லேபிள்கள்

சனி, 22 நவம்பர், 2025

ஆறும் சிங்கமும்

 


ஆறும் சிங்கமும்

வாழ்க்கையில்   இன்பமும், மேலும்  துன்பமும் -இவை இரண்டும் அங்கே சேர்ந்தே இருக்கும்.    கஷ்டமான  சூழ்நிலைகள்  வந்தால், பிறகு  அங்கே மகிழ்ச்சியான  கணங்களும்  கூடவே இருக்கும்.    ஆனால், ஒவ்வொரு சூழ்நிலையிலும்,  நாம் சிறிது நேரம் நின்று அந்த  சூழ்நிலையைப் புரிந்து கொள்ள  முயற்சி செய்ய  வேண்டும்; பிறகு  முன்னோக்கி  செல்ல வேண்டும்;   அப்படி செய்தால்  போதும்; வாழ்க்கை  அற்புதமாக  மாறிவிடும்.   

முன்னொரு  காலத்தில், காட்டில்  பெய்த  கனமழைக்குப் பிறகு,    ஒரு சிங்கம்   ஆற்றைக் கடக்க  வேண்டியதாயிற்று.    மழையால் ஆறு முழுவதும் வெள்ளம்  கரை புரண்டோடியது.   எனவே சிங்கத்தை  சுற்றி எல்லா பக்கங்களிலும்  தண்ணீர் சூழ்ந்து  கொண்டது.    இயற்கையாகவே, நீந்துவது என்பது  சிங்கத்திற்கான  வழக்கம் அல்ல.    ஆனால் சூழ்நிலை  மாறிவிட்டது.   எப்படி என்றால்  சிங்கம்   ‘ஆற்றினைக்  கடந்தாக வேண்டும்;  இல்லையென்றால்,   உயிரை  விடவேண்டும். “

கிட்டத்தட்ட  முழுவதுமாக  மூழ்கிக் கொண்டிருக்கும் போது, அந்த சிங்கம் ஆத்திரம் அடைந்து  கொடூரமாக  கர்ஜனை செய்தது.    சிங்கம் பலமுறை  தண்ணீரைத் தாக்குவதற்கு  முயற்சி செய்தது.   ஆனால், ஒவ்வொரு  முறையும், அவன்,   ஆற்றைக் கடப்பதில்,  தோல்வியே  அடைந்தது.  

      அந்த சிங்கம்  சோர்வடைந்து கீழே விழுந்தது.    அதனுடைய  அமைதியில், ஆறு  கூறுவதை அது  கேட்டது. “இங்கு  இல்லாத   ஒருவரிடம்  ஒருபோதும் சண்டை  போடாதே”.

அந்த சிங்கம்  கவனமாகப் பார்த்து விட்டு, பிறகு  கேட்டது,“இங்கே என்ன இல்லை ?”

“உன்னுடைய  பகைவன் இங்கு இல்லை”, ஆறு பதில் கூறியது.    “நீ ஒரு சிங்கம்,  நான் ஒரு ஆறு.   நான் உன்னுடைய  பகைவனும் அல்ல.”

இதையெல்லாம்  கேட்டுக் கொண்டிருந்த பிறகு,  அந்த சிங்கம்  நின்றது;    அமைதியாக  அமர்ந்தது; மேலும்  ஆற்றின்  போக்கினை  ஆய்ந்து பார்த்து  படித்தது. சிறிது  நேரத்திற்குப் பிறகு,   சிங்கம்,  ஆற்றினுடைய ஒரு  குறிப்பிட்ட  நீரோடையைக்  கண்டு பிடித்தது.    அது கரையைச் சென்று  அடைவதையும்  பார்த்தது. அதனுள்   இறங்கி நீந்திடவும்  முயற்சி செய்தது.    அடுத்த பக்கத்திற்கு  செல்வதற்காக!      சிங்கம் இறங்கிய  இடத்தில் ஆற்றின்  வேகம் குறைவு என்று இருந்த நிலையில், அது  கரையைச் சென்று  அடைந்தது. 

நாமும் கூட  பிறருடன் சண்டை  போட்டுக் கொண்டுதான்  இருக்கிறோமா?    அது  அன்பானவர்களுடனா? அல்லது  நம்முடனேயா…..?

நண்பர்களே,   வாழ்க்கை என்பது  ஒரு போராட்டம் அல்ல! ஆனால் அது ஒரு பயணம்!     இந்தப் பயணத்தில்,  ஒவ்வொரு சூழ்நிலையிலும்  சண்டை போட்டுக் கொண்டும்   அல்லது போராடிக் கொண்டும்  இருப்பதற்கு  முன்பாக, நமக்கு   சில கணங்கள்    இடை நிறுத்தம் செய்வதற்கு  தேவைப் படுகிறது.     அந்தக் கணங்களில்   நாம் தங்கி இருந்து,   இடைநிறுத்தத்தை  உணர்ந்து, அந்த கணங்களில் அதைப் பற்றி முழுவதும் படித்து, தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதன்  பிறகு, சண்டை  போடுவதற்கு என்று  இங்கே எதுவுமே இல்லை என்பதை  நாம் புரிந்து  கொள்வோம்.     

உங்களுடைய வாழ்க்கையிலும்,  மேலும் உறவு முறைகளிலும்,   கர்ஜித்துக் கொண்டிருக்கும் நமது  அகங்காரத்தையும்,   கர்வத்தையும்  விட்டுவிடுங்கள்.   முதலில்   புன்சிரிப்பினைச் சிந்துங்கள். பிறகு  மேலும் அந்த புன்சிரிப்பை பரவச் செய்யுங்கள்.

நமது வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும்,  நாம் அவசியமாக,  அகங்காரத்தையும்,  கர்வத்தையும்  விட்டுவிட வேண்டும்  என்பது தேவை.   எப்போதும் பெருமையாக பேசுவதை நிறுத்தி விட வேண்டும்.    சிறிது நேரம்  இடைநிறுத்தம்  செய்து,  புன்சிரிப்பை சிந்துங்கள்; பிறகு அந்தப் புன்சிரிப்பைப் பரவச்  செய்திடுங்கள்.

அமைதியான   ஆனந்தமான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து  வழிகளையும்  அறிந்து  கொண்டிருப்பது,  அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது  மூலம், நாம் இந்த புன்சிரிப்பை,  நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா இடங்களிலும்  பரவச் செய்ய முடியும்.

பாடம்

மனம்  ஒத்திசைவான  நிலையில் வரும் போது,  சந்தர்ப்பங்களும்,  சூழ்நிலைகளும்  அதன் மீது எந்தவிதமான  விளைவையும், ஏற்படுத்த முடியாது.    மேலும், அங்கு  அதனுள்ளே  எந்தவிதமான  தொல்லைகளும்    இல்லை !    

1 கருத்து:

  1. எப்போதும் பெருமையாக பேசுவதை நிறுத்தி சிறிது நேரம் புன்சிரிப்பை சிந்துங்கள்.

    பதிலளிநீக்கு

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths