லேபிள்கள்

ஞாயிறு, 29 ஜூன், 2025

இறைவனும் உண்மையும் ஒன்றாகும்

 

நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர். 

பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும்.

 ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

தளர்வும், சோர்வும், சலிப்பும் முதுமையை விளைவிக்கிறது என்றால், உறுதியும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.

உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்.

உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். 

ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். 

பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும். 

மனம் சலிக்காமல்


இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும். பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.

வாழ்க வளமுடன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...