நலவாழ்வியல் சிந்தனைகள்!!
🟤🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟤
🌗சொன்ன உடன் புரிந்து கொள்ளவில்லை என்று சலிக்கும் நாம், மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு சொன்னோமா என்று யோசிப்பதில்லை.
🌗தூரத்தில் இருந்து பார்த்து நல்லவரா, கெட்டவரா என்று கணிப்பதை விட, பழகிப் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.
🌗மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாக சிந்தித்து முடிவு எடுப்பது. ஆனால் அதை அப்படியே செய்யாமல் மாற்று வழியில் செல்வதே பிரச்சினை வரக் காரணம்.
🌗நடந்தவற்றை மறந்து விடுங்கள். வாழ்வும், தாழ்வும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நல்லதை செய்து கொண்டே வந்தால், விரைவில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
🌗வலி, வேதனை, வருத்தம், துன்பம் எல்லாம் விதியின் விளையாட்டு. சமாளிக்க பழகினால், இறைவன் அருளால் இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் எல்லாம் கிடைக்கும்.
🟤🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟤
நல்லதே நினை.
நல்லதே நடக்கும்.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக