லேபிள்கள்

வியாழன், 1 ஜனவரி, 2026

மருத்துவ_பழமொழிகள்

 


மருத்துவ_பழமொழிகள்


அசைவம்/சைவம்


🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.


🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.


🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லி.


🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.


🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.


🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.


🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.


🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.


🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.


🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.


🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.


🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.


விஞ்சு வாதத்தின் விளைவு போம்.


🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.


🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.


🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.


🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.


🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும்.


🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .


🌿19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.


இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்... படித்தால் மட்டும் போதாது பயன்படுத்தி பலன் பெறுங்கள் , மூலிகைவளம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று...

2 கருத்துகள்:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths