லேபிள்கள்

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

"ரிப்போர்ட்களை நம்பி வாழாதே. உடலை உணர்ந்து வாழு."

 


“வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்தால் பாதுகாப்பு”

என்று சொல்லிக் கொண்டிருக்கும்

இந்த படித்த சமூகம்

ஒரு நிமிடம் நின்று யோசிக்க வேண்டும்.


நாக்பூரைச் சேர்ந்த ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.

வயது 53.

முழு உடல் நலத்துடன் இருந்தவர்.

மாரடைப்பு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே முழு இதய பரிசோதனை.

ஈசிஜி ரிப்போர்ட் —

“இதய நோய் இல்லை.”

ஆனால்…

அடுத்து மூன்று நாட்களில்

மாரடைப்பு. மரணம்.


இப்போது சொல்லுங்கள்.

அந்த “முழு உடல் பரிசோதனை”

எங்கே போனது?


 மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை நம்பி

வாழ்க்கையை நகர்த்தக் கூடாது.


இதை சொன்னால் அறிவுக்கு எதிரானவனா?


ஒரு ரிப்போர்ட்

மன அழுத்தத்தை அளவிடுமா?


உயிராற்றல் சரிவை காட்டுமா?


நரம்புகளில் தேங்கி இருக்கும் பதற்றத்தை சொல்கின்றதா?


உடலுக்குள் மெல்ல உருவாகும் அபாயத்தை

“நார்மல் ரேஞ்ச்” பிடிக்குமா?


இல்லை. ஒருபோதும் இல்லை.


“எல்லாம் நார்மல்”

என்று ஒரு காகிதம் சொன்னதற்காக

சோர்வையும்,

தூக்கமின்மையையும்,

மூச்சுத் திணறலையும்,

மார்பில் வரும் இறுக்கத்தையும்

புறக்கணிப்பதே

இன்றைய படித்த அறியாமை.


உடல் தினமும் பேசுகிறது.

ஆனால்

நாம் ரிப்போர்ட்டை மட்டும் கேட்கிறோம்.


மருத்துவ பரிசோதனை —

ஒரு கருவி.

தீர்ப்பாளன் அல்ல.


"ரிப்போர்ட்களை நம்பி வாழாதே.

உடலை உணர்ந்து வாழு."


உணவு, உறக்கம், இயக்கம், மூச்சு, மனநிலை

இவற்றை கவனிக்காதவன்

வருடத்திற்கு ஒரு முறை

எத்தனை பரிசோதனை செய்தாலும்

அது பாதுகாப்பல்ல —

அது மயக்கம்.


உடலே மருத்துவர்.

அதை புறக்கணித்து

அறிக்கைகளை நம்பி வாழ்க்கையை நகர்த்துவது

அறிவல்ல —

அபாயம்.


கு.நா. மோகன்ராஜ்

மரபு வழி தொடு சிகிச்சையாளர்

Founder of Happy and Healthy Life Solutions.

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths