லேபிள்கள்

வியாழன், 25 டிசம்பர், 2025

வாழ்க்கை கடவுள் தந்த பரிசு.

 



🎋வாழ்க்கை கடவுள் தந்த பரிசு.


🎋பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லுமுன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்.


🎋உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்.


🎋உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள்.


🎋உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்.


🎋உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.


🎋உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.


🎋சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற  பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகை தவழ விடுங்கள்....



1 கருத்து:

  1. வாழ்க்கை கடவுள் தந்த பரிசு. நன்றி பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...