The Maryam Mirzakhani
New Frontiers Prize is an annual prize for outstanding women mathematicians who have
recently completed their PhD.
It consists of a
monetary award of $50,000. The prize was awarded together with the Breakthrough Prize 2025
at a red carpet gala ceremony in Los Angeles on April 5th 2025, and has as
founding sponsors Sergey Brin, Priscilla Chan and Mark Zuckerberg, Julia and
Yuri Milner, and Anne Wojcicki. Rajula Srivastava received her award from Drew
Barrymore and Ke Huy Quan.
Rajula Srivastava is a Hirzebruch Research Instructor, and hence a
scientist at both the Mathematical Institute of the University of Bonn and the
Max Planck Institute for Mathematics (MPIM) in Bonn.
Her research is at the intersection of harmonic analysis and number
theory. Her results on bounding the number of lattice points existing near a
given smooth surface have important application to Diophantine approximation in
higher dimensions.
In the autumn she is going to return to her Alma Mater, University of
Wisconsin–Madison, as a tenure-track assistant professor.
ராஜுலா
ஸ்ரீவஸ்தவா, ஹார்மோனிக் பகுப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு எண் கோட்பாட்டில் தனது பணிக்காக
2025 ஆம் ஆண்டில் கணிதத்தில் திருப்புமுனை பரிசின் ஒரு முயற்சியான மரியம் மிர்சகானி
நியூ ஃபிரான்டியர்ஸ் பரிசை வென்றார்.
கணிதம் பலருக்கு வேப்பங்காய்.
ராஜுலா ஸ்ரீ வாஸ்தவாவுக்கு அது தித்திக்கும் மலைத் தேன். உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் மசூரியைச் சேர்ந்தவர் இவர்.
சிறு வயதில் இருந்து கணிதம்தான் இவருக்கு விருப்பப் பாடம். ஏனென்றால், கணிதக் கருத்துருவாக்கத்தைப் புரிந்துகொண்டால், மழலையர் பள்ளியில் பெருக்கல் அட்டவணையைத் தவிர்த்து வேறு எதையும் மனப்பாடம் செய்யத் தேவையில்லை என்கிறார்.
ராஜுலா ஸ்ரீவாஸ்தவா, ஹார்மோனிக் பகுப்பாய்வு - பகுப்பாய்வு எண் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்புக்காக ‘மரியம் மிர்சாகானி நியூ ஃபிரான்டியர்ஸ் பரிசு’ பெற்றுள்ளார். கணிதத் துறையில் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது இது. ‘அறிவியல் ஆஸ்கார்’ என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது. ஹார்மோனிக் பகுப்பாய்வு என்றால் என்ன?
ஹார்மோனிக் பகுப்பாய்வு என்பது வெவ்வேறு அலை வடிவங்களில் உள்ள ஒலிகள், அலைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கான கணிதக் கருவியாகும். இது இசை அலைகளின் ஆராய்ச்சியில் தொடங்கி, கணிதவியல், இயற்பியல், எண் கோட்பாடு (number theory) முதலான பல்துறைகளில் பயன்படுகிறது.
இந்த இரண்டு துறைகளில் கூட்டு பணியாற்றி, குறிப்பாக சீரான பகுப்பாய்வு, பகுப்பாய்வு எண் கோட்பாட்டிற்கான திறந்த கோட்பாடுகளில் முக்கிய பங்களிப்புகளை அவர் செய்துள்ளார். அதுவே, இந்த விருதை பெற்றுத் தந்துள்ளது.
சரி! கணிதம் அவ்வளவு எளிமையானதா? அவரது கூற்றைப் படிக்கும் எவரும் 'ஆம்' என்பர். " நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். கணிதப் புதிருக்கான தீர்வு குறித்து யோசிக்க ஆரம்பித்தால் போதும். உங்களிடம் பேனாவும் காகிதமும் இருந்தால் போதும். ஒருவேளை உங்களுக்கு ஒரு கரும்பலகையும் சாக்பீஸும் தேவைப்படலாம்." என்கிறார் ஸ்ரீவாஸ்தவா.
கணிதப் புதிருக்கு விடை காண்பது அவருக்குத் தியானம் செய்வதைப் போன்றது. கணித ஆய்வு என்பது ஒரு கதை அல்லது கவிதை எழுதுவதைப் போன்றது என்கிறார். நாமும் பேனாவும் காகிதமும் எடுத்து கணிதத்தை எழுதத் தொடங்குவோமா?
15 வயதில், அவர் ஒரு கணிதவியலாளராக வேண்டும் என்று முடிவு செய்து, புவனேஷ்வரில் உள்ள NISER-ல் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டம் பெற்றார், அங்கு அவர் கணிதத்தில் முதன்மைப் பாடம் பயின்றார்

Proud and inspiring. Let us encourage more youngsters to maths field.
பதிலளிநீக்குThere are many such genious let us bring to light.
பதிலளிநீக்கு