லேபிள்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

தண்டவாளங்களில் கற்கள் ஏன்

 தண்டவாளங்களில் கற்கள் ஏன்




ரயில்கள் இரும்பு பெட்டிகளால் உருவாக்கப்படுவதால் அதிக எடையுடன் இருக்கும். இந்நிலையில் தண்டவாளத்தின் மீது ரயில்கள் செல்லும்போது அழுத்தம் காரணமாக தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு கற்கள் நிரப்பப்படுகின்றன.

கடும் வெப்பம், நில அதிர்வு உள்ளிட்ட காரணங்களால் ரயில் தண்டவாளங்கள் சுருங்கவும், விரியவும் செய்யும். இதுபோன்ற நேரங்களில் தண்டவாளங்கள் விலகாமல் பாதுகாப்பதற்காகவும் கற்கள் நிரப்பப்படுகின்றன.

அதேபோல் ரயில் தண்டவாளங்களில் நிரப்பப்படும் கற்கள் மிகவும் கூர்மையானவையாக இருக்கும். இது மர விட்டங்கள் வழுக்கி சென்றுவிடாமல் தடுக்க உதவும்.

தண்டவாளங்கள் ஏன் உயரத்தில் அமைக்கப்படுகின்றன என்று தெரியுமா? ஜல்லி கற்கள் நிரப்பி தண்டவாளங்கள் அமைப்பதற்கு காரணம், நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு தான்.

மேலும் களைகளின் வளர்ச்சி, இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லி கற்கள் நிரப்பப்படுகின்றன.




1 கருத்து:

  1. இது போன்ற பொதுஅறிவு விவரங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths