லேபிள்கள்

வியாழன், 4 டிசம்பர், 2025

வாழ்க்கையில் விதியும் மதியும்

 


தாயம் விழுந்தால் தான் ஆடவே ஆரம்பிக்க முடியும்!


காயம் பட்டால் தான் வாழவே ஆரம்பிக்க முடியும்..!!


கண்ணீர்த்துளி விலைமதிப்பற்றது..!

அதைப் பொய்யான உறவுக்காக வீணடிக்காதீர்கள்..!!

எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்..!


ஆனால், மனிதர்களிடம் மட்டும் விழிப்பாய் இருங்கள்..!!


மனசு சரியில்லை நான் அப்புறம் பேசுறேன் எனும் உறவை விட.. 


மனசு சரியில்லை, அதான் உன் கிட்ட பேசுறேன் எனும் உறவே வலிமையானது..!!


வாய்ப்பை இழந்தோர் வருத்தப்படுகிறார்கள்..!


வாய்ப்பைப் பெறாதோர்.. போராடுகிறார்கள்.!

வாய்ப்பை உருவாக்குவோர்.. வெற்றி பெறுகிறார்கள்..!!


தவறை மன்னித்து விட்டேன் என்பதை விட.. மறந்து விட்டேன் என்பதே உறவைட் பலப்படுத்தும்!!


உங்களைப் புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்..!


புரியாதவர்களுக்குப் புதிராகவே இருந்து விடுங்கள்..!!


கை தட்டுபவர்களுக்கும் கைதட்டல் வாங்குபவர்களுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை 'முயற்சியைத்' தவிர..!!


வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல... குலுக்கிப் போடும் போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி..!


வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி..!!


வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...