லேபிள்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2026

ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவில் தலையாட்டி பொம்மையும்..!!

 


தமிழக சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பண்டைய காலம் தொட்டு, இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும், யாருடைய ஆட்சி பொற்காலமாக இருந்தது என்று கேட்டால், வரலாற்றைப் பற்றி அறிந்த அனைவரும் சொல்வது, சோழர்களின் ஆட்சிதான் என்று தயங்காமல் சொல்வார்கள்.

அதிலும் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தான் உண்மையிலேயே தமிழகம் பொற்காலமாக விளங்கியது என்று அனைவரும் சொல்வார்கள்.

அவருடைய ஆட்சியில் நாட்டு மக்கள் மட்டுமல்லாது, கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், கலாச்சாரம், நாகரீகம், விவசாயம், ஆன்மீகம், உணவுமுறை, ராணுவம், போர்ப்படை என அனைத்து துறைகளும் மற்ற நாடுகளுக்கு ஒர் முன் மாதிரியாகவே விளங்கியது.

ராஜ ராஜ சோழன் ஆட்சி சரி, இப்படி உலகமே மெச்சும் வகையில், சாளுக்கிய தேசம், ஈழம், கடாரம் என கீழை நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, சுமார் 29 ஆண்டுகள் தன்னுடைய ஆட்சியை பொற்காலமாக வைத்திருந்த ராஜ ராஜன் ஏன் வட இந்தியாவை மட்டும் விட்டு, மெனக்கெட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டு, இன்றைக்கு உலகமே அன்னாந்து பார்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான், இது எப்படி சாத்தியமானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கின்றனர்.

தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்து அதை கைப்பற்றிய பின்னர் தான், அங்குள்ள சிவாலயங்களை பார்த்து பிரமித்துப் போய் நாமும் ஏன், இதே போல் ஒரு சிவாலயத்தை மிகப்பிரமாண்டாக எழுப்பக்கூடாது என்று தன்னுடைய மனதில் கேள்வியை எழுப்பினான். அதற்கு பதிலாக தோன்றியதே தஞ்சை பெருவுடையார் என்னும் பிரகதீஸ்வரர் ஆலயம்.



 ராஜராஜன் வியந்த கோவில் தான் படையெடுத்துச் சென்ற நாடுகளில் கண்ட சிற்பக்கலையில் கவரப்பட்டு அதை எல்லாம் சேர்த்து வைத்து ஒரு உன்னதமான கலைப்பொக்கிஷத்தை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி, முனைப்புடன் இந்த கோயிலை ராஜ ராஜன் உருவாக்கி இருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

அதோடு, பல்லவ மன்னனான ராஜ சிம்மனால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிலாதநாதர் கோயிலின் கட்டமைப்பும், சிற்ப வேலைப்பாடுகளும் ராஜ ராஜ சோழனின் மனதை பெரிதும் கவர்ந்தன.



தலையாட்டி பொம்மையும்..!! தஞ்சை பெரியகோவிலும்..!!
தலையாட்டி பொம்மைக்கும் தஞ்சை பெரியகோவிலுக்கும், தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ??
இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க !
களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை !
கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது
அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள்
அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !
இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!
நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!
தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது.
அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.
சாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.
கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை கொண்டு அடியில் நிரப்பியிருக்கிறார்கள்.
இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் போர் போடும் வேலையை உடனடியக நிறுத்திவிட்டார்கள் !
ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி , நான்குபுறமும் அகலிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் !
இவ்ளோ பெரிய கோவிலுக்கு மணலை கொண்டு அஸ்திவாரம் அமைக்க சோழ தேச பொறியாளர்கள் என்ன முட்டாளா?
அந்த அதி அற்புத தத்துவமும், சோழர்களின் அறிவின் உச்சமும் அங்குதான் வெளிப்படுகிறது !
அகலிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது !
இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.
அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !

சோழ தேச விஞ்ஞானிகளின் அறிவிற்கு உலகில் வேறு எவரும் ஈடாகார் என்பதற்கு இது ஒன்று மட்டுமே சான்று



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths