக்கு பாங்க் உத்தியோகம். கை நிறைய சம்பளம். வீடு கட்ட, கார், வீட்டு உபயோகப் பொருட்கள் என்ன வாங்கணும்னாலும் குறைந்த வட்டில கடன்னு எல்லா வசதியும் உண்டு. இந்த இடம் கிடைச்சா உங்க பொண்ணு அதிர்ஷ்டக்காரின்னுதான் சொல்லணும். கூட குறைய இருந்தாலும் எப்படியாவது இந்த இடத்தை முடிச்சுடுங்கோ.
1990 - 2010 💥
பையன் சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான். இரண்டு லகரத்தில சம்பளம். எச் 1 பி விசாக்கு அப்ளை பண்ணிட்டான். அமெரிக்கா போய்டுவான். அப்புறம் உங்க பொண்ணு ராணி தான்.
2010 லிருந்து இப்போ வரை
எம் பொண்ணு 2 லக்ஷம் சம்பாதிக்கிறா, மாப்பிள்ளைக்கு அதுக்கு குறைவா சம்பளம் இருக்கக் கூடாது. எச் 1 பி விசா வைச்சிண்டிருக்கா. அப்பப்ப அமெரிக்கா, இங்கிலாந்துன்னு சுத்திண்டிருப்பா. பையனுக்கும் எச் 1 பி விசாவோ அல்லது அமெரிக்கா க்ரீன் கார்ட் ஹோல்டராக இருந்தால் தேவலை. பையனுக்கு சமைக்க மற்றும் வீட்டு வேலைகளை எல்லாம் செய்ய தெரிஞ்சு இருக்கணும்.. பொண்ணோட அட்ஜஸ்ட் பண்ணி வாழத் தெரியனும். பையன் லக்கேஜோட (பையனோட அப்பா, அம்மா) வரக் கூடாது. பெண் சோசியல் டிரிங்கிங்கெல்லாம் இருக்கலாம். யாரும் அப்ஜெக்ட் பண்ணக் கூடாது.
சமூகத்தின் பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் - யார் எழுதியது தெரியவில்லை, நன்றாக இருக்கிறது. அதனால் பகிர்ந்தேன்.

we can see this in our community.
பதிலளிநீக்கு